Thursday, October 29, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 4

 

விவேக் வீட்டில் சாப்பிட்ட திருப்தியான சாப்பாட்டிலும், அரவிந்தனின் அன்பான நம்பிக்கை தந்த வார்த்தைகளிலும், காலையிலிருந்து வீட்டை ஒழுங்குபடுத்திய களைப்பிலும் காவ்யா படுத்ததும் உறங்கிப்போனாள்.

இன்னும் தூக்கம் வராமல், அவள் தலையை வருடிக்கொடுத்தவாறே  மங்கலான நைட் லாம்பின் வெளிச்சத்திலும் அழகாய் தெரிந்த அவள் முகத்தை ரசித்துக்கொண்டிருந்த அரவிந்த், அவள் பேசிய பேச்சையும் அவளது அழுகையையும் நினைத்து சிரித்துக்கொண்டான்.

இந்த பெண்களுக்கு மட்டும் பொசசிவ்நெஸ் எங்கிருந்ததுதான் வருகிறதோ.. அதுவும் இவளுக்கு கொஞ்சம் அதிகம் தான் என்று எண்ணியவன் காதல் மிகுதியில் சற்றே அழுத்தமாய் அவள் கன்னத்தில் முத்தமிட சட்டென்று விழித்துக்கொண்டவள்   அவனது முத்தத்தை உணர்ந்து "என்ன அத்தான்.. தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க " என்றாள் வெட்கசிரிப்போடு.

"ஹ்ம்ம்..  என் அழகு தேவதையை ரசிச்சிட்டு இருக்கேன்.." என்றவன் "காவ்யா.. தூங்கறப்போகூட நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா?" என்றான் கிசுகிசுப்பாய்..

"அப்படியா.. நான் அவ்ளோ அழகா.. உங்களை சைட் அடிச்சாங்கல்ல அவங்க எல்லாரையும் விட நான் அழகா?" என்று தலையை சாய்த்து அழகாய் அவள் கேட்க,  சிரித்தவாறே அதை ரசித்தவன்  "ஆரம்பிச்சுட்டாயா.. அவங்க என்னை சைட் அடிச்சாலும் நான் இந்த அழகான ராட்சஷியத்தானே சைட் அடிச்சேன்.. சோ எனக்கு அவங்க அழகெல்லாம் கண்ணுக்கு தெரியலையே " என்றான் அவள் மூக்கை பிடித்து கொஞ்சிக்கொண்டே.

"அத்தான்.. ப்ளீஸ் சொல்லுங்க.. உங்க கலீக் மோனா என்னைவிட அழகா இருப்பாங்களா?" என்றாள் கெஞ்சலாக.

மோனாவை பற்றி கேட்டதும் முகத்தில் சிரிப்பு தொலைந்து போக ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து உட்கார்ந்தான். அவனது முகமாற்றத்தை கண்டவள் சற்றே கவலையுடன் தானும் எழுந்து உட்கார்ந்தவாறே "சாரி அத்தான் .. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன்.. தப்பா எடுத்துக்காதீங்க.. நான் இனிமே கேட்கமாட்டேன்" என்றாள்.

அவள் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக்கொண்டவன்  "இல்ல காவ்யா.. உன் மேல எந்த தப்பும் இல்ல.. நான் நெனச்சதுதான் தப்பு.. நீ என்னை அளவுக்கு அதிகமா நேசிக்கறதுனால எதுக்கு தேவை இல்லாம இங்க நடந்ததை சொல்லி உன்னை கஷ்டப்படுத்தணும்னு நெனச்சேன்.. but that is not right thing .. நீ என் காதலி மட்டும் இல்ல .. என் மனைவி.. என்னோட பாஸ்ட் எல்லாத்தையும் நான் உன்கிட்ட கண்டிப்பா ஷேர் பண்ணியே ஆகணும்.. இல்லனா இன்னிக்கு கயல் அக்கா .. நாளைக்கு வேற யாராவதுன்னு உனக்கு யார் மூலமாவோ விஷயம் தெரியறப்போ அது உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தும் .. " என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

என்ன சொல்லபோகிறானோ என்ற பயம் அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிய அதை கவனித்தவன் "காவ்யா நீ பயப்படற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல.. சரியா? ஒண்ணு மட்டும் நீ நல்லா தெரிஞ்சிக்கோ.. எந்த நேரத்திலும் நான் உன்  அத்தானாதான் இருந்திருக்கேன்.. உன் இடத்துல நான் எந்த பொண்ணையும் வச்சதில்ல.. இது எங்கம்மா மேல சத்தியம் " என்றதும் "அத்தான்.. நான் உங்கள நம்புறேன்.. ஏன் சத்தியமெல்லாம் பண்றீங்க? இப்பகூட நீங்க இதெல்லாம் எனக்கு தேவையில்லன்னு நினைசீங்கன்னா சொல்ல வேண்டாம்.. எனக்கு எப்பவும் நீங்க நல்லதுதான்  பண்ணுவீங்க  அத்தான் .. எனக்கு தெரியும். கயல் அக்கா சொன்னதும் எதோ எமோஷனல் ஆகி உங்ககிட்ட கேட்டுட்டேன்.. அது பெரிய தப்பு அத்தான்.. உங்கமேல நான் எவ்ளோ நம்பிக்கையும் மரியாதையும் வச்சிருக்கேன்.. எல்லாத்தையும் ஒரே நிமிசத்துல கெடுத்துட்டேன்.. "என்றவாறே மெலிதாய் தலையில் அடித்துக்கொண்டாள்.

"ஹே காவ்யா.. நீ கேட்டதுதான் சரி.. உனக்கும் எனக்கும் நடுவுல எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது.. உனக்கு என்கிட்ட என்ன கேட்கணும்னு தோணுதோ அத கேட்கலாம். கயல் அக்காக்கு நம்மள பத்தி தெரியாது.. ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் நம்மள பத்தி தெரியும்.. நீ எனக்கு கிடைக்க மாட்டியான்னு பலநாள் தூங்காம தவிச்சவன் நான்.. நம்ம கல்யாணம் ஆனதும் எதோ கிடைக்காத பொக்கிஷம் கிடைச்ச மாதிரி நான் அவ்ளோ சந்தோசமா இருக்கேன்.. அது உனக்கும் தெரியும்.. நீ அழுததுகூட  நான் ஏன் மோனா பத்தி உன்கிட்ட     சொல்லலைன்னு தானே தவிர என்மேல சந்தேகப்பட்டு இல்ல .. அதுவும் எனக்கு தெரியும்" என்றவனின் தோளில் சாய்ந்தவள் " தேங்க்ஸ் அத்தான் என்னை சரியா புரிஞ்சிகிட்டத்துக்கு " என்றாள்.

வசதியாய் அவளை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு "ஓகே .. இப்போ உனக்கு தெரிய வேண்டிய சீக்ரெட்ஸ் எல்லாம் சொல்லிடுறேன். நான் சொன்ன மாதிரி சுமதி பத்தி மொதல்ல சொல்றேன்.. அவ வீடு எங்க பக்கத்து வீடுதானே.. எப்பல்லாம் நான் வீட்ல இருக்கேனா அப்போல்லாம் அம்மாட்ட பேச வரமாதிரி வருவா.. அம்மா பாக்காதப்போ என்னை பாத்து லுக் விடுவா.. நான் டெல்லில படிக்கறபோ ஒரு தடவை லீவ்க்கு வீட்டுக்கு வந்திருந்தேன்.. ஒருநாள் அவளைக்கூப்பிட்டு 'சுமதி, அண்ணனுக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்.. காவ்யாக்கு பர்த்டே வருது.. அவளுக்கு கிப்ட் வாங்கணும்.. நீ வந்து ஒரு மேக்கப் செட் செலக்ட் பண்ணி தரியா' ன்னு கேட்டேன். கடுப்பாகி அதுக்கப்பறம் வீட்டுப்பக்கமே வரமாட்டா.. அதுக்கப்பறம் அவளுக்கு கல்யாணமும் ஆகிடிச்சி.." என்றதும் இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.

"ஹ்ம்ம் அப்பறம் " என்று ஆர்வமாய் கேட்டவளை "ஆர்வத்தை பாரு .." என்று செல்லமாய் தலையில் குட்டியவாறு "அப்பறம் டெல்லில ஒரு பஞ்சாபி பொண்ணு.. பேரு தீப்தி..நாங்க boys girls எல்லாம் கலந்து  ஒரு குரூப்பா friends ஆ இருந்தோம்.. திடீர்னு ஒருநாள் "உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. டேட் பண்ணலாமான்னு" கேட்டா..அவகிட்ட 'சாரி I am committed’ ன்னு  சொன்னேன்.. ரெண்டு நாள் dulla  இருந்தா.. அப்பறம் பத்து பதினைஞ்சி நாள்ல  வேற department பையனை கூட்டிட்டு வந்து this is my boy friend ன்னு சிரிச்சிட்டே சொன்னா.. எனக்கும் நிம்மதியா  இருந்திச்சி..” என்று நிறுத்தியவன் அதே நிம்மதியை அவளது முகத்திலும் கண்டான்.

"அதுக்கப்பறம் MS படிக்கிறப்போ சோபியான்னு ஒரு இத்தாலி பொண்ணு.. ரொம்ப இன்னொசென்ட்.. எனக்கு அவளை பாக்கறபோ உன்னோட இத்தாலி வெர்சன்னு தோணும்.. எப்ப பாத்தாலும் சிரிச்சிட்டே இருப்பா.. எனக்கு அவளை பாத்தா எதோ குழந்தையை பாக்கற மாதிரி தான் தோணும்.. பாவம் டிசம்பர் ஹாலிடேய்ஸ்க்கு அவங்க ஊருக்கு போனவ ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டா.. ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.. கொஞ்ச நாளைக்கப்பறம் அவ கிளோஸ் friend தான் சொன்னா கோர்ஸ் முடியறப்போ என்ன ப்ரொபோஸ்  பண்ண  போறதா சொல்லியிருக்காளாம் “ சற்றே சோகமாய் அவன் சொல்ல காவ்யாவின் கண்கள் கலங்கியிருந்தன.

"பாவம் இல்ல அத்தான் அந்த பொண்ணு.." என்று அவனை இறுக்கிக்கொண்டாள்.

"ஹ்ம்ம்.. அவ மேல எனக்கு லவ் இல்லேன்னாலும் அவ இறந்தது எனக்கு ரொம்ப ஷாக்கிங்ஆ இருந்திச்சி.." என்றவன் "சரி காவ்யா .. ரொம்ப லேட் ஆகுது.. தூங்கலாமா?" என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் "அத்தான் மோனா பத்தி சொல்லவே இல்ல?" என்றாள் தயக்கத்துடன். அவளை பொறுத்தவரை மற்றவர்களை விட மோனா பற்றித்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற பயம் இருந்தது.

ஆழ்ந்த பெருமூச்சுடன் "ஹ்ம்ம்.. இந்த மோனா மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல .. அவங்க எல்லாமே  சின்ன பொண்ணுங்க..  எனக்கு interest  இல்லன்னு தெரிஞ்சதும் விட்டுட்டாங்க..  ஆனா இந்த மோனா ரொம்ப வித்தியாசமானவ. மோனா வாசுதேவன். டெல்லில செட்டில் ஆன தமிழ் குடும்பம். சிவகாமி அத்தை வாங்குன சத்தியதால நான் ரொம்ப மனசு ஒடஞ்சி தான் US ல வந்து இறங்குனேன். அப்போ இந்த டீம் ஏற்கனவே இங்க இருந்திச்சி.. டீம்ல நான்தான் ரொம்ப ஜுனியர்.. ரகு கூட எனக்கு அப்போ ரொம்ப பழக்கம் இல்ல.. friends  யாரும்   இல்லாம உன்கிட்டயும் பேச முடியாம ஒர்க் லோடும்   ரொம்ப இருந்ததால ரொம்பவே  கஷ்டப்பட்டேன்.    இந்த மோனா ஒரு ஆறு மாசம் கழிச்சி  எங்க டெல்லி ஆபீஸ்ல இருந்து இங்க வந்திருந்தா.. ரகு சொன்னதால அவளுக்கு ஜாய்னிங் பார்மாலிட்டீஸ்ல எல்லாம் கூட இருந்து ஹெல்ப் பண்ணேன். பொதுவா எங்க போனாலும் பொண்ணுங்ககிட்ட நான் ரொம்ப பேசறதில்லை. எப்பவும் நீ என் மனசுல இருந்ததாலயும் அம்மாக்கும் நான் உன்னை கல்யாணம் பண்றதுதான் சந்தோஷம்னு  தெரிஞ்சதாலயும் யார்கிட்டயும் ரொம்ப பேசறதில்ல. ஆனா இவகிட்ட அடிக்கடி பேசறமாதிரி நிறெய சிச்சுவேஷன்ஸ் அமைஞ்சது.

அவளுக்கு என்னை பிடிக்க ஆரம்பிச்சதுன்னு நான் எப்போ பீல் பண்ணேனோ அப்பவே உன்னை பத்தி அவகிட்ட சொல்லிட்டு கொஞ்சம் விலக ஆரம்பிச்சுட்டேன்.. ஆனா அவளால அத தாங்க முடியல.. கொஞ்ச நாள் அமைதியா இருந்தவ திடீர்னு ரகு கிட்ட  வந்து ப்ராஜெக்ட் ல இருந்து என்ன ரிலீஸ் பண்ணுங்க.. நான் இந்தியா போறேன்னு சொல்லியிருக்கா.. ரகு திடீர்னு அந்த மாதிரி அனுப்ப    முடியாது  இன்னும் six மந்த்ஸ் இருந்து முடிச்சிட்டு போங்கன்னு சொல்லிட்டாரு.. அப்பறம் ஒருநாள் என்கிட்ட கேன்டீன்ல வச்சி அழுதுகிட்டு  உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நீ இல்லனா நான் செத்துடுவேன்னு சொன்னா.. எனக்கு கோவம்  வந்தாலும் அவளை பாக்க ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.. அதனால திரும்பவும் அவகிட்ட உன்னை பத்தி    விளக்கமா சொன்னேன்.. நான் இல்லன்னா நீயும்  அப்படித்தான்  ஆவேன்னு  சொன்னேன்.. அப்பறம் கோவமா எழுந்து போய்ட்டா.. ரெண்டு நாள் ஆஃபீஸுக்கு வரல.. அடுத்த நாள் நைட் ரகு கிட்ட  இருந்து phone வந்தது.. மோனா suicide    அட்டெம்ப்ட் பண்ணி ஹாஸ்பிடல்ல இருக்கான்னு. எனக்கு ரொம்ப கில்டியா இருந்திச்சி.. நானும் ரகுவும் உடனே ஹாஸ்பிடல் போனோம்.. ரகு வைஃப்பும் வந்தாங்க.. அவங்ககிட்ட எல்லாமே சொல்லியிருப்பா போல.. அப்பறம் அவ டிஸ்சார்ஜ் ஆகி வந்ததும் ரகுவும் அவங்களும் என்னையும் மோனாவையும் கூப்பிட்டு பேசுனாங்க.. நான் பிடிவாதமா காவ்யாவை தவிர யாரையும் யோசிக்க முடியாது .. சாரின்னு சொல்லிட்டேன்.. அப்பறம் ரகு மோனாகிட்ட எடுத்து சொல்லி அவ பேரன்ட்ஸ்கிட்டயும் பேசி அவளை ப்ரொஜெக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ணிட்டாரு. அவளும் ஊருக்கு போய்ட்டா”  என்று நிறுத்தியவன், முகத்தில் கலவரத்துடன் இருந்தவளை "ஹே காவ்யா.. இப்ப ஒண்ணும் ப்ராப்ளேம் இல்ல.. நான் நம்ம என்கேஜ்மெண்ட்க்கு ஊருக்கு வந்தேன்ல..அந்த டைம்ல அவளுக்கு மேரேஜ் ஆகிடிச்சி.. இப்போ 2  வீக்ஸ் முன்னாடி  ஒரு short term ப்ரொஜெக்ட்க்கு இங்க வந்திருக்கா போல.. பட் அவ நியூயார்க் ஆபீஸ்... எனக்கு நியூஜெர்சி ஆபீஸ்.. அதனால எனக்கும் அவளுக்கும் meet பண்ண கூட  அவசியம்   இல்ல.. அதுவில்லாம இப்போ  நிலைமை  வேற.. நமக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.. அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. இதெல்லாம் எதுவும் சொல்லாம கயல் அக்கா மோனா இங்க இருக்கான்னு மட்டும் சொல்லியிருப்பாங்க.. அப்போ உனக்கு கஷ்டமாதான் இருந்திருக்கும்.." என்றவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு “காவ்யா, நானும் நீயும் சேர்றதுக்கு எத்தனை  தடைகள் பாத்தியா.. எல்லாத்தையும்  மீறி நம்ம கல்யாணம் நடந்திருக்கு..இதோட அர்த்தம் நம்ம நல்லபடியா வாழறதுலதான் இருக்கு காவ்யா.. எந்த சூழ்நிலையிலும் நீ எது பண்ணாலும் அது கரெக்ட்ஆ தான்  இருக்குன்னு நான் 100% நம்புறேன் .. எப்பவும் நம்புவேன்.. அதேமாதிரி நீயும் நான் எது பண்ணாலும் அது கரெக்ட் ஆ இருக்கும்னு நம்பு.. உன் நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி நானும் நடந்துப்பேன்.. உனக்கு தெரியாத என் வாழ்க்கையோட பக்கங்களையும் சொல்லிட்டேன்.. இத தவிர வேற எதுவும் இல்ல.. happy ஆ இப்போ"  என்ற ஆசை  கணவனை  அன்போடு  நெற்றில் முத்தமிட்டாள் காவ்யா.

பெண்கள் மயங்கும் பேரழகன் தன் அத்தான் என்பது அவளை   பெருமையடைய செய்தாலும் சற்றே கலக்கத்தையும் தந்தது.. ஆனாலும்  எத்தனை பெண்களை கடந்து வந்தாலும் தன்மீது உள்ள அன்பு துளியும் குறையாமல் தன்னை மட்டும் நேசிப்பவன் மீது காதல் இன்னமும் கூடத்தான் செய்தது அவளுக்கு.

"நீ லக்கி காவ்யா.. உனக்கு இந்த மாதிரி problems வந்தது இல்ல ரைட்? நீ படிச்சது எல்லாம் girls ஸ்கூல்ஸ் ..காலேஜ் கூட பெரியார்  மணியம்மை.. கேர்ள்ஸ் காலேஜ். அப்பறம் திருவிழா ஷாப்பிங் எல்லாம் குடும்பமா போவீங்க.. மாமாங்க ரெண்டு பேரையும் பாத்தாலே பசங்க தெறிச்சி ஓடிருவாங்க.. அதான் பாவம் நீ என்கிட்ட வந்து  மாட்டிக்கிட்ட" என்று சிரித்தவனோடு அவளும் சேர்ந்து சிரித்துக்கொண்டு "இல்ல அத்தான்.. கொஞ்ச நாள் ஹேமாவோட அண்ணன் என்னை சுத்தி சுத்தி வந்திட்டு இருந்தான்.. அவளை காலேஜ்ல ட்ராப் பண்றபோ,  பிக்கப் பண்ண வரப்போ என்னைப்பாத்து ஒரு மாதிரி சிரிப்பான்.. ஒருநாள் அவன்கிட்ட நானும் எங்க அத்தை பையனும் அலைபாயுதே ஸ்டைல்ல வீட்டுக்கு தெரியாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஹேமாக்கு  கூட தெரியாதுன்னு சொன்னேன்.. அரண்டு போய்ட்டான்” என்று பலமாய் சிரித்தவளை "அடிப்பாவி..பாவம் அவன்.. சரியான ஆளு நீ  " என்று தானும் சேர்ந்து சிரித்தான்.

மனதில் உள்ளதை அவளிடம் கொட்டிவிட்ட திருப்தியில் அரவிந்தும் தன் மீது அவனுக்குள்ள பரிசுத்தமான அன்பும் காதலும் தந்த திருப்தியில் காவ்யாவும் மனம்விட்டு பேசி சிரித்து பின்னர் களைத்து பின்னிரவில் உறங்கிப்போயினர்.

 

Sunday, October 25, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 3

 

சூட்கேசுகளை ஒன்றொன்றாய் பிரித்து, கொண்டு வந்த  பொருட்களை அதற்குரிய இடங்களில் அழகாய் அடுக்கி வைத்தாள் காவ்யா. அம்மாவும் அத்தையும் கொடுத்தனுப்பிய சாமி படங்களையும் பூஜை சாமான்களையும் இரண்டு பெட்ரூம்களில் சிறியதாக இருந்த ஒன்றில் ஒரு கப்போர்டில் அழகாய் அலங்கரித்து வைத்தாள்.

கையோடு கொண்டு வந்திருந்த தஞ்சாவூர் ஓவியங்களையும் காவ்யா வரைந்த  ஓவியங்களையும் அழகாய் ஹாலில்  இருவரும் சேர்ந்து நல்ல இடமாய் பார்த்து மாட்டினர். சமயலறைக்கு தேவையான பொருட்களையும் அடுக்கி வைத்தவள் இன்னும் வாங்கவேண்டியவற்றையும் குறித்துக்கொண்டாள். அவர்கள் உடைகள் அனைத்தையும் பெட்ரூம்களில் உள்ள கிளாஸ்ட்களில் இருவரும் கதைகள் பேசிக்கொண்டு அடுக்கிவைத்தனர்.

இரண்டு வருடங்களாக அவன் தங்கியிருந்த வீடு திடீரென மிகவும் அழகாக தோன்றியது அரவிந்தனுக்கு. "காவ்யா.. நீ என் வாழ்க்கையில வந்ததும் என் வாழ்க்கை எப்படி அழகா மாறிடிச்சோ, அதேமாதிரி நீ வந்ததும் இந்த வீடே அழகா மாறிடிச்சி" என்று அவள் கன்னத்தை செல்லமாய் பிடித்து கொஞ்சிக்கொண்டே சொன்னவன் போன் வரவும்  

 "ஒரு நிமிஷம்டா.. விவேக் கால் பண்றாரு.. பேசிட்டு வந்துடுறேன் " என்றுவிட்டு எடுத்து பேசினான். விவேக் அரவிந்தைவிட ஏழேட்டு வயது மூத்தவன்.  திருமணமாகி இரு குழந்தைகளுடன் அமெரிக்கா வந்து ஆறு மாதங்கள் ஆகின்றது.

"ஹாய் விவேக்.. சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க?" என்றான்.

"நான் என்னப்பா சொல்ரது.. நீதான் புது மாப்ள.. நீ எப்படி இருக்க"  என்றதும்

தன்னிச்சையாக வெட்கம் எட்டிப்பார்க்க "நான் நல்லா இருக்கேன்.. இன்னைக்குத்தான் கொஞ்சம் ஜெட்லாக் நார்மலா இருக்கு.. சோ திங்ஸ் எல்லாம்  அரேஞ் பண்ணிட்டு இருக்கோம்" என்றான்.

"சரிப்பா.. நாங்க இப்போதான் அட்லாண்டாலேர்ந்து வந்தோம்.. வந்ததும் உனக்குத்தான் கால் பண்றேன்.. நீங்க வர்ற நேரம் நாங்க ஊர்ல இல்லாம போய்ட்டோம்.. இப்போலேர்ந்து நீங்க செட்டில் ஆகுறவரை நம்ம வீட்லதான் சாப்பாடு.. காவ்யாவ கஷ்ட படவேணாமுன்னு சொல்லு.. கயல் ஏற்கனவே சொல்லிட்டா.. இன்னிக்கு நைட் டின்னருக்கு வந்திருங்கப்பா.. காவ்யாகிட்டயும் சொல்லிரு " என்றுவிட்டு  போனை வைத்தான்.

அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு, கூட வேலை பார்ப்பவர்களும் ஒரே கம்யூனிட்டியில் இருப்பவர்களும் தன் குழந்தைகளின் நண்பர்களின் குடும்பங்களும் ஒரே ஊர்காரர்களும் தான் சொந்தங்கள்.. ரத்த சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒருவருக்கொருவர் துணையாய் சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கெடுத்துக்கொள்வர்.

அரவிந்த் யூனிவெர்சிடியில் படிக்கும்போது அவனது நண்பர்கள் ஒரு பெரிய கூட்டமாய் இருந்தனர். பெரும்பாலானோர் கலிஃபோர்னியாவிலேயே செட்டில் ஆக, அரவிந்த் மட்டும் இந்தியாவில் வேலையில் சேர்ந்தான்.  ஆனால் விதி யாரை விட்டது.. அவனும் வேலை விஷயமாக அமெரிக்கா வரும்படி ஆனது. அவனது கிளையண்ட் ஆபீஸ் நியூயார்க் என்பதனால் அருகிலுள்ள மாகாணமான நியூஜெர்ஸியில் தங்கியிருந்தான்.

ரகு அவனுக்கு புதிய ப்ரொஜெக்ட்டை அசைன் செய்ததும் அதே வீட்டுக்கு  இன்னும் இரண்டு வருடங்களுக்கு லீஸை எக்ஸ்டெண்ட் செய்திருந்தான். அந்த கம்யூனிட்டி புதிதாய் கட்டப்பட்டிருந்தது... அதுவுமில்லாமல் lakeview எனப்படும் ஏரிக்கரை ஓரமாய் மரங்கள் சூழ்ந்து பார்ப்பதற்கும் மிகவும் ரம்மியமாய் இருக்கும். காவ்யாவுக்கும் மிகவும் பிடிக்கும் என நினைத்தான்.

அடுத்தடுத்த வீடுகளில் இந்திய குடும்பங்களும் அதிலும் நிறைய தமிழ் குடும்பங்கள் இருந்ததால் காவ்யாவுக்கு பேச்சுத்துணைக்கும் ஆள் இருக்கும் என்று அங்கேயே இருக்க முடிவு செய்தான். விவேக்கின் வீடு அதே கம்யூனிட்டியில்அடுத்த பிளாக்கில் இருந்தது.

ரகு மட்டும் கொஞ்சம் தள்ளி சிங்கள் பேமிலி ஹோம் எனப்படும் பெரிய வீட்டில் இருந்தான். அவன் கிரீன் கார்ட் ஹோல்டர் என்பதாலும் இங்கேயே செட்டில் ஆகும் பிளானில் இருப்பதாலும் கணவன் மனைவி இருவரும் பெரிய பதவிகளில் இருப்பதாலும் அவர்கள் வீடு பெரிதாகவே இருந்தது. இவர்கள் டீமில் எதாவது பார்ட்டி என்றால் மட்டும் ரகுவின் வீட்டில் வைத்து நடக்கும்.

 விவேக்கிடம் பேசிவிட்டுவைத்தவனிடம் "அத்தான் டீ சாப்பிடுங்க " என்றபடியே கைகளில் இரண்டு தேனீர் கோப்பைகளோடு வந்தவள் அவனிடம் ஒன்றை நீட்டினாள்.

காலையிலேயே குளித்து அழகிய வெளிர் மஞ்சள் நிற சுடிதாரில் லூஸ் ஹேரில் இருந்தவளை ரசித்துக்கொண்டே "என் அழகு பொண்டாட்டி.. இப்போதான் ஒரு டீ குடிச்சா நல்லா இருக்கும்னு நெனச்சேன். கையில டீயோட வர .." என்று கப்பை வாங்கிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட, வெட்கத்தோடு "அத்தான் காலைலேர்ந்து இது 59 வது முத்தம்.. இன்னும் இன்னைக்கு எத்தனை மிச்சமிருக்கு.. " என்று வேண்டுமென்றே அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

"அடிப்பாவி நான் ஆசையா குடுக்குற முத்தத்தை எண்ணிட்டா இருக்க.. நடுவுல கேப் விட்டாதான எண்ணுவ.. உன்ன " என்றவன் அவளை இழுத்து பிடித்து முத்தமழை பொழிந்தான்.

"ஐயோ அத்தான் பால்கனி டோர் திறந்திருக்கு .. யாராவது பாக்க போறாங்க " என்று அவள் உதடுகள் சொன்னாலும் மனம் அவனது குறும்பை ரசித்தது. அவள் கொண்டு வந்த சூடான இஞ்சி டீ கோப்பைகளில் ஆறி கொண்டிருந்தது.

ணி ஐந்தானதும் இருவரும் வெளியே கிளம்பினர். அந்த மெட்டாலிக் சில்வர் BMW வில் ஸ்டைலாக அமர்ந்து டிரைவ் செய்யும் கணவனை பெருமையோடு பார்த்தவள் அமெரிக்காவின் ரோடுகளையும் பச்சை பசேலென மரங்களையும் ரசித்துக்கொண்டே வந்தாள்.

சிறு குழந்தையின் உற்சாகத்துடன் அனைத்தையும் ரசித்துக்கொண்டு அவனோடு பேசிக்கொண்டு வந்தவளை காதலோடு பார்த்தவன் "காவ்யா.. நீ சந்தோஷமா இருக்கியா.. உன்ன நான் நல்லா பாத்துக்கிறேனே ?" என்றான் திடீரென.

சட்டென்று சிரிப்பு வடிந்து கண்கள் காதலை ஏந்திக்கொள்ள "ஏன் அத்தான் இப்படி கேக்குறீங்க.. என்னைவிட எந்த பொண்ணும் இவ்ளோ சந்தோசமா இருப்பாளான்னு எனக்கு தெரியல.. மனசுக்கு பிடிச்ச கண் நிறைஞ்ச புருஷன்..என்னை அவங்க பொண்ணா நெனச்சி தாங்குற அத்தை மாமா, என் மேல உயிரையே வச்சிருக்கிற அம்மா அப்பா தாத்தா பாட்டி இன்னும் வேற என்ன அத்தான் ஒரு பொண்ணுக்கு வேணும்.. நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.. என் வாழ்க்கை முழுசும் உங்களுக்கு நல்ல மனைவியா இருக்கணும்.. அது மட்டும் தான் என் மனசுல ஓடிட்டு இருக்கு "  என்றாள்.

"கேட்கவே சந்தோசமா இருக்கு காவ்யா.. ஆனா எப்பவும் எதுக்காகவும் என்கிட்ட தயங்காத.. இந்த கல்யாணம் தாலி புருஷன் பொண்டாட்டி எல்லாமே இந்த உலகத்துக்காகத்தான்.. மத்தபடி நான் எப்பவும் உன்னோட அதே அத்தான் தான்.. நீ என்ன நினைக்கிறாயோ அத பண்றதுக்கு உனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு..எனக்காக நீ எதையும் மாத்தக்கூடாது எதையும் இழக்கக்கூடாது .. சரியா?" என்றவன் ஒரு கையால் டிரைவ் செய்துகொண்டே மறுகையை அவளது கையோடு கோர்த்துக்கொண்டான்.

து நியூஜெர்ஸியின் பெரிய மால். மிகவும் பிரமாண்டமாய் நூற்றுக்கணக்கான கடைகள் அணிவகுத்து நிற்க அங்கு கிடைக்காதவையே இல்லை என்ற அளவுக்கு அனைத்து உயர்தர பொருட்களும் குவிந்து கிடந்தன. பார்த்து பார்த்து அமெரிக்க வாழ்க்கைக்கு அவளுக்கு தேவையான பொருட்களை தேடி தேடி வாங்கினான். ஒவ்வொன்றயும் பார்த்து ஆச்சர்யபட்டவளுக்கு அனைத்தையும் விளக்கிச்சொன்னான். விவேக் வீட்டிற்கு டின்னருக்கு போவதால் அவன் குழந்தைகளின் வயதுக்கேற்ப விளையாட்டு பொருட்களையும் சாக்லேட்டுகளையும் வாங்கிகொண்டவனை ஆசையாய் பார்த்தாள் காவ்யா. எத்தனை பக்குவம் இந்த வயதில் இந்த அத்தானுக்கு என்று அவனை அணைத்துக்கொண்டு கைகள் கோர்த்து நடந்தாள்.

தன் ஆசை மனைவி தன்னோடு கைகோர்த்து நடப்பது புது தெம்பைதர ஏனோ அவனுக்கு அவள் வரைந்த அவனது ஓவியம் நினைவுக்கு வந்தது. ஆம்.. மனைவின் அன்பை வென்றவன் உண்மையில் ராஜகுமாரன்தான் என்று நினைத்து சிரித்துக்கொண்டவன் கம்பீரமாய் உணர்ந்தான்.

விவேக்கின் வீட்டில் நுழையும்போது மணி எட்டாகியிருந்தது. விவேக் கதவைத்திறந்து "வாங்க வாங்க " என்று முகமெல்லாம் சிரிப்போடு வரவேற்க உள்ளேயிருந்து வேகமாக வந்த விவேக்கின் மனைவி கயல்விழி, "வாங்க புது பொண்ணு புது மாப்பிள்ளை" என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள். கதவை திறந்ததும் ரசத்தின் வாசம் மூக்கைத்துளைக்க காவ்யாவுக்கு எங்கோ தமிழ்நாட்டில் நுழைவதைப்போலிருந்தது.

அரவிந்த் ஸ்நேகமாய் சிரித்துக்கொண்டே "அக்கா எப்படி இருக்கீங்க.. அப்பறம் இதுதான் காவ்யா.. காவ்யா .. இவங்க தான் விவேக் அண்ட் கயல்விழி அக்கா. " என்று அறிமுகப்படுத்தினான். பட்டென்று "காவ்யா .. நீ என்னமா அழகா இருக்க.. இந்த அரவிந்த் இவ்ளோ ஸ்மார்ட்டா இருக்காப்லயே.. பொண்ணு எப்படி இருக்குமோன்னு நெனச்சேன்.. நீதான் தம்பியைவிட சூப்பரா இருக்க" என்று வெள்ளந்தியாய் சொன்னவள் "உள்ள வாம்மா " என்று அழைத்து சென்றாள்.  சட்டென்று ஒருமையில் அழைத்தாலும் அவளது வெள்ளந்திக்குணம் காவ்யாவுக்கும் பிடித்துத்தான் போனது. அவர்களின் எட்டு வயது பையனும் மூன்று வயது பொண்ணும் வந்து அரவிந்தனிடம் ஒட்டிக்கொண்டனர். அவர்களிடம் "இவங்கதான் காவ்யா அத்தை.. இனிமே இவங்களும் உங்க friend சரியா " என்று அரவிந்த் சொன்னதும் காவ்யா அவர்களை அருகே அழைத்து அவர்களுக்கென்று வாங்கி வந்ததை கொடுத்து "ஹாய் " என்றாள். அவளிடம் எட்டு வயது வால் "where is your baby aunty?" என்று கேட்டதும் கயல் "இவன் ஒருத்தன்.. யாராவது கப்புலா வந்தா மொதல்ல பேபி பத்தி கேட்ருவான்" என்றாள் சிரித்துக்கொண்டே. அரவிந்த் காவ்யாவை பார்த்து சிரிக்க அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

அனைவரும் சோபாவில் அமர்ந்து நலம் விசாரிப்புகள் , அவர்கள் திருமணம் மற்றும் மற்ற நண்பர்கள் என பேச்சு அங்குமிங்குமாய் சென்று கடைசியில் "சரி வாங்க சாப்பிடலாம்.. “ என்று டைனிங் டேபுளுக்கு அழைத்து சென்றனர்.

விவேக்கும் கயல்விழியும் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதால் சமையல் காரசாரமாக காவ்யா வீட்டு சாப்பாடு போலவே  இருந்தது. நிறைய ஐட்டங்கள்  அதுவும் மிகவும் சுவையாய் செய்திருந்தாள் கயல்.  காவ்யா அவளை மனதார "அக்கா, ரொம்ப நல்லா சமைச்சிருக்கீங்க.. அப்படியே எங்க அம்மா செஞ்ச மாதிரி இருக்கு.. பாவம் அத்தான் இந்த மூணு நாலா சரியாவே சாப்பிடல.. இன்னிக்குதான் நல்லா சாப்பிட்டாரு.. அதுவும் அந்த மாங்கா தொக்கும் வெண்டைக்காய் பச்சடியும் ரசிச்சு சாப்பிட்டாரு.. அது எப்படி பண்ணீங்கன்னு சொல்லுங்கக்கா.. நான் நோட் பண்ணிக்கறேன்.. " என்று ஆசையாய் கேட்டவளை கயலுக்கும் மிகவும் பிடித்துப்போனது.  

 

சாப்பிட்டு முடித்ததும் குழந்தைகள் உறங்கிப்போயிருக்க ஆண்கள் இருவரும் பால்கனியில் உட்கார்ந்து அலுவலகம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

 

ஹாலில் அமர்ந்து காவ்யாவும் கயலும் அவரவர் குடும்பங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அரவிந்தனை பற்றி பேசும்போது அவளின் கண்களில் ஒளி கூடுவதை கவனித்த கயல் அவளுக்கு அரவிந்தன் மீதுள்ள அளவில்லா காதல் புரிந்தது. மெதுவாக "காவ்யா... அரவிந்த் ரொம்ப நல்ல பையன்.. நீ ரொம்ப குடுத்து வச்சவ.. என் வீட்டுக்காரருக்கு அவ்ளோ சாமர்த்தியம் பத்தாது.. ஆனா அமெரிக்கா வரணும்னு ரொம்ப ஆசை.. அரவிந்த் மட்டும் ரெகமெண்ட் பண்ணலேன்னா நாங்க வந்திருக்கவே முடியாது.. அதுவுமில்லாம இங்க வந்தும் இவருக்காக நெறைய ஹெல்ப் செஞ்சிருக்காப்ல .. அரவிந்த் பொதுவா எல்லாருக்கும் நல்லா ஹெல்ப் பண்ணுவாரு போல .. அதனால கொஞ்சம் பிரச்சனைல மாட்டியிருக்காரு.." என்றதும் சற்று பதட்டத்துடன் "என்னக்கா சொல்றீங்க?" என்றாள்.

"காவ்யா நான் சொல்றத உன் மனசோட வச்சிக்கோ.. இவங்க டீம்ல மோனான்னு ஒரு நார்த் இந்தியன் பொண்ணு இருக்கு.. அந்த பொண்ணு புதுசா வந்தப்போ அரவிந்த் நெறய ஹெல்ப் பண்ணியிருக்காரு..கொஞ்ச நாள்ல அந்த பொண்ணுக்கு இவரை பிடிச்சி போய் ப்ரொபோஸ் பண்ணியிருக்கா.. இவரு மறுத்துட்டாரு போல.. அந்த பொண்ணு இன்னும் இங்கதான் இருக்கா.. பாத்து இருந்துக்கோ.. இத ஏன் உன்கிட்ட சொல்றேன்னா நீ நம்ம பக்கத்து பொண்ணு.. அரவிந்த் ஆளு அம்சமா இருக்காரு.. நீதான் ஜாக்கிரதையா இருக்கணும்.. இதையெல்லாம் அவருகிட்ட கேட்டுக்காத" என்று சொல்லிமுடிக்கவும் அரவிந்தும் விவேக்கும் அங்கு வரவும் சரியா இருந்தது.

அரவிந்த் காவ்யாவிடம் "காவ்யா கிளம்பலாமா.. அக்காவும் நீயும் தினமும் மீட் பண்ணி பேசிக்கோங்க.. இப்போ ரொம்ப லேட் ஆகிடிச்சி" என்றான் சிரித்துக்கொண்டே.

"ஹ்ம்ம்  போலாம் அத்தான்.. "  என்று  சொன்னவளின் முகம் வாடியிருப்பதை கவனித்த அரவிந்த் யோசனையாய் அவர்களிடம்  சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

 

காரில் ஏறியவளின் முகம் இன்னமும் கலக்கமாக இருப்பதாய் அறிந்தவன் எதோ தவறாக இருப்பதாக உணர்ந்தான். ஒரு நிமிடம் வாய் ஓயாமல் எதைப்பற்றியாவது தன்னிடம் பேசிக்கொண்டிருப்பவள் அமைதியாக இருப்பது அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மெதுவாக "என்னடா.. டயர்டா இருக்கா?" என்று ஆரம்பித்தான்.

 

"இல்லை அத்தான்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல" என்றவள் மனதில் புழுங்கிக்கொண்டிருந்தாள். அத்தான் தன்னைத்தவிர யாரையும் ஏறெடுத்து பார்க்கமாட்டார் என்பதை அறிந்திருந்தாலும் ஏன் தன்னிடமிருந்து மறைக்கவேண்டும்.. கண்களில் கண்ணீர் முட்டிகொண்டுவர கட்டுப்படுத்திக்கொண்டாள்.

வீட்டை அடைந்ததும் இறுக்கமாய் அணைத்தவனை "சாரி அத்தான்.. எனக்கு தூக்கமா வருது.. நான் போய் படுத்துக்கவா " என்றதும் கண்டிப்பாக எதோ நடந்திருக்கிறது என்று எண்ணியவனாக "காவ்யா.. ஒரு நிமிஷம் உட்காரு.. " என்று அங்கிருந்த சோபாவில் அவளை அமரவைத்து அருகில் அமர்ந்தான்.

"என்ன ஆச்சி சொல்லு? நீ எதையோ நெனச்சி கஷ்டப்பட்டுட்டு இருக்கன்னு எனக்கு நல்லா தெரியுது..ப்ளீஸ் எதுவா இருந்தாலும் சொல்லு " என்று கண்களை பார்த்து கேட்டவனை பார்த்ததும் கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வழிய அதற்குமேல் பொறுக்கமுடியாமல் "அத்தான் மோனா பத்தி நீங்க என்கிட்ட ஏன் சொல்லலைன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு " என்றதும் பக்கென்று சிரித்தான்.

 "யாரு கயல் அக்கா சொன்னாங்களா.. லூசுப்பொண்ணே.. சரி நீ என்ன நினைக்கிற சொல்லு?" என்று சிரித்துக்கொண்டே அவள் கண்களை துடைத்தவாறு கேட்டான்.

"எனக்கு தெரியும் நீங்க என்னைத்தவிர யாரையும் லவ் பண்ணலன்னு.. ஆனா நீங்க என்கிட்ட இதுவரை எதையும் மறைச்சதில்லைன்னு நினைச்சேன் .. ஆனா " என்று மீண்டும் கண்களிலிருந்து கண்ணீர் கசிய சொன்னவளை அருகில் வந்து அணைத்துக்கொண்டான்.

 

"காவ்யா.. நம்ம ரெண்டு பேருக்கு என்ன தேவையோ அந்த விஷயங்களை நான் எப்பவும் உன்கிட்ட மறைச்சதில்லை .. இனிமேயும் மறைக்கமாட்டேன்.. ஆனா பொண்ணுங்க என்ன சைட் அடிச்சதையும் ப்ரொபோஸ் பண்ணதையும் உன்கிட்ட சொல்லி உன் மனச கஷடப்படுத்தவேணானும்னுதான் உன்கிட்ட சொன்னதில்லை.. "என்றதும் உரிமையாய் அவன் நெஞ்சில் சாய்ந்து படுத்து கொண்டவள் "யாரெல்லாம் உங்கள சைட் அடிச்சாங்க சொல்லுங்க " என்றாள்.

 

"ஹ்ம்ம் அப்படியா.. அப்போ சரி.. மொதல்ல தஞ்சாவூர்லேர்ந்து ஆரம்பிப்போம்... எங்க பக்கத்து வீட்டுல சுமதி இருக்காளே அவ " என்றதும் டக்கென்று எழுந்து "சுமதியா ..நான் உங்கள லவ் பண்ணது அவளுக்கு நல்லா தெரியும்.. இருந்தாலும் உங்கள சைட் அடிச்சாளா.. அவளுக்கு இருக்கு " என்று சீரியஸா சொன்னவளை பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

"அதுக்கப்புறம் எங்கூட காலேஜிலே படிச்ச ஒரு பொண்ணு.. அதுக்கப்பறம் MS  படிக்கிறப்போ ஒரு பொண்ணு அப்பறம் இந்த மோனா .. அவ்ளோதான் " என்றான் பொய்யான வருத்தத்துடன். "அத்தான் விளையாடாதீங்க .. ஏன் இவங்களையெல்லாம் விட்டுட்டு என்ன லவ் பண்ணீங்க" என்று விடாப்பிடியாய் கேட்டாள்.

"ஹே லூசு.. ஊர்ல தேவதை மாதிரி ஒரு பொண்டாட்டிய வச்சிட்டு எவனாவது இன்னொரு பொண்ண லவ் பண்ணுவானா.. என்னை பொறுத்தவரை நீ எப்போவோ என் மனைவி ஆகிட்ட.. நான் எப்படி வேற யாருக்கும் ஓகே சொல்ல முடியும்.. ஒருவேளை நம்ம கல்யாணம் நடக்காம போயிருந்தாக்கூட இன்னொரு பொண்ணு என் lifela  வந்திருப்பாளான்னு தெரியல.." என்றதும் கண்கள் கலங்க "சாரி அத்தான்.. நீங்க எப்பவும் சொல்றமாதிரி நான் லூசுதான்.. உங்களைப்போய் இப்படி சொல்லிட்டேன் ..ப்ளீஸ் அத்தான் இந்த மாதிரி இனிமே பேசமாட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க " என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

ஆதரவாய் அவளை அணைத்துக்கொண்டவன் மனதில் மோனாவை நினைத்து சற்றே சஞ்சலமானான்.

Tuesday, October 20, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 2

ஊரில் காவ்யாவின் வீடு எப்போதும் ஆட்களால் நிறைந்திருக்கும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா , சித்தப்பா, சித்தி, மித்ரா, பிரவீன் போதாதற்கு அவ்வப்போது உள்ளூரில் உள்ள சொந்தக்காரர்கள் வரப்போக என வீடு ஜேஜேவென்று இருக்கும்.

அதிலும் காவ்யா என்றால் அனைவருக்கும் கொள்ளை பாசம். அவளது அமைதியான அன்பான சுபாவமும் சிரித்த முகமும் அனைவரையும் கவர்ந்துவிடும். ஆளாளுக்கு அவளை தலைமேல் வைத்து கொண்டாடுவார்கள்.

மித்ராவும் ப்ரவீனும் எப்போதும் அவள் பின்னாலேயே  சுற்றிக்கொண்டிருப்பார்கள். அத்தனையும் விட்டு, அவளை அனைவரிடமிருந்து பிரித்து இத்தனை ஆயிரம் மைல்கள் தாண்டி கூட்டிப்போவது அரவிந்தனுக்கு முதலில் தயக்கமாகத்தான் இருந்தது.

திருமணம் முடிந்து சிலநாட்கள் தஞ்சாவூரில் அவன் வீட்டில் இருக்கும்போதே திடீரென்று அம்மா அப்பா நினைவு வந்து, பேசிக்கொண்டிருக்கும்போதே கண்கலங்கி விடுவாள். அவள் மனதை புரிந்தவனாக மறுநாளே அவள் வீட்டுக்கு அழைத்துசென்றுவிட்டு வருவான்.

திரும்பி வந்ததும் "தேங்க்ஸ் அத்தான்" என்று சொல்லி மகிழ்ச்சியில் அவனை கட்டிக்கொள்வாள். அதன் பிறகு மொரீஷியஸில் இருந்த பத்து நாட்களிலும் குடும்பத்தை பற்றி பேசாமல் ஒரு நாளும் இருக்கமாட்டாள்.

சட்டென்று ஒருநாள் "எல்லாரும் வந்திருந்தா  இன்னும் ஜாலியா இருந்திருக்கும் .. இல்ல அத்தான் " என்று குண்டை தூக்கிப்போட பதறியவனாக   "அடிப்பாவி.. நாம வந்திருக்குறது ஹனி மூன்.. பேமிலி டூர் இல்ல " என்றான் சிரித்துக்கொண்டே.

நாட்கள் ஆக ஆக அவனது அன்பிலும் காதலிலும் அணைப்பு தந்த சிலிர்ப்பிலும் கொஞ்சம் வீட்டைப்பற்றி யோசிப்பது குறைந்துதான் போயிருந்தது அவளிடம்..

ஆனாலும் இப்போது யாரைப்பற்றி யோசித்து கண்கலங்குகிறாள் என்று புரிந்துகொண்டவன்  அவள் மனதை மாற்றும் வகையில் "ஹே காவ்யா.. என் காபி அவ்ளோ கொடுமையா இருக்கா.. சாரி டா " என்று சீரியசாக சொல்வதைப்போல சொன்னதும் கண்களில் ஈரம் படர சிரித்துக்கொண்டவள் "இல்ல அத்தான்.. சூப்பரா.. அம்மா போடறமாதிரியே இருக்கு.. " என்றாள் பக்கவாட்டில் அவன் தோளில் சாய்ந்துக்கொண்டே.

"ஹ்ம்ம் .. அம்மா ஞாபகம் வந்துடுச்சா..சாரி டா .. உன்ன இவ்ளோ தூரம் பிரிச்சி கூட்டிட்டு வந்துட்டேன்" என்று உண்மையாகவே வருத்தத்துடன் சொன்னவனை "அச்சோ அத்தான்.. அப்படியெல்லாம் நினைக்காதீங்க ப்ளீஸ்.. எனக்கு உங்களோட இருக்கறதுதான் சந்தோசம்.. அம்மா அப்பாவை விட்டு இதுவரை நான் எங்கயும் போனதில்லயா.. அதான் கொஞ்சம் கஷ்டமா இருந்திச்சி..மத்தபடி நான் ஓகே.." என்று காபி கப்பை கீழே வைத்துவிட்டு அவனிடம் பூனைக்குட்டியாய் ஒண்டிக்கொண்டாள்.

சிரித்துக்கொண்டவன் அவள் தலையை வருடியபடியே "காவ்யா.. உனக்கு எப்போ ரொம்ப கஷ்டமா இருக்கோ என்கிட்ட ஓப்பனா சொல்லு.. நாம ஒடனே ஊருக்கு போய்டலாம்.. சரியா.. எனக்கு நீ ஹாப்பியா இருக்கணும்.. அதுதான் முக்கியம் .. மத்த எல்லாத்தையும் விட.. ஹ்ம்ம் ஓகே வா?" என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்து காதல் பொங்க "அத்தான்.. நான் எவ்ளோ லக்கி தெரியுமா? எனக்கு கிடைச்ச மாதிரி husband யாருக்கும் கிடைக்க மாட்டாங்க.. "என்று ஆத்மார்த்தமாக சொன்னவளை "நான் தான் லக்கி காவ்யா.. இந்த மாதிரி தேவதை யாருக்கு wife ஆ கிடைப்பாங்க.. என்னப்பத்தியே யோசிச்சி எனக்காக எல்லாத்தயும் விட்டுட்டு வந்திருக்கயே.. ஸ்கூல் காலேஜ்க்கு கூட நீ நம்ம தஞ்சாவூரை தாண்டி வெளிய போகல.. இப்போ இவ்ளோ தூரம் எனக்காக.." என்று சொல்லிக்கொண்டிருந்தவன் சட்டென்று கன்னத்தில் அவள் இட்ட அழுத்தமான முத்தத்தில் வார்த்தை இழந்தான்.

ஆச்சர்யமாக பார்த்தவனை குறும்பாக பார்த்தபடி "இனிமே இப்படி சென்டிமென்ட்டா பேசி எனக்காக வருத்தப்பட்டிங்கனா இதுதான் பனிஷ்மென்ட்.." என்றாள். "அச்சச்சோ.. பயங்கரமான பனிஷ்மெண்ட்டா இருக்கே..அதனால நான் இந்த தப்ப.." என்று நிறுத்தியவனை கேள்விக்குறியாய் அவள் பார்க்க, "அடிக்கடி பண்ணுவேன்" என்று அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

சிரிப்பும் சீண்டலுமாக பேசிக்கொண்டு ஒன்றாக கிட்சன் வேலைகளை முடித்தனர். காவ்யா "அத்தான் உங்க டர்ன் முடிஞ்சிடிச்சி.. இனிமே நீங்க வீட்ல எந்த வேலையும் செய்யக்கூடாது.. monday ல இருந்து ஆபீஸ் போகணும்ல..சோ ஆபீஸ் வேல மட்டும் தான் நீங்க பாக்கணும்..மீதி எல்லாம் நான் பாத்துக்குறேன்.." என்று பொறுப்பான மனைவியாய் சொன்னதை ரசித்தவன் "சரிங்க.. பொண்டாட்டி.." என்று எதையோ நினைத்து சிரித்தவனை "என்ன அத்தான்? எதுக்கு சிரிக்கிறீங்க" என்றாள்.

"இல்ல ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சி நின்னு என்ன சைட் அடிச்ச அந்த குட்டி பொண்ணு காவ்யா எங்கன்னு நினைச்சி பாத்தேன்" என்றதும் வெட்கம் அவனை பார்க்க விடாமல் தடுக்க "நான் ஒண்ணும் உங்கள ஸைட்டெல்லாம் அடிச்சதில்லை.. " என்றாள் தலையை குனிந்தவாறே..

"ஓய்.. நீ எப்படியெல்லாம் என்ன சைட் அடிச்ச .. எப்போ பாத்தாலும் என்னைப்பத்தி பேசி மித்ரா பிரவீனை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ண.. என் நெனப்பு வரப்போல்லாம் நீ என்ன பண்ணுவ .. எல்லாம் எனக்கு தெரியும்.. " என்று விட்டு இன்னும் பிரிக்கப்படாத அவன் சூட்கேஸிலிருந்து அந்த பெரிய பார்சலை எடுத்து வந்து பிரித்துக்காட்டினான்.

அது அவள் வரைந்த அவனது ஓவியங்களும் அவனை நினைத்து எழுதிய கவிதைகளும் ஸ்ரீராமஜெயமும் பக்கம் பக்கமாக எழுதிய அவனது பெயரும் உள்ள நோட்டுப்புத்தகம். கண்கள் விரிய "இது எப்படி உங்ககிட்ட வந்திச்சு அத்தான்..நான் எங்கேயோ வச்சிட்டேன்னு தேடிட்டு இருந்தேன்"  என்றாள்.

"இத என்னைக்கு பாத்தேனோ அன்னைக்குதான் நீதான் என் wife ன்னு முடிவு பண்ணேன், அதனால இது என்கிட்டேதான் இருக்கணும்னு எடுத்திட்டு வந்திட்டேன் " என்றான் கண்கள் சிமிட்டியபடி.

பொய்யாக முறைத்தபடி "எங்கிட்ட இருந்து சுட்டுட்டு வந்துடீங்களா?" என்றாள்.

"ஹ்ம்ம் நீ என் இதயத்தையே என்கிட்டருந்து சுட்டுட்டு போய்ட்டயே .. அதுவும் எப்போ தெரியுமா.. நான் காலேஜ் முடிச்சி இங்க யூனிவெர்சிட்டிக்கு அப்ளை பண்ணிட்டு தாத்தா வீட்ல நாங்கெல்லாம் கொஞ்ச நாள் இருந்தோமில்லை.. அப்பவே.. இந்த அழகான கண்களால் என்னை ஒரு பார்வை பார்த்த தெரியுமா.. அங்க விழுந்தவன் தான்.." என்று மயக்கும் குரலில் காதருகே குனிந்து அவன் சொன்னதும் வெட்கத்தில் முகத்தை மூடிகொண்டவளை "நான் நெனச்சே பாக்கல.. இந்த தேவதை என் wife ஆ அதுவும் என்கூட தனியா அமெரிக்கால வந்து இருப்பான்னு.. உன் காதலுக்கு ரொம்ப பவர் காவ்யா" என்று அவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.

மதியம் காவ்யா செய்த சிம்பிளான தக்காளி சாதத்தையும் உருளைக்கிழங்கு வருவலையும் ரசித்து சாப்பிட்டவன் "காவ்யா, ஈவினிங் இந்தியன் ஸ்டோர்ஸ் போலாம்.. நேத்து நான் மட்டும் போனதால எனக்கு தெரிஞ்சதை வாங்கிட்டு வந்தேன். நான் இங்க எதோ சாப்பிட்டு அட்ஜஸ்ட் ஆகி பழகிட்டேன்.. ஆனா நீ அப்படி இல்ல.. அங்க வீட்ல நல்லா டேஸ்டியா ஹெல்த்தியா சாப்பிட்டு இங்க சிம்பிளா சாப்பிடுறது எனக்கு கஷ்டமா இருக்கு " என்றான்.

"அத்தான் இந்த சிம்பிள் சாப்பாடு உங்ககூட சாப்பிடுறது எனக்கு எவ்ளோ பிடிச்சிருக்கு தெரியுமா.. ஆனா நாளையிலிருந்து நான் நல்லா சமைக்க ஆரம்பிச்சுடறேன்..நம்ம எங்கேஜ்மெண்ட்க்கு அப்பறம் நா நெறய டிஷேஸ் செய்ய கத்துக்கிட்டேன் தெரியுமா?" என்று குழந்தையின் ஆர்வத்தோடு சொன்னாள்.

"ஹ்ம்ம் தெரியும்.. மேடம் அம்மாக்கு அடிக்கடி கால் பண்ணி அத்தானுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு கேட்டு கத்துக்கிட்டிங்களாமே..அம்மாவுக்கு ஒரே பெருமை " என்றான்.

"அத்தை சொல்லிட்டாங்களா?" என்று நாக்கை கடித்துக்கொண்டவள் "ஆனா யாருக்கும் தெரியாம youtube பார்த்து நான் ஒண்ணு கத்துக்கிட்டேன் அத்தான்.. ஆயில் பெயின்டிங். உங்கள தான் முதல்ல வரைஞ்சேன்..”  என்று அவளுடைய சூட்கேசில் அவளது புடவைகளுக்கு நடுவில் மிகவும் கவனமாக வைத்திருந்த ஓவியங்களை எடுத்து வந்தாள்.

 

கைகளில் வாங்கியவன் ஸ்தம்பித்து போனான். அரவிந்தன் ராஜகுமானைபோல் அழகாய்  சிரித்தபடி ஒரு ஓவியமும், வெற்றி கொண்ட ஆண்மகனாய் குதிரையில் பறந்து வருவதைப்போல ஒரு ஓவியமும் மிகவும் தத்ரூபமாய் வரைந்திருந்தாள். கண்கள் அன்பினால் நீரை சொரிய "எப்படா இதெல்லாம் வரைஞ்ச? எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? ஆனா பிரின்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே " என்றான் சிரித்துக்கொண்டே.

"எனக்கு நீங்க எப்பவும் ராஜகுமாரன்தான் அத்தான்..என்னை அன்பால ஆள வந்த ராஜகுமாரன்" என்றாள் அழகிய கண்களால் அவனை கூர்ந்து பார்த்துக்கொண்டு.

 

Saturday, October 17, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 1

 

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஐந்து சிறிய மாகாணங்களில் ஒன்றானதும், கலிபோர்னியா மற்றும் நியூயார்க் மாகாணங்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் அதிகமாக  வசிப்பதுமாகிய நியூ ஜெர்சி மாகாணம்..

கிழக்கு கடற்கரையின் ஓரம் அமைந்து, கார்டன் ஸ்டேட் என்று அழைக்கப்படும் பச்சை பசேலென மரங்கள் சூழ்ந்த அழகிய மாகாணம் அது..

சற்றே குளிரும் அந்த மயக்கும் மார்ச் மாதத்தில் ஒரு அழகிய விடியல்காலை பொழுது.. அழகிய திரைசீலையை தாண்டி பெரிய ஜன்னல் வழியாக வந்த அந்த அதிகாலை வெளிச்சம் முகத்தில் பட்டதும் தூக்கம் களைந்து கண்கள் திறந்தான் அரவிந்த்.

முற்றிலும் புதிதான கண்டத்தில் புதிதான நாட்டில் தன்னை இறுக்கி அணைத்தபடி, தன் நெஞ்சில் முகம் புதைத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் தன் காதல் மனைவி காவ்யாவை அன்போடு பார்த்து புன்னகைத்துக்கொண்டான்.

எத்தனை நிம்மதியாக தூங்குகிறாள்.. எத்தனை அமைதி என்னவளின் முகத்தில்.. இதே அமைதி என்றும் உன் முகத்தில் இருக்கவேண்டும் காவ்யா.. என் உயிரே.. என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன், அவளது தூக்கம் கலையாமல் மெதுவாய் நெற்றியில் முத்தமிட்டான்.

ஆழ்ந்த உறக்கத்திலும் அவனது ஸ்பரிசத்தை  உணர்ந்தவளின்          உதடுகள் மெலிதாய் புன்னகைக்க, தானும் புன்னகைத்துவிட்டு அவளை இன்னும் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கடந்த காலத்தில் மூழ்கினான்.

நிச்சயதார்த்தம் முடிந்து அந்த வார இறுதியில் அவன் அமெரிக்கா திரும்பி வர, பிரிய மனமில்லாமல் கண்கள் குளமாக காவ்யாவும் அம்மாவும் அழுதது இன்னும் அவன் கண்ணுக்குள் இருக்கிறது.  

அம்மாவிற்கு மொத்த குடும்பமும் ஆறுதல் சொல்ல, காவ்யா, வசந்தா அளவிற்கு கண்ணீரையும் வெளிப்படுத்த முடியாமல் தவியாய் தவித்தது அவனுக்கு மட்டுமே புரிந்து அவன் மனதை பிசைந்தது. அம்மாவை கட்டிக்கொண்டு ஆறுதல் சொன்னவன் கண்களாலேயே அவளுக்கு விடை கொடுத்தான்.

எப்போதும் அவன் கிளம்பும்போது அம்மா அழுவது அவனுக்கு கவலையளித்தாலும் அப்பா இருக்கிறார் பார்த்துக்கொள்வார் என்பதாலும், நண்பர்கள் மற்றும் அமெரிக்க வாழ்க்கை என்று மனமெல்லாம் பரபரப்போடு இருக்குமாதலால் அவன் என்றும் இத்தனை கலங்கியதில்லை.

ஆனால் இந்த முறை அவனை அமெரிக்கா வாசம் ஈர்க்கவில்லை.. காவ்யா அருகில் இல்லாத அமெரிக்கா கூட அவனுக்கு பாலைவனமாகத்தான் இருக்குமென துவண்டான்.. அவளை பிரிந்து செல்வது இதயத்தை யாரோ பிரித்து எடுப்பதை போன்றதொரு வலியை கொடுத்தது அரவிந்துக்கு.

அதுவும் அந்த பத்து பதினைந்து நாட்களில் இருவரும் மனதளவில் மிகவும் நெருக்கமாய் அன்பை பகிர்ந்து கொண்டதாலும் அவள் தனக்கே உரிமையானவள் என்று முடிவானதாலும்  பிரிவு மிகவும் கொடுமையாகத்தான் இருந்தது.. அந்த பதினெட்டு நேர பயணமும் அவளது நினைவுகளிலேயே கழிந்தது.

அதன் பிறகான நாட்களில் அவனுக்கு வேலைச்சுமை மூச்சுவாங்ககூட நேரமில்லாமல் போனாலும் ஒருநாளும் அவளை அழைத்து பேச மறக்க மாட்டான். சிலசமயம் மகிழ்ச்சியாய் சிலசமயம் கலங்கிய கண்களுமாக பேசுபவளுக்கு ஏற்றாற்போல் சிரித்தும் கொஞ்சியும் கெஞ்சியும் பேசுபவனை நினைத்து தனக்குள்ளே ரசித்து சிரித்துக்கொள்வாள் காவ்யா.

கிடைக்கும் நேரங்களில்லெல்லாம் வீடியோ கால்களும் எழுந்ததும் தூங்கப்போகும்போதும் அவளை அழைத்து பேசுவதும் என்று இரண்டு மாதங்கள் ஓடியே விட்டன.

ஒருவழியாக அவனுடைய ப்ராஜெக்ட் பிளான் மற்றும் ப்ராஜெக்ட் ரிகோயர்மெண்ட்ஸ் அனைத்தையும் விவேக்கிற்கு விளக்கி முடித்தவன் ரகுவிடம் அன்றைய ஒன் ஆன் ஒன் மீட்டிங்கில் அனைத்தையும் ரிப்போர்ட் செய்துவிட்டு ஊருக்கு கிளம்புவதை பற்றி பேசவேண்டும் என்று நினைத்தான்.

அந்த பெரிய ஆபீஸ் ரூமின் கதவை தட்டி "மே ஐ கம் இன்?" என்று சொல்லி ரகு  "கம் இன் " என்றதும் உள்ளே சென்றவன் அங்கே ரகுவின் மேனேஜர் டாமும் இருப்பதை பார்த்து "ஹாய் டாம்" என்று கைகளை குலுக்கி சிநேகமாய் சிரித்தான்.

"Hey young man, congratulations !  Raghu said you got engaged " என்று அவனை வாழ்த்தியவருக்கு "Thanks Tom" என்றான் சிரித்துக்கொண்டே.  "OK you guys carry on " என்று அவர் எழுந்து சென்றதும்  சற்றே தயக்கமாக ரகு ஆரம்பித்தான்.

 

"அரவிந்த்.. டாமும் அவரோட பாஸ் ஸ்டெபானும் GCT ப்ராஜெக்ட்டை நீ லீட் பண்ணும்னு நினைக்கிறாங்க.. உனக்கே தெரியும் நீ இப்போ விவேக்குக்கு KT குடுத்தது மினி ஸ்கேல் ப்ராஜெக்ட் தான்.. அதுக்கே அவன் திணறிக்கிட்டு இருக்கான்.. என்னதான் hardwoker ஆனாலும் அவனோட communication skills பத்தி உனக்கே தெரியும் .. அதுவுமில்லாம GCT இன்னும் பெரிய ப்ராஜெக்ட்.. கண்டிப்பா அவனால handle பண்ண முடியாது..” என்று இழுத்ததும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தவனாய் "ரகு.. அது வந்து மேரேஜ்க்கு அப்பறம் நாங்க இண்டியால தான் இருப்போம்ன்னு காவ்யாகிட்ட சொல்லியிருக்கேன்.. அதுவில்லாம அவ வீட்டோட ரொம்ப attached. அதான் யோசிக்கிறேன்..கவுதம் இருக்கானே.. அவனும் onsight க்கு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கான்.. அவன்கிட்ட பேசி பாக்கலாமா " என்றான்.

சிரித்துக்கொண்டே ரகு "அரவிந்த், சில விஷயங்கள் நாம கிளையண்ட்டுக்கு சஜஸ்ட் பண்ண முடியாது.. They are very much impressed with your work. அதோட the way you deal with offshore and your communication skills எல்லாமே அவங்களுக்கு பிடிச்சிருக்கு..  இந்த Opportunity  இந்த வயசுல எல்லாருக்கும் கிடைக்காது.. நல்லா யோசிச்சு சொல்லு.. என்ன கேட்டா, I would say you should take this offer.. வீட்ல பேசு.. காவ்யாகிட்ட டிஸ்கஸ் பண்ணு.. just two more years தான்.. one month லீவு எடுத்துக்கோ.. கல்யாணம் பண்ணிட்டு அவளையும் கூட்டிட்டு வந்துரு.. அவளோட விசாக்கும் arrange பண்றேன்.. யோசிச்சு இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு அப்டேட் பண்ணு" என்று முடித்தான்.

ரகு அவனுக்கு மேனேஜர் மட்டுமல்லாமல் ஒரு மூத்த சகோதரன் போல் எப்போதும் அவனது நலவிரும்பியாக இருந்திருக்கிறான். எனவே உடனடியாக மறுக்காமல் இரண்டு நாட்களில் சொல்வதாக சொல்லிவிட்டு எழுந்தான்.

முதலில் காவ்யாவைதான் கூப்பிட்டு ரகு சொன்னதை அப்படியே சொன்னான். முதல் கேள்வியாக அவனிடம் "அத்தான், உங்களுக்கு என்ன தோணுது..? "என்றாள். "எனக்கு ஒண்ணும் புரியல காவ்யா.. இது என்னோட கேரியர்ல எனக்கு கிடைச்ச  பெரிய காம்பிளிமெண்ட் தான்.. ஆனா நான் இத அக்ஸ்ப்ட் பண்ணா ஒண்ணு நீ என்ன பிரிஞ்சி இருக்கணும் .. இல்ல நம்ம familya பிரிஞ்சி இருக்கணும்.. இது ரெண்டுமே உனக்கு கஷ்டம்ன்னு எனக்கு தெரியும்.. சோ எனக்கு இத அக்ஸ்ப்ட் பண்ண வேணாம்னு தான் தோணுது.. நாம ஏற்கனவே பிளான் பண்ண மாதிரி நான் இண்டியா வந்ததும் நம்ம மேரேஜை முடிச்சிட்டு சென்னைலயே இருக்கலாம்னு தோணுது " என்றான் யோசனையாய்.

சட்டென்று தெளிவானவளாய்  " இல்ல அத்தான், உங்களோட வளர்ச்சிக்கு நான் எப்பவும் துணையாதான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.. என்னால உங்க கேரியர் கெடக்கூடாது அத்தான்.. ரகு அண்ணா சொன்ன மாதிரி இந்த Opportunity உங்களோட ஹார்ட் ஒர்க்குக்கும் டெடிகேஷன்க்கும் கெடச்சிருக்குற கிப்ட்.. என்னால அது உங்களுக்கு கிடைக்காம போகக்கூடாது.. ஆனா என்னால உங்கள பிரிஞ்சி ரொம்ப நாள் இருக்கவும் முடியாது.. அதனால நம்ம கல்யாணம் முடிஞ்சி நானும் உங்களோட வந்துடறேன்.. நீங்க என் பக்கத்துல இருந்தா வீட்ல எல்லாரும் என் கூட இருக்குற மாதிரி.. ஆனா எல்லாரும் இருந்தும் நீங்க இல்லன்னா எனக்கு எதோ வெறுமையா இருக்கு அத்தான்" என்று அவள் மனதிலிருந்து வந்த வார்த்தைகள் அவன் உயிரை உணர்வை ஆட்டிப்படைத்தன.

மறுநாளே ரகுவிடம் சம்மதம் என சொல்லி அடுத்த இரண்டு வாரங்களிலேயே இந்தியாவுக்கு கிளம்பினான். ஏற்கனவே வீட்டில் பெரியவர்களிடம் சொல்லி திருமண ஏற்பாடுகளையும் ஆரம்பிக்க சொல்லியிருந்தான். நடுநடுவே சென்னை ஆபிசில் வேலை சிலநாட்கள் work from home என நாட்கள் கழிந்தன. மூன்றே மாதங்களில் திருமணம் முடிந்து, பத்து நாட்கள் மொரீஷியஸுல் தேனிலவும் முடித்து அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவிற்கும் கிளம்பி வந்தாகி விட்டது.

இத்தனை பரபரப்பிலும் இருவருக்கும் திருமண வாழ்க்கை தேனாய் தித்தித்தது..உயிரும் உடலும் ஒன்றாகி சிந்தையும் செயலும் கலந்து உன்னுள் நான் என்னுள் நீயென இணைபிரியா பேரின்ப பெருவெள்ளத்தில் மூழ்கினர். திருமண வாழ்வில் அவளது அன்பு அவனை மெய்சிலிர்க்க வைக்க அவனது அன்போ அவளை உலகையே மறக்க செய்தது.

ன்னும் குழந்தையாய் தூங்கிக்கொண்டிருந்தவளை மறுபடியும் முத்தமிட்டு, கலைந்திருந்த கூந்தலை சரிப்படுத்தி தள்ளி படுக்க வைத்தவன், அவளுக்கு கம்போர்ட்டரை நன்கு போர்த்திவிட்டு  எழுந்தான்.

பாத்ரூமிலிருந்து ரிஃப்ரெஷ் ஆகி, கிச்சனுக்குள் சென்றவன்  மைக்ரோவேவ் அவனில் பாலை காய்ச்சி இருவருக்கும் காப்பி கலந்து கொண்டிருந்தான். அவன் போடும் காபி என்றால் அவளுக்கு கொள்ளை பிரியம்.. இங்கு வந்த  மூன்று நாட்களில்  அவன் போடும் காபியை ரசித்து குடித்தவள், அவன் செய்யும் ஒவ்வொரு சமையலையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாள்.. அதுவும் அவளை எதுவும் செய்ய விடமால் உட்கார வைத்துவிட்டு அவன் செய்து கொடுத்த காரசாரமான பேச்சுலர் சமையலை புகழ்ந்து தள்ளினாள்.

நேற்றுவரை ஜெட்லாக் அவர்களை பாடாய்படுத்த நேரம் காலம் தெரியாமல் தூங்கவும் பசிக்கும் நேரத்தில் மட்டும் சமைத்து சாப்பிடவும் எனவும் நாட்கள் கடந்தன.  அன்று சனிக்கிழமை.. அந்த வார திங்கட்கிழமை அரவிந்த் புது ப்ராஜெக்ட்டில் join செய்வதாக இருந்தது. அன்று ஓரளவு அவனுக்கு ஜெட்லாக் சரியாக, இன்று அவளை வெளியில் அழைத்து செல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டே காபியை கலந்து முடித்தான்.

சட்டென்று மிகவும் அருகில் அவளது facewash-ன் வாசம் வந்தும் தெரியாதது போல சிரித்துக்கொண்டு திரும்பாமலே இருந்தவனை, "ஹாய் அத்தான்.. குட் மார்னிங்!" என்று பின்னாலிருந்து கட்டிக்கொண்டாள் காவ்யா.

"ஹாய் பொண்டாட்டி.. குட் மார்னிங்.. " என்றபடியே திரும்பி தன்னை அனைத்தவளை தானும் அணைத்துக்கொண்டு இதழில் மெல்லிய முத்தத்தை பதித்தவன் "என்னடா.. எழுந்திட்டயா.. நைட் நாம தூங்க லேட் ஆச்சுல்ல. சோ நீ டயர்டா இருப்பன்னு காபி போட்டு வந்து எழுப்பலாம்னு நெனச்சேன் " என்று கண்ணடித்தபடியே சொன்னவனை பார்த்து வெட்கத்தோடு சிரித்தவளின் கன்னங்கள் குங்குமமாய் சிவந்தன.  அவள் முகத்தை குனிந்து பார்த்து ரசித்தவன் " இதோ உன்னோட favorite ஸ்டாராங் காபி ரெடி..” என்று ஒரு காபி கப்பை அவள் கைகளில் கொடுத்தான்.

முகத்தில் சந்தோஷமும் மனதில் பொங்கிய அவன் மீதான காதலுமாய் ஒரு வாய் காபியை பருகியவளின் மனம் பல்லாயிரக்கனான மைல்களுக்கு அப்பால் இருந்த அம்மாவையும் அவள் கொடுக்கும் இதே சுவையுள்ள காபியையும் நினைக்க,  கண்கள் சற்றே கலங்கின.

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...