Wednesday, November 25, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 7

 

காவ்யா சொன்னதால் அந்த எண்ணுக்கு அழைத்துவிட்டாலும் அரவிந்தன் மனதில் மோனாவை பற்றிய அச்சம் இல்லாமலில்லை. நியூயார்க் ஆஃபீசில் கேன்டீனில் முதன் முதலில் தன் விருப்பத்தை அவள் சொன்னது அவன் நினைவுகளில் வந்து போனது.

மோனா டெல்லியில் பிறந்து வளர்ந்த,  அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் ஒரே செல்ல பெண். அவளது அழகும் படிப்பும் சற்றே கர்வத்தையும் தந்துவிட்டிருக்க,  எப்போதும் கண்களில் சற்று அலட்சியமும் நுனிநாக்கு ஆங்கிலமுமாய் கூட வேலை பார்ப்பவர்களை சற்று எட்டிதான் இருக்க வைத்திருந்தது. 

ஒரு சிலரை தவிர மற்ற ஆண்களின் கண்கள் ரகசியமாய் தன்னை அளக்கும்போது, அரவிந்தனின் கண்ணியமும் அவனது வசீகரமும் அவளை ஈர்க்கத்தான் செய்தது.  அவள் வேலையில் சேர்ந்ததும் அவளுக்கு ID கார்ட் வாங்குவது முதல், லேப்டாப் ஆர்டர் செய்து வரவைத்ததது, பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்து கொடுத்தது, கிரெடிட் கார்டு அப்ளை செய்தது, தங்குமிடம் வசதி செய்து கொடுத்தது என்று அனைத்து உதவிகளையும் ரகு சொன்னத்தின் பேரில் செய்தாலும் தேவைக்கு மேல் எதுவும் பேசாது, அவளுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் செய்து கொடுத்தவன் மேல் அவளையுமறியாமல் மரியாதையும் கூடவே காதலும் பிறந்தது.

படிக்கும் காலத்திலிருந்தே ஆண்களும் நண்பர்களாக இருந்த போதிலும் யாரிடமும் தோணாத ஒரு உணர்வு அரவிந்தனிடம் பேசும்போதும் பழகும்போதும் இருப்பதாக உணர்ந்தாள். தன் விருப்பத்திற்கு தன்  பெற்றோரும், தன்னைப்போல அறிவான அழகான பெண்ணுக்கு அரவிந்தனும் மறுப்பு சொல்ல மாட்டார்கள் என்ற அசையாத நம்பிக்கையோடு பழகிய ஒரு மாதத்திலேயே தன் விருப்பத்தை அவனிடம் சட்டென்று ஒருநாள் போட்டு உடைத்தாள்.

முதலில் அதிர்ந்தாலும் பின்னர் தன் முடிவை அழுத்தமாக அதே சமயம் அவள் மனம் நோகாமல் எடுத்து சொன்னவன் அவளது கண்களில் தெரிந்த ஆத்திரத்தை கண்டதும் ஆடி போனான்.

 "அரவிந்த், இதுவரைக்கும் எத்தனை பேர் என்ன ப்ரொபோஸ் பண்ணியிருப்பாங்க உங்களுக்கு தெரியுமா? இப்ப கூட நான் ஓகேன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்.. டெல்லில எத்தனை ஹை கிளாஸ் families அவங்க பசங்களுக்கு என்னை கேட்டு என் பேரன்ட்ஸ்க்கு தினமும் போன் பண்றாங்க தெரியுமா? யாருக்கும் ஓகே சொல்லாம உங்களை ப்ரொபோஸ் பண்றேன்னா எனக்கு உங்களை அவ்வளவு பிடிச்சிருக்குன்னு ஏன் உங்களுக்கு புரியல? இந்த காலத்துல வந்து மாமா பொண்ண லவ் பண்றேன் அத்தை பொண்ண லவ் பண்றேன்னு.. உங்க லைப் ஸ்டைலுக்கு எப்படி அந்த பொண்ணு ஒத்து வருவா.. ப்ராக்டிகலா யோசிச்சி பாருங்க " என்று  வார்த்தைகளில் அனல் அடிக்க அவள் பேசியது இன்னமும் அவன் காதில் ஒலித்தது.

பொறுமையை இழந்தவன் "மோனா.. திஸ் ஐஸ் யுவர் லிமிட்.. என் லைஃப் பத்தி நீங்க கவலைப்படவேணாம்..என் லைஃப் ஸ்டைல்க்கு யாரு ஒத்துவருவாங்கன்னு நீங்க டிசைட் பண்ணதேவையில்லை.. and I love Kavya more than anything in the world " என்றதும் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர "என்ன அழவச்சிட்டு நீ எப்படி நிம்மதியா இருக்கபோறேன்னு நானும் பாக்குறேன்" என்று விருட்டென்று எழுந்து போனாள்.

அதற்கடுத்த இரண்டு நாட்களில் அவள் அலுவலகம் வராமலிருக்க, சற்று கலக்கமானவன் அவளது போனுக்கு அழைத்தபோதும் எதிர்முனையில் எவ்வித பதிலும் இல்லை. கோபத்தில் பேசினாலும் அவளது மனம் புண்படுமாறு தான் பேசியது தவறு என உணர்ந்து, அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்பவும் பொறுமையாக எடுத்துசொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு ரகுவிடமிருந்து வந்த  போன் கால் அதிர்ச்சியை கொடுத்தது.

"ஹே அரவிந்த் .. மேட்டர் கொஞ்சம் சீரியஸ் .. என்றவன் தயங்கியபடியே “ மோனா நேத்தெல்லாம் ரொம்ப depressed ஆ இருந்திருக்கா.. ஷோபாகிட்ட போன்ல அழுதுகிட்டே அரவிந்த் ரொம்ப hurt பண்ணிட்டாருன்னு ஏதோதோ சொல்லியிருக்கா.. நேத்து நைட் ஸ்லீப்பிங் பில்ஸ் நெறய சாப்பிட்டு மயக்கமாகியிருக்கா.. நல்லவேளை.. அவளோட ரூம்மேட் பாத்து 911 க்கு கால் பண்ணிட்டாங்க…. Treatment  பண்ணி அவளை காப்பாத்திட்டாங்க..  இப்போதான்  ஹாஸ்பிடல்ல இருந்து எனக்கு கால் வந்திச்சி..  இப்போ ஷி ஐஸ் ஓகே ..but police enquiry ல உன் பேரை சொல்லிட்டா it is going to be very serious.. நான் ஆல்ரெடி இந்தியால சீனியர் மேனேஜர்கிட்ட பேசிட்டேன்.. incase  அப்படி ஏதாவது problem வந்தா கூட manage பண்ணிக்கலாம்.. உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சதால company support  உனக்கு இருக்கு.. நானும் ஷோபாவும் உன்னை பிக்கப் பண்ண வந்திட்டு இருக்கோம்.. நேர்ல போய் அவகிட்ட பேசி எதுவும் issue ஆகாம பாத்துக்குவோம்… be ready “ என்று போனை வைத்ததும் அதிர்ச்சியில் ஒரு வினாடி விக்கித்து போனாலும் என்ன ஆனாலும் சரிதான்.. தன் மீது தவறு இல்லாதபோது தான் ஏன் கலங்கவேண்டும் என்று தீர்மானித்தவன் அவர்களோடு சென்று மோனாவை பார்த்தான். அவர்களோடு பேசியபடியே கண்களில் ஒருவித அலட்சியத்தோடு அரவிந்தனை "பார்த்தாயா.. உன்னை எப்படி அலறி அடித்து ஓடி வரவைத்தேன்" என்ற தொனியில் பார்த்தாள்.

ரகுவின் மனைவி ஷோபாவும் டெல்லியை சேர்ந்தவள் என்பதால் மோனாவும் அவளும் தோழிகளாகியிருந்தனர். பலவித பேச்சுவார்த்தைக்கு பின்னரும் அரவிந்தன் காவ்யா தான் தன் வாழ்க்கை என்று உறுதியாக இருக்க, ரகு தம்பதியினர் மோனாவின் பெற்றோருடன் பேசி அவளை நல்லபடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

இவையனைத்தும் மின்னல் போல அவன் நினைவில் வந்துபோக, நெடுநேர அழைப்பிற்கு பின் எதிர்முனையில் "ஹலோ" என்று பெண்ணின் குரல் கேட்டது. தயக்கமாக அரவிந்த் " ஹலோ .. நான் அரவிந்த் பேசுறேன்" என்றதும்  "ஹே அரவிந்த்,  நான் ஷோபா பேசுறேன்..How are you? " என்று சினேகமாக அவள் பேசவும் "oh.. Hai Mrs. Raghu..” என்றுவிட்டு  "இந்த நம்பர் .." என்று இழுத்தான்.

என்ன நடந்திருக்கும் என்று சட்டென்று ஊகித்தவள் "ஓ அதுவா.. இது மோனாக்கு நான் வாங்கி கொடுத்த நம்பர் .. அவ இந்தியா போனதும் நான்தான் பர்சனல் நம்பர் ஆ யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.. இப்போ she has different number “ என்றவள்  "ஓகே நான் எதுக்கு கால் பண்ணேன் தெரியுமா.. இன்னைக்கு ஆகாஷுக்கு பர்த் டே.. ஈவினிங் சின்னதா பார்ட்டி வச்சிருக்கோம்.. சோ கண்டிப்பா ரெண்டு பேரும் வந்துடுங்க.. அப்படியே உங்க ஒய்ப்பையும் நாங்க பார்த்த மாதிரி இருக்கும்.." என்றதும் மனம் சிறிது நிம்மதி அடைய "OK Mrs. Raghu .. நாங்க வந்திடறோம்..thanks for inviting us " என்று விட்டு போனை வைத்தான்.

அரவிந்த் பேசி முடிக்கும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளின் மனதிலும் சிறிது கலக்கம் இருக்கத்தான் செய்தது. பேசுவது ஷோபா என்பது புரிந்ததும் கொஞ்சம் நிம்மதியானவள், அவன் போனை வைத்ததுடன் "என்ன அத்தான்.. ரகு அண்ணா ஒய்ப்பா? " என்றாள்.

"ஹ்ம்ம் ஆமா.. நல்ல வேளை.. மோனா இல்ல..அவ நம்பரை ஷோபா யூஸ் பண்றாங்க போல.. ரகு பையனுக்கு இன்னைக்கு பர்த்டேவாம்.. ஈவினிங்  பார்ட்டிக்கு நம்மள இன்வைட் பண்ணாங்க.. போலாமா.. எப்படியும் எங்க டீம்ல எல்லாரும் வருவாங்க.. உனக்கும் எல்லாரையுமே பாத்த மாதிரி இருக்கும்..மோனாவும் கண்டிப்பா வருவா.. நீ அவளையும் பாத்த மாதிரி இருக்கும்" என்றான் குறும்பாக அவளை பார்த்தபடியே.

"நான் ஏன் அவங்கள பார்க்கணும் " என்று பொய்க்கோபத்துடன் அவள் வாய் சொன்னாலும் அவள் மனதில் தன் அத்தானுக்காக உயிரை விட துணிந்தவளை பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் இருந்ததை அறிந்தவனாய் "ஹே உன்ன பத்தி உனக்கு தெரியாதது கூட எனக்கு தெரியும்.. " என்று அவளை பின்புறமாய் அணைத்துக்கொண்டான்.

கழுத்தை சுற்றி அணைத்துக்கொண்ட கணவனின் கைகளை பற்றிகொண்டவள்  "அப்படியா.. இப்போ நான் என்ன நினைக்கிறேன் சொல்லுங்க பாப்போம்" என்றாள். "சொல்லவா.. சொல்லிடுவேன்.. சொல்லிடுவேன்.. " என்றவன் அவள் காதோரமாய் "இப்போ அத்தானை பார்த்து I love youன்னு சொல்லனும்னு நினைக்கிற.. கரெக்ட் ஆ" என்றான் கிசுகிசுப்பாய்.

காதலில் மனம் கிறங்க கண்களை மூடிகொண்டு  நாணசிரிப்புடன் "கரெக்ட் தான் அத்தான் " என்றவளை " நான் இப்போ என்ன நினைக்கிறேன் தெரியுமா .. " என்று மயக்கும் குரலில் சொன்னவன் அவளின் காதுமடல்களில் சூடான முத்தங்களை பதித்தான்.

 

மாலை ஆறு மணியளவில் அரவிந்தன் கிளம்பி ஷோபாவில் அமர்ந்தபடி விவேக்கிடம் போனில் பேசிக்கொண்டிருக்க, காவ்யா மிகவும் சிரத்தையோடு பெட்ரூமில் கிளம்பிக்கொண்டிருந்தாள். அதுவரை அருகிலிருந்து சீண்டிக்கொண்டிருந்தவனை  வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி,  கவனமாக அலங்கரித்துக்கொண்டிருந்தாள்.

அமெரிக்கா வந்த பிறகு முதல் பார்ட்டி என்பதாலும், அரவிந்தனோடு வேலை பார்ப்பவர்களையும்   அவர்களின் குடும்பத்தாரையும் முதன் முதலில் பார்க்கப்போவதாலும் புடவையில் வருவது என முடிவுசெய்து அரவிந்தனிடம் கேட்க, "உனக்கு comfortable ஆ இருந்தா saree ஓகேடா .. அதுவில்லாம நீ எது போட்டாலும் அழகா இருப்ப.. " என்று ஆரம்பித்து விட்டான்.

அரவிந்தனின் சர்ட்க்கு பொருத்தமாக அழகிய பர்பிள் நிற ஆர்கன்சா புடவையும் அதன் பார்டருக்கு பொருத்தமாக அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அடர் பிங்க் நிற பிளவுசும் அணிந்து, பிரெஞ்சு பிரைடும் காதில் புதிய டிசைனில் பெரிய ஜிமிக்கியுமாக தேவதையாய் பளிச்சென்று கிளம்பி வந்தாள்.

அவளை பார்த்ததும், அவசரமாக பை சொல்லி போனை வைத்தவன் மனைவியின் அழகில் சொக்கித்தான் போனான். "ஹே காவ்யா, எவ்ளோ அழகா இருக்க தெரியுமா.. கொல்றடி என்னை" என்றபடியே அவளது அலங்காரம் கலையாமல் மெலிதாய் அணைத்து முத்தமிட்டான். கணவனின் பாராட்டுதலில் முகத்தில் பெருமை பொங்க "ஹ்ம்ம் அப்பறம்.. இவ்ளோ ஹாண்ட்ஷமான உங்களுக்கு கொஞ்சமாவது மேட்ச் ஆகணும்ல.." என்றபடியே கணவனின் சர்ட்டை சரிசெய்தவள் "போகலாம் அத்தான்.. நான் ரெடி" என்றாள்.

"ஹ்ம்ம் கண்டிப்பா போகணுமா.. இப்படியே உட்கார்ந்து பேசிட்டே இருக்கலாமே " என்றவனை பொய்கண்டிப்புடன் "அத்தான்.. விளையாடாதீங்க.. ஏற்கனவே லேட்.. போலாம் வாங்க "  என்று சிணுங்கியவளை பார்த்து "ஓகே ஓகே.. lets go " என்று சிரித்தபடியே கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

வீட்டிலிருந்து அரைமணி நேர பயணத்தில் அந்த அழகிய குடியிருப்பு பகுதியில் உள்ள ரகுவின் வீட்டை அடைந்தனர். வரிசையாக அணிவகுத்து நின்ற மாளிகை போன்ற வீடுகளை பார்த்ததும் "வாவ் அத்தான்.. அமெரிக்கால வீடெல்லாம் அபார்ட்மெண்ட் டைப்பிலதான் இருக்கும்னு நெனச்சேன்.. இந்த கம்யூனிட்டி அழகா இருக்கு அத்தான்.. வீடெல்லாம் பாக்க நம்ம தாத்தா வீடு மாதிரி இருக்குல்ல" என்று ஆச்சர்யாமானாள்.

"ஹ்ம்ம் ஆமாடா.. நீ மட்டும் இங்க செட்டில் ஆக ஓகேன்னு சொல்லு.. ரகு வீட்டு பக்கத்துலயே இதே மாதிரி வாங்கிடலாம் " என்றான்.

அவசரமாக "இல்ல அத்தான்.. நாம இதே மாதிரி ஆனா இந்தியால வாங்குவோம்..இப்போ நம்ம ரெண்டு பேருக்கு நம்ம வீடே ரொம்ப பெருசுதான்  " என்று சொல்லியபடியே காரிலிருந்து இறங்கியவள் புடவையை சரிசெய்து கொண்டாள்.

வரும் வழியில் வாங்கிக்கொண்ட  கிப்ட்களை காவ்யா எடுத்துக்கொள்ள, ஜோடியாக இருவரும் வீட்டினுள்ளே நுழைந்தனர். வீடு முழுதும் அலங்கார விளக்குகளால் அலங்கரிப்பட்டிருக்க, குழந்தைகள் அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தனர். வாசலிலேயே அவர்களை பார்த்த ரகு, மனைவியை அழைக்க, தம்பதியராய் இருவரும் அரவிந்தனையும் காவ்யாவையும் வரவேற்றனர். காவ்யாவின் அழகில் சற்றே தடுமாறிய ஷோபா நாற்பதின் ஆரம்பத்தில் படிப்புகளையோடு ஸ்லீவ்லெஸ் பிளவுசும் லைட் வெயிட் பட்டுபுடவையுமாய் சிரித்தமுகத்தோடு வரவேற்றாள்.

"ஹாய் ஹண்ட்ஸம்" என்று அரவிந்தனை வரவேற்றவள் "Hello  காவ்யா .. come on in..You know what.. you look soo pretty" என்று அவளை கைகளை பிடித்து உள்ளே அழைத்துச்சென்றாள். நட்போடு சிரித்துக்கொண்ட ரகுவை பார்த்ததும் காவ்யாவுக்கு அரவிந்தன்  "ரகு எனக்கு அண்ணன் மாதிரி"  என்று சொல்வது  நினைவுக்கு வந்ததும் "அத்தான் சொல்வது சரிதான்" என்று எண்ணிக்கொண்டு சிரித்தவாறே உள்ளே சென்றாள்.

ஏற்கனவே வந்திருந்த மற்ற நண்பர்களையும் அவர்களது மனைவிகளையும் காவ்யாவுக்கு ஷோபா அறிமுகப்படுத்த, காவ்யாவின் கண்களோ அவளையுமறியாமல் மோனாவை தேடின.

ரகுவின் மூன்று வயது குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளறையில் இருந்து வந்த அந்த நவ நாகரிகமான பெண்ணை கண்டதும் மோனவாகத்தான் இருக்கவேண்டுமென்று அவள் நினைத்த அதேநேரத்தில் ஷோபாவும் "Kavya, this is Mona.. and Mona this is Aravind’s wife Kavya "என்று தயக்கத்தோடு சொல்லி முடித்தாள்.

ஒரு வினாடி காவ்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தவளுக்கு  அரவிந்தன் ஏன் தன்னை மறுத்தான் என்று புரிந்தது. மாமன் மகள் என்றதும் எதோ படிக்காத கிராமத்து பெண்ணாக இருப்பாள் என்று நினத்தவளுக்கு வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதையைப்போல, அவனுக்கு இணையான உயரத்துடனும் படிப்பும் பண்பும் தந்த கூடுதல் அழகுடனும் உயர் குடும்பத்தில் வளர்ந்த மிடுக்குடனும் அவனருகே நின்றவளை மற்ற விருந்தினர்கள்போல தானும் மெய்மறந்து ரசிக்க ஆரம்பித்தாள்.

Saturday, November 7, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 6

 

எதற்காக மோனா அத்தான் எண்ணுக்கு அழைக்கிறாள் என்ற சஞ்சலத்துடன் அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று காவ்யா யோசித்துக்கொண்டிருக்கும் போதே அழைப்பு நின்றுவிட்டிருந்தது. 

எத்தனை அழகாய் எத்தனை உண்மையாய் தன் வாழ்க்கையில் சந்தித்த பெண்களை பற்றியும், தன்மீதுள்ள உண்மையான காதலைப்பற்றியும் தாயிடம் அனைத்தையும் சொல்லும் குழந்தைபோல சொன்னவரை பற்றி இன்னமும் கவலைகொள்ளும் தன் மனதை கண்டித்துவிட்டு, அத்தான் வந்ததும் மோனா அழைத்ததை பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தவளாக தன் போனை எடுத்து வாட்ஸாப்ப்க்கு சென்று மெசேஜ்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளது தோழிகளிடமிருந்தும் மித்ராவிடமிருந்தும் வந்தவற்றை பார்த்துக்கொண்டே வந்தவள், பவித்ராவிடமிருந்து வந்திருந்த மெசேஜை பார்த்ததும் சந்தோஷத்தில் பூரித்துப்போனாள்.

"Hai காவ்யா..I hope you and Arvind are doing good.. ஒரு சந்தோஷமான நியூஸ்..I am pregnant.. in 6th week now.. இன்னைக்குத்தான் டாக்டர் confirm  பண்ணாங்க .. உனக்குத்தான் மொதல்ல சொல்லணும்ன்னு நெனச்சேன்.. அம்மாகிட்ட கூட இனிமேதான் சொல்லப்போறேன்.. பிரீயா இருக்கிறப்போ கால் பண்ணு” என்ற அவளின் மெசேஜை மனதில் நெகிழ்ச்சியோடும்  முகத்தில் புன்னகையோடும் பார்த்துக்கொண்டிருந்தவளை,

 "wow!! என் ஏன்ஜெல் இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கே " என்றவாறே கிச்சனுக்குள்  நுழைந்த அரவிந்த், அதே வேகத்திலேயே அவளை இழுத்து அணைக்க, அவனது அணைப்பும், அவளுக்கு மிகவும் பிடித்த அவனது perfume வாசனையும் அவளை மயக்க,  சுதாரித்துக்கொண்டு தன்னிலைக்கு வந்தவள்,

"அத்தான்.. குளிச்சிட்டு இனிமே நேரா சாமி கும்பிட்டுதான் மத்த வேலையெல்லாம் .. வாங்க" என்று அவனை பூஜை அறைக்கு இழுத்து சென்றாள்.

பூனைக்குட்டியாய் அவளோடு சென்றவன் அவளை ரசித்துக்கொண்டே  நின்றிருக்க, விளக்கின் திரியை தூண்டி விட்டபடியே "ஹ்ம்.. சாமி கும்பிடுங்க அத்தான்" என்றதும்   சிரித்தபடியே    கையெடுத்து கடவுளை வணங்கிவிட்டு விளக்கை தொட்டு கும்பிட்டான்.

அவனை ஆசையாய் பார்த்தவாறே "அத்தான்.. நீங்க வரப்போ நான் ஏன் சிரிச்சிட்டு இருந்தேன் தெரியுமா? பவித்ரா இல்ல .. அவங்க மெசேஜ் பண்ணியிருந்தாங்க..அவங்க இப்போ pregnent ஆ இருக்காங்களாம்.. இன்னைக்குத்தான் confirm ஆச்சாம்" கண்களில்  மகிழ்ச்சியோடு நாணமும் கலந்து சொன்னவளை அன்பொழுக பார்த்தவன், அடுத்தவரின் சந்தோஷத்திலும் எத்தனை சந்தோசப்படுகிறாள் என்று அவளை நினைத்து  பெருமை பட்டவாறே “wow really great newsடா.. ரொம்ப ஹாப்பியா இருக்கு.. பிரேம் வீட்ல எல்லாருக்கும் பயங்கர ஹாப்பியா இருக்கும்ல.. நம்ம வீட்ல கூட எல்லாரும் ரொம்ப சந்தோசபடுவாங்க.. "  என்றான்.

"ஆமா அத்தான்.. பவித்ரா இன்னொன்னும் சொன்னாங்க.. இந்த ஹாப்பி நியூஸ்ச மொதல்ல நம்மகிட்டேதான் சொல்லணும்னு நினைச்சாங்களாம்.. பெரியம்மாகிட்ட கூட இனிமேதான் சொல்ல போறாங்களாம்.. பவித்ரா நெறய change ஆகிட்டாங்க.. இல்ல அத்தான் " என்றாள்.

"ஹ்ம்ம் அவளுக்கு உன்ன ரொம்ப பிடிச்சி போய்டிச்சி காவ்யா.. அவ நல்லா இருக்கணும்னு நீ ஆசைப்பட்ட இல்ல? அத நல்லா புரிஞ்சிகிட்டா..  நானும் அப்பாவும் கூட அத்தையும் பவித்ராவும் இப்டித்தான்னு இரிடேட் ஆகிட்டோம்.. ஆனா அம்மாவும் நீயும் கிரேட்.. அவங்க என்ன பண்ணாலும் பொறுத்துகிட்டு அவங்களுக்கு நல்லதே பண்ணீங்கல்ல..so she was moved.. அதைவிட ஆச்சர்யம் அத்தை மாறினதுதான்..” என்றான் மனநிறைவோடு.

"ஹ்ம்ம்.. சரி அத்தான் வாங்க சாப்பிடலாம்.. சாப்பிட்டுட்டு  பவித்ராவுக்கு அப்பறம் அத்தை மாமாவுக்கும் கால் பண்ணலாம். நைட் அம்மா அப்பாட்ட பேசலாம்.. அப்பா ஏர்லி மர்னிங் தான் வீட்ல இருப்பாரு.." என்று சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு ஹ்ம்ம் கொட்டியவாறே  ஏதோ யோசனையில் இருந்தான் அரவிந்த். "என்ன அத்தான்.. என்ன யோசிக்கிறீங்க?" என்று தட்டில் சர்க்கரைப்பொங்கலை பரிமாறியவளை காதலுடன் பார்த்தவன்  "காவ்யா, பவித்ரா conceive ஆனதுக்கே நாம இவ்ளோ சந்தோசப்படறோமே.. நமக்குன்னு வந்தா எப்படி இருக்கும்..?" என்று கண்களில் சந்தோசம் மின்ன கேட்டவனை கண்கள் சட்டென்று கலங்க பார்த்தவள் "அந்த நாளுக்காக நா காத்திருக்கேன் அத்தான்" என்றாள்.

"சாரி டா என்னால தான் நமக்கு இன்னும் அந்த சந்தோசம் கிடைக்கல இல்ல.. இப்போகூட நீ சொன்னா நம்ம முடிவை மாத்திக்கலாம்டா " என்றான் காதலொழுக.

அரவிந்த் திருமணமான அன்று இரவே அவளிடம் குழந்தை பற்றி பேச்சை எடுத்திருந்தான். "காவ்யா, நாம ரெண்டு பேரும் எத்தனை ஆசையோட எத்தனை காதலோடு நம்ம வாழ்க்கைய ஆரம்பிச்சிருக்கோம்.. கொஞ்ச வருசத்துக்கு லைப் எ என்ஜாய் பண்ணுவோம்.. நெறய ட்ராவல் பண்ணுவோம்.. திகட்ட திகட்ட லவ் பண்ணுவோம்.. அதுக்கப்பறம் குழந்தை பெத்துக்குவோம்.. நம்ம குழந்தைக்கு நம்ம நல்ல பேரெண்ட்ஸா இருக்கணும்..  அதுக்கு நாம பிரிப்பர் ஆகணும்.. அதுவுமில்லாம நீ சின்ன பொண்ணு காவ்யா.. இப்பவே உனக்கு அவ்ளோ பெரிய ரெஸ்பான்சிபிலிட்டி வேணாம்.. என்னதான் நான் கூட இருந்தாலும் அந்த வலியும் வேதனையும் நீதானே படணும்.. அதை நெனச்சாலே எனக்கு கஷ்டமா இருக்கு " என்று நிறுத்தியவன் சட்டென்று "இதெல்லாம் நான் நினைக்கறது.. பட் உனக்கு பிடிக்கலைன்னா இந்த பிளானிங் எல்லாம் வேணாம்" என்றான்.

கணவனின் அன்பில் உருகியவள் அவன் நெஞ்சில் சாய்ந்தவாறே, "அத்தான் நீங்க எது சொன்னாலும் அது நம்ம நல்லதுக்குதான் இருக்கும்.. என்னைவிட உங்களுக்குதான் குழந்தைங்கனா ரொம்ப பிடிக்கும்.. நீங்க எப்போ சொல்றீங்களோ அப்பவே பெத்துக்குவோம். எனக்கு குழந்தையை விட நீங்க தான் அத்தான் முக்கியம்" என்றவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டான்.

அந்த நாளை நினைவு கூர்ந்தவள் "அத்தான் அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன்.. நம்ம அன்புக்கு அடையாளமா வரபோற அந்த குட்டி ஜீவனுக்காக நான் காத்திட்டு இருக்கேன்.. ஆனா அது நீங்க சொன்ன மாதிரியே கொஞ்ச வருஷம் கழிச்சி வரட்டும்.. இப்போதைக்கு உங்கள கவனிச்சிக்கறதும் உங்கள என் உயிருக்குயிரா நேசிக்கறது மட்டும் தான் செய்யப்போறேன்.. அதுக்கு யாரும் போட்டிக்கு வரக்கூடாது.. நம்ம குழந்தைகூட " என்று கண்களை சிமிட்டி அழகாய் சிரித்தாள் காவ்யா.

தானும் சிரித்தபடியே, சக்கரை பொங்கலை அவளுக்கும் ஊட்டிவிட்டுக்கொண்டே தானும் சாப்பிட்டான் அரவிந்தன் மனம் முழுதும் சந்தோசமாய்.

"எப்படி இருக்கு அத்தான்? இன்னிக்குத்தான் first time பண்ணிருக்கேன்" என்றாள் கண்கள் படபடக்க.

"ரொம்ப நல்லா இருக்கு காவ்யா.. actually அம்மா பண்றதைவிட நல்லா இருக்கு.. " என்று சிரித்தவன் "அம்மா பாவம் இல்ல காவ்யா.. உன்ன கஷ்டப்படுத்தினமாதிரி அம்மாவையும் ரொம்ப படுத்திட்டேன்.. பாவம் எப்போ போன்ல பேசுனாலும் கல்யாணம் பத்திதான் பேசுவாங்க.. நான் அவங்களுக்கு சரியான பதிலே சொல்ல மாட்டேன்.. கண்டிப்பா நான் வேற யாரையோ லவ் பண்ணறேன்னு நெனச்சிருப்பாங்க.. அப்படி ஏதாவது இருந்திருந்தா அவங்க ஆசையை விட, உன்ன பத்தி நல்லா புரிஞ்சிதால , நீ கஷ்டப்படுவீயேன்னுதான் பயந்திருப்பாங்க.. உன்மேல அவங்களுக்கு இருக்கற பாசம் இருக்கே.. அப்பா.. உன்கிட்ட இருந்து போன் வந்தாலே அவ்ளோ சந்தோசப்படுவாங்க" என்றான்.

"ஹ்ம்ம் ஆமா அத்தான்.. ஒவ்வொரு டைமும் வீட்டுக்கு வரப்போ என்னென்ன வாங்கிட்டு வருவாங்க தெரியுமா.. ஏதாவது புதுசா டிவில பாத்தாங்கன்னா ஒடனே எனக்கும் மித்ராவுக்கும் வாங்கிட்டு வந்துருவாங்க.. புதுசா குர்தி வந்தாலும் சரி புதுசா சாரி மாடல் வந்தாலும் சரி .. அதுதவிர பர்த்டேக்கு நகை, புது போன் இப்படி ஏதாவது..அம்மா கூட சொல்லுவாங்க .. ஏன் இப்படி செலவு பண்றேன்னு.. இந்த மித்ரா இல்ல ஏதாவது வேணும்னா சித்திகிட்ட கேப்பா அவங்க நோ சொல்லிட்டா நேரா அத்தைக்கு கால் பண்ணி கேட்டுருவா.. மறுநாளே வாங்கிட்டு வந்துருவாங்க.. அண்ணன்ங்க குடும்பம்னா உயிர் அவங்களுக்கு" என்று காவ்யாவும் அத்தையை மெச்சிக்கொண்டாள்.

குடும்பத்தினரை பற்றி பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள், மறுநாள் அரவிந்தன் வேலையில் சேரவேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, மதியத்திற்கு மேல் ஷாப்பிங்கும் மாலையில் அருகிலுள்ள லேக்குக்கும் செல்லலாம் என்று முடிவு செய்தனர்.

லேப்டாப்பை ஆன் செய்து பவித்ராவுக்கு வீடியோ கால் செய்தவர்கள் அவளிடமும் அவள் குடும்பத்தாரிடமும் பேசினர். பிரேம் முகமெல்லாம் சிரிப்பாக இவர்களிடம் "உங்க ரெண்டு பேருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்..உங்களை பவி மீட் பண்ணலன்னா எங்க லைப் வேற மாதிரி இருந்திருக்கும்" என்றான் உணர்ச்சிபூர்வமாய். "அண்ணா.. பழசெல்லாம் விடுங்க.. பவித்ராவை நல்லா பாத்துக்கோங்க.. நாங்க பிரே பண்ணிக்கறோம்.. உங்க ஜூனியர்அ பார்க்க நாங்க வைட்டிங்" என்றாள் காவ்யா.

பவித்ரா "காவ்யா எங்களுக்கும் குட்டி காவ்யா இல்ல குட்டி அரவிந்த் பாக்கணும்ன்னு ஆசையா இருக்கு.. நீங்களும் சீக்கிரம் குட் நியூஸ் சொல்லுங்க" என்று அவளை கலாய்க்க சிரித்துக்கொண்டாள் காவ்யா.

நால்வரும் கேலியும் கிண்டலுமாய் பேசிக்கொள்ள நேரம் போனதே தெரியவில்லை. ஒருவழியாக பேசிமுடித்தவர்கள் வசந்தாவையும் அழைத்து பேசினர். மகனையும் மருமகளையும் சேர்த்து பார்த்தவள் கண்கள் ஆனந்தத்தில் கலங்க, சுகுமாரன் மகனிடம் "இந்த தாய்குலத்துக்கு சோகம் வந்தாலும் அழுகைதான்.. சந்தோசம் வந்தாலும் அழுகைதான்பா " என்று கலாய்க்க கணவனை முறைத்தவள் "அது உங்களுக்கு புரியாதுங்க.. என் மகனையும் மருமகளையும் இப்படி பார்க்கறது எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா.. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடிகூட இதெல்லாம் நடக்குமான்னு நமக்கு தெரியாது.. எல்லாம் நான் நினைச்ச படி நல்ல படியா முடிஞ்ச சந்தோஷத்துல நான் இருக்கேன்.. " என்றாள்.

அத்தையை பார்த்து பாசத்துடன் "அத்தை, உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நீங்க நினைச்சதெல்லாம் கண்டிப்பா நடக்கும்.. நான் உங்கள மாதிரியே அத்தானை நல்லபடியா கவனிச்சிக்குறேன்.. நீங்க நிம்மதியா மாமாவை பாத்துகிட்டு உங்க உடம்ப பாத்துகிட்டு சந்தோசமா இருங்க " என்றாள் கனிவாய்.

  "சரிடா.. நீ என்னைவிட அவனை நல்லா பாத்துக்குவ.. எனக்கு தெரியும்டா.. என் பயமெல்லாம் நீ தனியா அங்க கஷ்டபடுவியேன்னுதான்.. இங்க எல்லாத்துக்கும் வேலையாள் இருந்தாங்க.. உன்ன ராஜாத்தி மாதிரி வச்சிருப்போம்.. அங்க எல்லா வேலையும் நீங்க தான செய்யணும்" என்றாள்.

முகத்தில் பொய்யான கோபத்துடன் அரவிந்த் " அம்மா இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. நாலு வருஷமா நானே சமைச்சி நானே தனியா கஷ்டப்பட்டுட்டு இருந்தேன்.. அப்போல்லாம் இந்தமாதிரி கவலைப்படாம இப்போ மருமகளுக்கு மட்டும் கவலைப்படுற" என்றான்.

"அது ஏன்னா நீ என் பையன்.. என் பையன் கஷ்டப்படலாம் .. ஆனா வள்ளியோட புள்ள கஷ்டப்படக்கூடாதுப்பா.. அவளுக்கு நான் வாக்கு கொடுத்திருக்கேன்.. அவ குழந்தையை நாங்கெல்லாம் சேர்ந்து நல்லபடியா வளப்போம்னு" என்று பழைய நினைவுகளில் மூழ்கியபடியே வசந்தா சொல்ல, காவ்யாவின் கண்கள் எந்நேரமும் கலங்கலாம் என்று நினைத்தவன் அவள் தலையை பக்கவாட்டில் தன்னோடு சாய்த்துக்கொண்டு அம்மாவிடம் "அம்மா.. கவலைப்படாத.. நீ கொடுத்த வாக்கு எப்பவும் பொய்யாகாது.. நான் இவளை நல்லபடியா பாத்துப்பேன்.. சரியா ? நீ உடம்ப பாத்துக்கோ.. கொஞ்சநாள் தாத்தா வீட்ல போய் இரும்மா.. " என்று சொல்லி இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்.

சட்டென்று நினைவு வந்தவளாக "சாரி அத்தான்.. சொல்லவே மறந்துட்டேன்..நீங்க குளிச்சிட்டு இருந்தப்ப மோனாகிட்ட இருந்து கால் வந்தது.. நீங்க வந்ததும் சொல்லணும்னு நெனச்சேன்.. பட் பவித்ரா மெசேஜை பார்த்ததும் அப்படியே மறந்துட்டேன்" என்று அவனது போனை கொண்டு வந்து கொடுத்தாள்.

மோனாவைப்பற்றி எல்லாம் தெரிந்தும் அவளது போன் கால் என்று தெரிந்தும் தன்னிடம் வந்து சொல்கிறாள் என்றால் தன் மீது எத்தனை நம்பிக்கை அவளுக்கு என்று அவளை நினைத்து பிரமித்தவனாய் "மோனாவோட பழைய நம்பர் தான் என்கிட்ட இருந்திச்சி ..அதை டெலிட் பண்ணிட்டேனா இல்ல பண்ணலயாண்ணே எனக்கு ஞாபகம் இல்ல.. இப்போ எதுக்கு கால் பண்ணறான்னு தெரியலையே.. விடு பாத்துப்போம்.." என்றவனை "இல்ல அத்தான்.. நான் உங்களுக்கு அட்வைஸ் பண்றேன்னு நினைக்காதீங்க.. ப்ளீஸ் கால் பண்ணி என்னன்னு கேளுங்க.. அவங்கள எதுக்காகவும் அவாய்ட் பண்ணாதீங்க.. ஒரு கலீக்குக்கு என்ன மரியாதை தரணுமோ அதை எப்பவும் கொடுங்க.. நார்மலா இருந்தாதான் அவங்களும் நார்மலா பீல் பண்ணுவாங்க" என்று தயக்கத்துடன் சொன்னவளை மூக்கை பிடித்து கொஞ்சியவாறே "ஓகே மேடம்.. கால் பண்றேன்" என்றுவிட்டு அதே நம்பரை கால் செய்தான்.

Tuesday, November 3, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 5

            ழகாய் விடிந்தது ஞாயிற்றுக்கிழமை. எங்கிருந்தோ வந்த சிறு பறவையின் இனிய கீச் கீச்சென்ற சத்தம் கேட்டு கண்விழித்தாள் காவ்யா. எதிரிலுள்ள சுவரில் மாட்டியிருந்த அழகிய கடிகாரம் காலை மணி ஏழு எனக்காட்டியது. 

            நாலைந்து நாட்களுக்குப்பின் இன்றுதான் அவளுக்கு அமெரிக்கா நேரம் செட்டானது போல தோன்றியது. தன்னை சுற்றி வளைத்திருந்த அரவிந்தனின் கைகளை  மெல்லிய நாணத்தோடு மெதுவாக விடுவித்துவிட்டு, குழந்தையாய் அசந்து தூங்கிக் கொண்டிருப்பவனின் தலையை காதலோடு வருடி, நெற்றியில் மென்முத்தமிட்டாள். 

            படுக்கையில் எழுந்து உட்கார்ந்தவாறே கழுத்தில் தொங்கிய, இன்னமும் புது முறுக்கு கலையாத தங்க சங்கிலியில் கோர்த்த தாலியை  இரு கைகாளாலும் எடுத்து பார்த்து கொண்டவள் உடலில் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தாள். ஒரு பெண்ணிற்கு  இந்த தாலி  எத்தனை விதமான உணர்வுகளை தருகிறது. எத்தனை கௌரவத்தை அள்ளி தருகிறது.  

            சமீப காலங்களில் தாலி பெண்ணடிமையின் சின்னமாக சிலரால் கருதப்பட்டாலும் கணவனை நேசிக்கும் பெண்கள் இன்னமும் தாலியையும் நேசிக்கத்தான் செய்கிறார்கள்.. அதிலும் என் அத்தான்.. என் அன்பு அத்தானுக்காக தாலி என்ன பெரிய மலையை சுமக்க கூட நான் தயார்.. என்று நினைத்துக்கொண்டவள் அவளது தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள்.

            திருமணம் முடிந்து இரண்டு மாதங்களுக்குள் அவர்கள் அமெரிக்காவுக்கு கிளம்ப வேண்டி இருந்ததாலும்  திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை மாதங்களில் தான் தாலி பிரித்து கோர்க்கவேண்டுமாதலாலும், தை மாதம் திருமணம் முடிந்த கையோடு அதே மாதத்தில்  தாலி பிரித்து கோர்க்கும் விஷேசத்தையும் விமரிசையாக நடத்தினர் பெரியவர்கள். 

            காவ்யாவின் வீட்டில் வைத்து முக்கியமான உறவினர்கள் மற்றும் ஊரிலுள்ள சுமங்கலிகளை அழைத்து திருப்தியாக செய்தனர். திருமணம் முடிந்து பதினைந்து நாட்களிலேயே  விஷேசம் வந்ததால், புதுபெண்ணுக்கேயுரிய      நாணத்தோடு காவ்யாவும் முகமெல்லாம் சிரிப்பாக அரவிந்த்தும் தம்பதியராக மணப்பாயில் கிழக்கு முகம் பார்த்து  அமர்ந்திருந்தனர். 

            திருமணத்திற்கு எடுத்து பட்டு புடவை மற்றும் வேஷ்டியையே உடுத்தவேண்டும் என்ற சம்பிரதாயத்தின்படி, அவர்கள் அதே உடையில் இருந்தாலும் சிவகாமி பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும்  புதுஉடைகள் எடுத்து தாம்பாளத்தில் சீர் வரிசையோடு வைத்திருந்தாள். 

            

            ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்த குடும்பத்தாரை நினைத்து மனம் நெகிழ்ந்து கண் கலங்கும் போதெல்லாம் அரவிந்த் தான் ஆறுதல் சொல்வான். 

            "காவ்யா.. அவங்க பொண்ணுக்கு அவங்க செய்றாங்க.. நீதான் இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்க.. அவங்க எல்லாம் எப்பவும் போல இருக்காங்க.. நீ எப்பவும் இந்த வீட்டு இளவரசி தான்.. அதுவில்லாம இப்போ என் பொண்டாட்டி.. உனக்கு செய்யாம யாருக்கு செய்யப்போறாங்க.. அத்தை மாமா முகத்துல எவ்ளோ சந்தோசம் பாத்தியா? நீ இப்படி யோசிக்கறன்னு  தெரிஞ்சாலே வருத்தப்படுவாங்க. சந்தோஷமா இருடா.. " என்று அவ்வப்போது கிசுகிசுப்பாக சொல்லி அவள் மனதை மாற்றுவான்.

            எத்தகைய சூழ்நிலையிலும் தன் மனதை படித்துவிடுவதோடு அதற்கு மருந்தாகவும் இருக்கும் தன் கணவனை நெஞ்சில் சுமப்பவளுக்கு அவளது தாலி ஒரு புனிதமான உணர்வைத்தர கண்களில்  ஒற்றிக்கொண்டவள், ஒரு  நிமிடம் கண்கள் மூடி அரவிந்த்காகவும் குடும்பத்தில் அனைவருக்காகவும் கடவுளிடம் வேண்டிக்கொண்டாள் 

            இந்த பழக்கம் அவளுக்கு அமிர்தம் அம்மாளிடம் இருந்து வந்திருந்தது. எப்போதும் அவர் எழும்போது தாலியை கண்களில் ஒற்றிக்கொள்வதையும் ஒருநிமிடம் கண்மூடி வேண்டுவதையும் பார்த்து சிறுவயதிலேயே ஒருநாள் கேட்டாள். "ஏன் பாட்டி, தூங்கி எழுந்ததும் தினமும் இந்த மாதிரி பண்ற?"  என்று கேட்டவளை கன்னத்தை தட்டி "காலையில எழுந்ததும் நம்ம மனசு இந்த உலகத்துல இருக்கற கெட்ட ஷக்திகளோட ஆதிக்கம் இல்லாம பரிசுத்தமா இருக்கும்.. அந்த நேரத்துல நம்ம புருஷன் நல்லபடியா இருக்கணும்னு  நாம மனசார வேண்டிக்கிட்டோம்னா அவங்க நூறு வயசுக்கு நல்ல ஆரோக்கியதோட சந்தோசமா இருப்பாங்க.. வீட்டு ஆம்பள சந்தோசமா இருந்தா அந்த வீடே சந்தோசமா இருக்கும்.. நான் இதனை வருஷமா உங்க தாத்தாவுக்காக எழுந்ததும் வேண்டிக்குவேன்.. அதான் உங்க தாத்தா ஜம்முன்னு ராஜா மாதிரி இருக்காரு" என்று சிரித்தவாறு சொன்னது அவள் மனதில் ஆழ பதிந்திருந்தது. 

            கிட்டத்தட்ட மறுநாளிலிருந்தே அரவிந்தனுக்காக காலையில் எழுந்ததும் வேண்டி கொள்ள தொடங்கியிருந்தாள்.

            திருமணம் முடிந்த மறுநாள் அவள் தூங்கி எழுந்ததும் முதன்முதலில் தாலியை கண்களில் ஒற்றிக்கொண்டு அவள் வணங்கியதும் அவளை பார்த்து சிரித்த அரவிந்த் "மேடம் நீங்க ஒரு ME கிராஜுவேட்.. ஆனாலும் கல்யாணம் ஆகிடிச்சின்னா எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் இல்ல ?" என்று கலாய்த்தான். வெட்கம் முகத்தில் படர "இது பாட்டி என் சின்ன வயசுல சொன்னது அத்தான்.. அப்போலேர்ந்து நான் காலையில எழுந்ததும் உங்களுக்காக பிரே பண்ணிப்பேன்.. இப்போ கல்யாணம் ஆனதும் தாலிய தொட்டு கும்பிடுறேன்.. நீங்க நூறு வயசுக்கு ஹெல்த்தியா ஹாப்பியா இருக்கணும்.. அதுதான் என் ஆசை"  என்றவளை காதல் பெருக்கெடுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டான்.

          சுகமான நினைவுகளில் மூழ்கியவள், மெலிதாய் சிரித்துக்கொண்டு கட்டிலைவிட்டு எழுந்தாள். கடகடவென்று குளித்து முடித்து, அவனுக்கு பிடித்த வெளிர் நீலநிற குர்தியில், ஈரக்கூந்தலை தளர்வாக கிளிப் செய்து, நெற்றியில் சந்தனகீற்றோடு தேவதையாய் மின்னினாள். 

            பூஜையறையில் சாமி விளக்கேற்றி, அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டவள்,  இன்னும் அரவிந்த் தூங்கிக்கொண்டிருக்க, மளமளவென்று அவனுக்கு பிடித்த இடியாப்பமும் தொட்டுக்கொள்ள காய்கறிகள் போட்ட பாயாவும் செய்து ஹாட்பாக்ஸில் வைத்தாள். 

            எதாவது ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்தவள் வசந்தாவை போனில் அழைத்தாள். மருமகளின் எண்ணை பார்த்ததும் முகமெல்லாம் பரவசமாய் "காவ்யா கண்ணு... எழுந்திட்டயாடா..எப்படிடா இருக்கீங்க" என்றாள். வந்ததிலிருந்து தினமும் ஒரு தடவையாவது  இருவர் வீட்டிற்கும் பேசி விடுவார்கள்.

            அத்தையின் முகத்தை வீடியோ காலில் பார்த்ததும் அவளது சிரிப்பு தன்னையும் தொற்றிக்கொள்ள "நல்லா இருக்கோம் அத்தை.. நான் எழுந்து டிபன் பண்ணிட்டு இருக்கேன்.. அத்தான் இன்னும் தூங்கறாரு.. நல்லா தூங்கட்டும்ன்னு நானும் எழுப்பலை.. எதாவது ஸ்வீட் பண்ணலாம்னு இருக்கேன்.. அத்தானுக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் ஏதாவது சொல்லுங்க அத்தை" என்று மருமகள் கேட்டதும் சந்தோஷத்தில் மனம் நிறைய "அவனுக்கு சர்க்கரை பொங்கல்ன்னா பிடிக்கும்டா.  ஆனா நீ ஏன் கஷ்டப்படற.. இப்போதான் போய்  கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கீங்க.. மெதுவா பண்ணலாம்டா.. நான் சொன்னேன்னு சொன்னா என்னை திட்டினாலும் திட்டுவான் " என்றாள் சிரித்துக்கொண்டே.

 

            "அதெல்லாம் ஒண்ணும் கஷ்டம் இல்ல அத்தை.. அம்மா குக்கர்ல எப்படி பண்றதுன்னு சொல்லி கொடுத்திருக்காங்க..அப்பறம் எல்லா சாமானும் இருக்கு.. நான் அதையே பண்ணிடுறேன்" என்றவளிடம் "சரிடா.. பார்த்து பத்திரமா பண்ணு.. அடுப்படி மட்டும் பழக பழகத்தான் வரும்.. கவனமா பண்ணு.. அரவிந்த ஹெல்ப்புக்கு கூப்பிட்டுக்கோ.. " என்ற அத்தையின் அன்பில் நெகிழ்ந்து  "பரவாயில்ல அத்தை.. அத்தான் பாவம்.. நாளைலேர்ந்து office போகணும் .. இந்த project ரொம்ப கஷ்டமானது வேற .. நெறய வேலை இருக்கும் போல.. " என்று வருத்தத்துடன் சொன்ன மருமகளை நினைத்து பெருமை பட்டுகொண்டாள் வசந்தா. என் மருமகளுக்குத்தான் என் மகன் மீது எத்தனை அக்கறை.. இந்த காதலும் அக்கறையும்தானே என் மகனுக்கு கிடைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. கல்யாணம் முடிந்ததும் என் மகன் முகத்தில் தான் எத்தனை சந்தோசம்.. பெற்றவளுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்.. எப்படியோ நான் நினைத்தபடி இவர்கள் கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.. கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.  

          பிரஷர் குக்கரின் விசில் சத்தத்தில் எழுந்தவன் கிச்சனில் களேபரமாக சமையல் நடந்து கொண்டிருப்பதை வீடு முழுதும் வீசிய நெய்யின் நறுமணத்திலும் சிவகாமி அத்தை செய்யும் அதே குருமாவின் மசாலா வாசத்திலும் அறிந்தவன் சிரித்தவாறே கிச்சனுக்கு சென்றான். 

            விசில் சத்தம் கேட்டு அத்தான் விழித்துக்கொண்டு விடுவாரோ என்று குக்கரின் அருகில் நின்று படபடப்போடு விசில் நிற்கும் வரை டென்ஷனோடு நின்றிருந்தவளை மெதுவாய் நடந்து பின்பக்கமாக சென்று அணைத்துக்கொண்டவன் "குட் மார்னிங்… வாசம் மூக்கை தொளைக்குது.. தனியா ஏன்டா இப்படி கஷ்டப்படற.. என்ன எழுப்ப வேண்டியதுதானே" என்றவனின் சூடான மூச்சுக்காற்று காதோரம்பட்டு அவளை கிறங்கடிக்க சுதாரித்து கொண்டு "அத்தான்.. Please போய் குளிச்சிட்டு   வாங்க .. உங்களுக்கு ஒரு surprise.. உங்களுக்கு பிடிச்ச ஒரு ஸ்வீட் பண்ணிட்டு இருக்கேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. சீக்கிரம்.. " என்று அவனை பாத்ரூமிற்கு தள்ளிக்கொண்டு போனாள்.

            சிரித்தவாறே பாத்ரூமிற்கு சென்று அவன் கதவை சாத்திக்கொள்ள , விட்ட   இடத்திலிருந்து பொங்கலை தொடர்ந்தாள். அவன் மீதுள்ள காதலை பொங்கலில்  நெய்யிலும் முந்திரியிலும் காட்டியவள் அனைத்தையும் எடுத்து டேபிளில் வைத்துவிட்டு அவனுக்காக காத்திருக்கையில் அரவிந்தனின் போன் அடித்தது. எடுத்துப்பார்த்தவள் அது மோனாவிடமிருந்து என்பதை அறிந்ததும் அவளையுமறியாமல் அவள்  மனதின் ஓரத்தில் சிறு அச்சம் எட்டிப்பார்த்தது.

 


உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...