மும்முரமாக
சப்பாத்தியை தேய்த்துக் கொண்டிருந்த
காவ்யா கைஜாடையில் யாரென்று கேட்டாள். ஒரு நிமிடம் என்று கைஜாடையிலேயே காட்டிவிட்டு
பெட் ரூமிலுள்ள பால்கனிக்கு சென்று க்ளாஸ் ஸ்லைடிங் டோரை சாத்திவிட்டு, "சொல்லு..
மோனா .. என்ன ஆச்சு? ஏன் இந்த நேரத்துல கால் பண்ற" என்றான் சற்றே எரிச்சலுடன்.
"அரவிந்த்,
சாரி.. உனக்கு தெரியுமான்னு தெரியல .. என் அபார்ட்மெண்ட் உன் வீட்லேர்ந்து 5 மினிட்ஸ்ல
தான் இருக்கு.. கீழ் வீட்ல ஒரு அமெரிக்கன்
கப்பில் இருக்காங்க.. ஒரு ஒன் அவர் முன்னாடி
அவங்களுக்குள்ள எதோ சண்டை போல.. அந்த லேடி .. அந்த லேடி அவங்க husbandஐ சூட் பண்ணிட்டு
தன்னையும் சூட் பண்ணிகிட்டாங்க.. ஒரே போலீஸா
இருக்காங்க.. ஆம்புலன்ஸ் அது இதுன்னு பயங்கர க்ரவுடா இருக்கு.. என் ரூம் மேட் வேற இந்தியா
போயிருக்கா..எனக்கு ரொம்ப பயமா இருக்கு அரவிந்த்.. சோபாக்கு கால் பண்ணேன்.. இன்னைக்கு
ஒருநாள் மேனேஜ் பண்ணு.. நாளைக்கு வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க.. அவங்க வீடு
இங்கேயிருந்து ரொம்ப தூரம்.. ரொம்ப லேட்டும் ஆகிடுச்சு.. விவேக்குக்கு போன் பண்ணா,
அவர் வைப் தான் போன் எடுத்தாங்க.. விவேக் தூங்கிட்டு இருக்காருன்னு சொல்லிட்டாங்க..
திலீப் அப்பறம் திவ்யா எல்லாருக்கும் போன் பண்ணி பாத்துட்டேன்.. யாரும் எடுக்கல.. எனக்கு
ரொம்ப லோன்லியா பயமா இருக்கு அரவிந்த்.. ப்ளீஸ் என்னை ஏதாவது ஹோட்டல்க்கு கூட்டிட்டு
போறியா.. இன்னைக்கு நைட் நான் அங்க ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு என்னோட ரிலேட்டிவ் பென்சில்வேனியால
இருக்காங்க.. அங்க போய்க்கிறேன்" என்றவள் குரலில் உள்ள நடுக்கம் அவள் மிகவும்
பயந்து போயிருக்கிறாள் என்று காட்டியது.
"சரி..
உபர் புக் பண்றேன்.. ரகு வீட்டுக்கு போய்டு..நான் வேணும்னா ரகு இல்ல சோபாக்கு கால்
பண்ணி சொல்லிடறேன்" என்றதும்
"இல்ல
அரவிந்த், சோபா அப்படி சொன்னது எனக்கு கஷ்டமா இருக்கு.. அவங்க வீட்டுக்கு போக இஷ்டம்
இல்ல.. ப்ளீஸ் நீ வாயேன் " விசும்பலுடன் சொன்னதும் மனம் சற்றே இறங்க "சரி நான் வரேன்.. பயப்படாம
இரு.. " என்று அரைமனதுடன் சொன்னான்.
போனில்
யாராக இருக்கும்? எதாவது ஆபிஸ் விஷயமாக இருக்கும்.. இல்லையெனில் தனியாக போய் ஒருநாளும்
அத்தான் பேசியதில்லையே .. என்று நினைத்தவள் சப்பாத்தியை சுட தொடங்கியிருந்தாள்.
போனை
வைத்தவன் காவ்யாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, மோனாவை அழைத்துக்கொண்டு ஒரு நல்ல ஹோட்டலில்
ரூம் புக் செய்து கொடுத்துவிட்டு வந்துவிடுவோம் என்று எண்ணியவன் ஒரு நிமிடம் யோசித்தான்.
என்னதான் காவ்யா தன் மீது மலையளவு நம்பிக்கை வைத்திருந்தாலும் தன் கணவன் இன்னொரு பெண்ணுக்கு
அதுவும் அவனை காதலித்த பெண்ணுக்கு உதவ போகிறான் அதுவும் இந்த இரவு நேரத்தில் என்றால்
எந்த பெண்ணுக்குத்தான் நெருடலாக இருக்காது. ஜோசியர் அப்பாவிடம் சொன்ன விஷயமும் அவன்
மனதில் வந்து போனது. அதே சமயம் மோனாவை எக்கேடோ
கெட்டு போகட்டும் என்று விடவும் அவனுக்கு மனமில்லை..
கொஞ்சம்
யோசித்தவன் மனதிற்குள்ளே காவ்யாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கிச்சனுக்கு வந்தான்.
"காவ்யா..
திலீப் அம்மா ஊர்லேருந்து வந்திருக்காங்க இல்ல.. அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம்..
எமர்ஜெண்சிக்கு கூட்டிட்டு போகணுமாம்... அவன் ரொம்ப பயப்படறான்.. என்னை கூப்பிட்டான்..
நான் போயிட்டு ஒரு ஒன் அவர்ல வந்திடுறேன்.. நீ கதவை லாக் பண்ணிட்டு பத்திரமா தூங்கு..
சரியா ?" என்றான்.
"அச்சோ
.. சரி அத்தான்.. எனக்கு ஒண்ணும் பயம் இல்ல.. நீங்க போயிட்டு வாங்க.. ரெண்டு சப்பாத்தி
மட்டும் சாப்பிட்டுட்டு போங்க.. இருங்க நானே ஊட்டிவிடறேன்" என்றவள் சப்பாத்தியை
பிட்டு ஊட்டிவிட தொடங்கினாள்.
இந்த
மோனாவால் என் உயிருக்கும் மேலானவளிடம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொண்டவன்
குற்ற உணர்ச்சியோடு சாப்பிட்டு முடித்தான்.
பத்தே
நிமிடங்களில் மோனாவின் அபார்ட்மென்ட் கட்டிடத்தை அடைந்தவன், போலீசின் ஆயிரத்தெட்டு
கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு அவளது அபார்ட்மென்டின் காலிங் பெல்லை அழுத்தினான்.
கதவை திறந்தவளின் முகம் அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்திருக்க, அவன் உள்ளே சென்றதும்
கதவை சாத்திவிட்டு சட்டென்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு "தேங்க்ஸ் அரவிந்த்..
யாரும் எனக்கு ஹெல்ப் பண்ண வரல.. பட் நீ வருவேன்னு எனக்கு தெரியும் ..ஐ நோ யு ஸ்டில்
லவ் மீ " என்றதும் சட்டென்று அவளை உதறியவன்
"ஹே ஸ்டுபிட்.. நீ கஷ்டத்துல இருக்கன்னு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்.. நீ எதாவது
லூஸ் மாதிரி உளறிட்டு இருக்காத.. டக்குன்னு கிளம்பு.. உன்னை ஹோட்டல்ல விட்டுட்டு நான்
வீட்டுக்கு போகணும்.. காவ்யா தனியா இருக்கா" என்று வார்த்தையில் வெறுப்பை காட்டினான்.
அமைதியாக
ஒன்றும் பேசாமல் ரெடியாக வைத்திருந்த ட்ராவல் பேகை எடுக்க போக, "குடு இங்க"
என்று அவளிடம் வாங்கிக்கொண்டான். அவன் இயல்பாய் செய்வதை அந்த இக்கட்டான நேரத்திலும்
வெகுவாக ரசித்தவள், ஹாண்ட்பேகை மாட்டியப்படி, வீட்டை பூட்டிக்கொண்டு படிகளில் அவனோடு
இறங்கினாள். இவர்கள் கீழிறங்கி வரவும் பிரேதங்களை
ஆம்புலன்ஸில் ஏற்றவும் சரியாக இருந்தது. அதைப்பார்த்ததும் மோனா கைகள் நடுங்க அருகிலிருந்த
அரவிந்தனின் கைகளை இறுக்கமாக பிடித்துகொண்டாள். அவளின் பயத்தை பற்றி நன்கு அறிந்தவனாதலால்,
"ஒண்ணும் இல்ல பயப்படாத.. சீக்கிரம் வா.. கார்ல ஏறு " என்று ஆதரவாக அணைத்து
காருக்கு நடத்தி சென்றான்.
காரில்
ஏறி சீட்டில் அமர்ந்தவளுக்கு காரிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து குடிக்க தண்ணீர்
கொடுத்தான். "தண்ணி குடி.. அண்ட் ஜஸ்ட் ரிலாக்ஸ்..எதையும் நெனச்சி மனச குழப்பிக்காத.. நல்ல ஹோட்டலா பாக்குறேன்..
" என்றபடியே ஐபோனில் தேடியவன் ஒரு குறிப்பிட்ட ஹோட்டலின் அடட்ரெஸ்ஸை கூஜ் மேப்பில்
போட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.
தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டவள் "அரவிந்த்.. வெட்கத்தை விட்டு சொல்றேன்.. I missed
you.. நீ ரொம்ப நல்லவன்.. நீ ஏன் என்னை consider பண்ணல அரவிந்த்.. காவ்யாவோட காதலைவிட
என் காதல் எதுல கொறஞ்சி போயிடுச்சி?.. you know something? எனக்கு கல்யாணம் தான் ஆச்சே தவிர நாங்க இன்னும்
husband and wifeஆ வாழவே ஆரம்பிக்கல.. என்னால
முடியல .. ஆனா அவன்.. அதான் என் புருஷன்.. என்னை ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டான்..
அதான் இந்த onsite offerஐ கேட்டு வாங்கிட்டு
வந்துட்டேன்.” என்றவளை சற்றே கண்ணில் இரக்கத்துடன் பார்த்தான் அரவிந்த். ஒருவகையில்
இதற்கு நாமும் காரணமாகிவிட்டோமே என்று நினைத்தவன் மனதின் ஓரத்தில் அவளுக்காக அனுதாபம்
பிறந்தது.
Varehvah... what an episode... kalakita pa aravind
ReplyDelete