மோனா
வீட்டிலிருந்து இருபது நிமிடங்களில் அரவிந்த் பார்த்திருந்த ஹோட்டல் இருந்தது. காரை
பார்க் செய்துவிட்டு ரிசப்ஷனில் வந்து அவளுக்கான அறையை புக் செய்துவிட்டு அறையின் சாவியை
அவள் கைகளில் கொடுத்தவன், எதோ யோசனையுடன் "மோனா.. நானும் வரேன் வா.. உன்கிட்ட
கொஞ்சம் பேசணும். " என்றதும் மனதோரத்தில் ஒரு மகிழ்ச்சி எட்டிப்பார்க்க
"வா அரவிந்த்.. " என்று முன்னால் சென்றாள்.
அந்த
3 ஸ்டார் ஹோட்டலின் விஸ்தீரமான அறையை திறந்ததும் ரம்மியமான ஒரு மனம் கமழ, அங்கிருந்த
ஓர் சோபாவை காட்டி "உட்காரு.. அரவிந்த்" என்றாள். "ஒரு நிமிஷம்.. ரெஸ்ட்ரூமை
உஸ் பண்ணிட்டு வரேன்" என்று அவன் சென்றதும் மோனாவின் மனம் பலவாறு யோசிக்க தொடங்கியது..
என்ன ஆயிற்று இந்த அரவிந்துக்கு.. இந்த அர்த்த ராத்திரியில் என்கூட வந்தவன் இப்போது
அரைக்கும் வந்திருக்கிறான்.. சற்றே நேரம் வரை எரிந்து விழுந்தவன் ஏன் இப்போது கனிவுடன்
நடந்து கொள்கிறான்.. என் திருமண வாழ்க்கையை பற்றி சொன்னதும் இரக்கப்பட்டு மனம் மாறிவிட்டானா?
இது சரியா இல்லை தவறா? எதுவாக இருந்தாலும் காவ்யா அன்று மார் தட்டி கொண்டாளே.. அவள்தான்
அரவிந்தன் இதயத்தில் குடியிருக்கும் மகாராணி அது இதுவென்று.. இப்போது அவள் கணவனின்
வண்டவாளம் இன்னும் சற்று நேரத்தில் தெரிய போகிறது.. அவன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்ட
போகிறான். என்று நினைத்தவள் சட்டென்று அவளது போனை எடுத்து காவ்யாவின் நமபருக்கு வாட்சப்பில்
மெசேஜ் செய்தாள்.."காவ்யா.. இது மோனா.. உன் காதல் கணவன் இப்போது என்னோடு..
" என்று அனுப்பியதும் அடுத்த செகண்டில் "வாட்?" என்று அனுப்பியிருந்தாள்
காவ்யா. நம்பவில்லையென்றால் நான் போன் செய்து உன்னை லைனில் வைக்கிறேன்.. நீ மியூட்
செய்துவிட்டு லைனில் இரு" என்று கால் செய்துவிட்டு போனை ஒரு டேபிளில் அவன் கண்ணில் படாமல் வைத்தாள்.
ஒன்றும்
புரியாதவளாக விழித்த காவ்யா இவள் என்ன சொல்கிறாள்.. எப்படி என் போன் நம்பர் இவளுக்கு
தெரியும்? என்று பலவாறு குழப்பிக்கொண்டு லைனில் காத்திருந்தாள்.
ஐந்து
நிமிடங்களில் வெளியே வந்தவன் மோனாவை பார்த்து "மோனா ரூம் உனக்கு ஓகே தானே
" என்று கேட்டதும் அது அரவிந்த் குரல்தான் என்று தெரிந்து காவ்யாவின் இதயம் ஒரு
நொடி நின்று போனதுபோல் ஆனது.
மோனா
" இட் ஐஸ் வெரி குட் அரவிந்த்.. ரொம்ப தேங்க்ஸ்! நான் கூப்பிட்டதும் வந்ததுக்கு..
எனக்கு ஏதாவதுன்னா உன்னால தாங்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.. உன்னை எனக்கு பிடிக்க
ஆரம்பிச்சதே உன்னோட இந்த caring natureகாகத்தானே?” என்று வேண்டுமென்றே காவ்யாவுக்கு
கேட்கும்படி அழுத்தி சொன்னாள்.
கண்களில்
நீர் முட்டிக்கொண்டு வர மிகவும் பிரயத்தனப்பட்டு போனை காதில் வைத்து விழாமல் பிடித்திருந்தாள்
காவ்யா.
"அப்பறம்
அரவிந்த் எதுக்கு ரூம்க்கு வரேன்னு பிடிவாதமா வந்த? எங்கிட்ட எதாவது பேசணுமா
" என்று குழைவை வரவழைத்துக்கொண்டு கேட்டதும் சற்றே எரிச்சலடைந்தாலும் தன்னால்
அவளது வாழ்க்கையை கேளிவிக்குறியாய் ஆக்கிக்கொண்டவளை பார்த்து அரவிந்தனுக்கு பாவமாகாத்தான்
இருந்தது.
"மோனா..
இப்படி உட்கார்.. உன்கிட்ட பேசணும் தான்.. ஆனா நீ நினைக்கிற மாதிரி இல்ல.. நீ பண்ண
பைத்தியக்காரதனத்துக்கு அப்பறம் உன்கிட்ட தனியா பேச எனக்கு சந்தர்ப்பமே கிடைக்கல..
இப்போதான் கிடைச்சிருக்கு.. அதான் நானும் ரூமுக்கு வரேன்னு சொன்னேன். மொதல்ல ஒண்ணு
நல்ல புரிஞ்சிக்கோ.. ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருந்தாதான் அது
உண்மையான காதல்.. யாரையும் போர்ஸ் பண்ணி காதலிக்க வைக்க முடியாது.. நானும் காவ்யாவும்
ஒருத்தரயொருத்தர் ரொம்ப ஆழமா காதலிக்கிறோம்.. பிராங்கா சொல்லணும்னா ஒருவேளை நீ என்னை கம்பெல் பண்ணி என்னை கல்யாணம் பண்ணியிருந்தாலும் என் மனசு காவ்யாவைதான்
நினைச்சிட்டு இருந்திருக்கும்.. ஊர் உலகத்துக்காக உனக்கு புருஷனா இருந்தாலும் உனக்கு
உண்மையா என்னால இருந்திருக்க முடியாது.. இப்போகூட
அவகிட்ட பொய் சொல்லிட்டு தான் உனக்கு ஹெல்ப் பண்ண வந்தேன்.. அது உன்மேல உள்ள காதலால்
இல்ல.. நீயும் காவ்யா மாதிரி ஒரு பொண்ணு.. நீ இந்த மாதிரி டெத் பாத்தா பயப்படுவன்னு
எனக்கு தெரியும்.. காவ்யாகிட்ட உண்மையை சொல்லு அவளை தேவையில்லாம குழப்ப வேண்டாம்னுதான்
பொய் சொல்லிட்டு வந்தேன்.. அவளை நான் ரொம்ப நேசிக்கிறேன்..தயவு செஞ்சி எங்க வாழ்க்கைல
எந்த பிரச்சனையும் பண்ணனும்னு நினைக்காத.. அப்பறம் நான் உன்மேல காட்டற அக்கறையை தப்பா
புரிஞ்சிகிட்டு நான் மனசுமாரி உன்கிட்ட ஏதாவது தப்பான உறவு வச்சிப்பேன்னு தப்பி தவறி
கூட நினைக்காத.. soory to say this ..இனிமே இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமான்னு தெரியல..
அதனால எல்லாத்தையும் சொல்லிடுறேன்..”
என்றதும்
சுள்ளென்ற கோபம் முகத்தில் படர "அரவிந்த் ஸ்டாப்.. நா அந்த மாதிரி பொண்ணு கிடையாது
" என்று கத்தியே விட்டாள்.
மெதுவாக
கைகளை தட்டியவன் "எனக்கு தெரியும் மோனா.. நீ அந்த மாதிரி பொண்ணு இல்ல.. அத உனக்கு
புரிய வைக்க தான் நான் இத சொல்ல வேண்டியதா போச்சி.. உனக்கே தெரியத்துல்ல.. இது தப்புன்னு..இனிமே
இந்த மாதிரி பேசாது.. நான் எப்பவும் உன் சொந்தம் ஆக முடியாது.. அத மனசுல வச்சிக்கிட்டு
உனக்கு அமைஞ்ச வாழ்க்கையா நல்லபடியா வாழப்பாரு..
உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் எனக்கு கால் பண்ணு ஆனா ஒரு பிரண்டா,.. ஓகேவா.. பை..
டேக் கேர்" என்றுவிட்டு கதவை சாத்திவிட்டு விருட்டென்று வெளியே வந்தான்.
கண்கள்
ஆனந்தகண்ணீரால் நனைய போனை துண்டிக்க போனவள் "காவ்யா" என்று மோனாவின் குரல்
கேட்டு "ஹ்ம்ம் லைன்ல இருக்கேன் " என்றாள்.
"காவ்யா..
ஒரு ஆம்பள ராத்திரி நேரம் தனியா ஒரு ரூம்ல அதுவும் அவனை மனசார நேசிச்ச ஒரு பொண்ணுகூட
இவ்ளோ டீசெண்டா பேசமுடியும்னா எனக்கு ஆண்வர்க்கத்து மேலயே ஒரு மதிப்பு வருது.. உன்
வாழ்க்கையை தட்டி பறிக்கிறது என் நோக்கம் இல்லாட்டியும் அரவிந்த் என்கிட்ட என் மனசுக்கு
ஏத்தமாதிரி எதாவது பேசுவான் அத உன்னை கேக்க வைக்கனும்ம்னு நெனச்சேன்.. அதுல ஒரு சந்தோசம்
எனக்கு.. ஆனா அவன் பேச்சுலேர்ந்து தெரியுது நீ சொன்னதுதான் கரெக்ட்ன்னு.. நீ சொன்ன
மாதிரி அவன் மனசுல நீதான் மகாராணி.. அத நான் இல்ல யார் வந்தாலும் மாத்தமுடியாது..anyways
good luck.. “என்று சொல்லி போனை துண்டித்தாள். மனம் மகிழ்ச்சியில் நிறைந்தாலும் ஏன்
இதை அத்தான் என்னிடம் சொல்லவில்லை.. என்னிடம் பொய் சொல்லிவிட்டு போவதற்கு என்னத தேவை?
உண்மையை சொன்னால் சராசரி பெண்கள் போல நானும் சந்தேகப்படுவேன் என்று எப்படிஎன்னைப்பற்றி நினைக்கலாம் .. இதுதான் அத்தான் என்னைப்பற்றி புரிந்து
கொண்டதா? என்று சற்று குழம்பித்தான் போயிருந்தாள்.
No comments:
Post a Comment