அரவிந்தன்
சில வினாடிகள் தாமதித்து பின்னர் உணர்ந்து, அவளை மெதுவாக கீழே இறக்கிவிட, இருவரின்
முகத்திலும் வெட்கத்தை தாண்டி அசடும் வழிந்தது. மற்ற பெண்களுக்கும் வெட்கமாகிவிட, கயல்விழி
" இதுதான் தம்பி.. உங்க வீட்டுப்பக்கம் வராம இருந்தேன்.. அவர்கூட சொல்வாரு.. புதுசா
வந்திருக்காங்க போய் ஏதாவது ஹெல்ப் பண்ணுன்னு.. ஆனா நீங்க ரெண்டு பேரும் ரொமான்டிக்
கப்பில்ன்னு எனக்கு தெரியும்.. அதான் நீங்க இல்லாதப்போ வந்தோம் , இப்பவும் வந்து ரொமான்ஸ்
பண்ணா நாங்க எப்போதாம்பா மீட் பண்றது.. " என்று சிரித்துக்கொண்டே நீட்டி முழக்கினாள்.
அழகிய
வெட்கச்சிரிப்போடு கையெடுத்து அவளை கும்பிட்டு "அக்கா.. ப்ளீஸ் விட்ருங்க.. தெரியாம
பண்ணிட்டேன்" என்று சொன்னவன் மற்றவர்களை பார்த்து " ப்ளீஸ் .. நீங்க எல்லாம் உட்காருங்க
.." என்று தலையை கோதியவாறே சட்டென்று
உள்ளறைக்கு சென்று மறைந்துகொண்டான்.
காவ்யாவும்
"அது வந்து.. அவர் யாரும் இல்லைன்னு நெனச்சு.." என்று இழுக்கவும் வந்திருந்தவர்களில்
ஒருத்தி "பரவால்லை காவ்யா.. இப்படி இல்லாம இருந்தாதான் நீ கவலைப்படணும்..ஒண்ணும்
பிரச்னையில்ல.. நாங்க நாளைக்கு வரோம்.. " என்று சொல்லி அனைவரையும் இழுத்துக்கொண்டு
கிளம்பினாள்.
அவர்கள்
போனதும் கதவை சாத்திவிட்டு நேராக உள்ளறைக்கு சென்றவள் அவனை காணாமல் சுற்றும் முற்றும்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே கதவின் பின்னிருந்து மெதுவாக வந்து அவளை இறுக அணைத்துக்கொண்டான்.
காதுமடல்களில் முத்தமிட்டபடியே "என் அழகு பொண்டாட்டி..வீட்ல தனியா கஷ்டப்படுவியேன்னு
சர்ப்ரைஸா சீக்கிரம் வந்தா… நீ வீட்ல ஒரு மாநாடே நடத்திட்டு இருக்க " என்று கிசுகிசுத்தான்.
"அத்தான்..
விடுங்க.. பால்கனி கதவு திறந்து இருக்கு.. ஏன் நீங்க போன் பண்ணவே இல்ல .. போன் பண்ணிருந்தா..
" என்றாள் அவன் ஷர்ட் பட்டன்களில் கோலம் போட்டுக்கொண்டே. "ஹ்ம்ம் சொல்லு
..சொல்லு.. போன் பண்ணிருந்தா யாரையும் வீட்டுக்கு கூப்பிடமா எனக்காக வெயிட் பண்ணியிருப்ப
இல்ல?" என்றான் கண்ணடித்தபடியே.
"ஐயோ
போங்க அத்தான்.. போன் பண்ணியிருந்தா உங்களுக்கு பிடிச்ச tiffin எதாவது பண்ணி வச்சிருப்பேன்"
என்றாள் சிணுங்கிக்கொண்டே.
"அதெல்லாம்
ஒண்ணும் வேணாம்.. நம்ம ரெண்டுபேருக்கும் உனக்கு பிடிச்ச ஸ்ட்ராங் காபி போடு .. சேர்ந்து
குடிப்போம்.. நான் பிரெஷ் அப் ஆகிட்டு வந்திடுறேன்"
என்றவன் வருவதற்குள் பாலை காய்ச்சி சுடச்சுட மணக்கும் காபியை இரு கப்புகளில் எடுத்து
வந்தாள் காவ்யா.
காபியை
ருசித்துக்கொண்டே அன்று ஆபிஸில் நடந்தவற்றையெல்லாம் அரவிந்தன் விவரிக்க, ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டவள் தன் அத்தானின் பொறுப்புகளை
அறிந்து முகத்தில் பெருமை பொங்க "உங்களை நெனச்சி எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு
அத்தான்.. உங்க வயசுக்கு இப்பவே ரகு அண்ணாவுக்கு ஈகுவலா பொறுப்பு குடுத்து இருக்காங்க..
எவ்ளோ பெரிய விஷயம் " என்று அழகிய நீண்ட புருவங்களை உயர்த்தி மனதார பாராட்டினாள்.
"ஹ்ம்ம்..
ஆனா எனக்கு ஆக்சுவலி எது பெருமை தெரியுமா? என் கோல்ட் மெடலிஸ்ட பொண்டாட்டிக்கு ஒரு ஐடென்டிட்டி அமைச்சு கொடுக்கறதுதான்" என்றான்
ஒற்றைக்கையால் அவளது விரல்களை அளந்துகொண்டே.
புரியாமல்
அவள் விழிக்க, "ஆமாம்.. காவ்யா உன் திறமையெல்லாம் எனக்கு சமைச்சி போடுறதுலயும்
என்னை கவனிக்கறதுலயும் மட்டும் வேஸ்ட் பண்ணாம நீ உன்னை prove பண்ணனும்.. என்னை விட
நல்லா படிக்கிற பொண்ணு நீ.. பொண்ணுங்கற ஒரே காரணத்துக்காக மட்டும் நீ வீட்ல இருந்து
வீட்டை பாத்துக்கணும்ங்கிறது அநியாயம் இல்ல.. இன்னைக்கு என் டீம்ல ரெண்டு பொண்ணுங்க..
கிட்டத்தட்ட உன்வயசு தான் இருக்கும்.. அவங்க அவ்ளோ தன்னம்பிக்கையோடு சீனியர் மேனேஜர்ஸ்
கிட்ட பேசுறப்போ எனக்கு உன் நியாபகம் வந்து ரொம்ப கில்டியா பீல் பண்ணேன்....” என்றவனை
நன்றி பெருக்கோடு கட்டிக்கொண்டவள்,
"அப்படியெல்லாம்
ஒண்ணும் இல்ல அத்தான்.. நீங்க என்னை ஜாப் போகவேண்டாம்னு சொல்லலேயே.. சொல்லப்போனா எனக்கும்
ஆசைதான். அப்பாவும் அம்மாவும் என்னை அவங்க கண்ணுக்கெட்டுன தூரத்துலயே வச்சிக்கிட்டாங்க..அவங்களையும்
தப்புனு சொல்ல முடியாது.. அவங்க சிச்சுவேஷன் அந்த மாதிரி.. ஆனா எனக்கு பெரிய காலேஜ்ல
படிக்கணும், MS பண்ணனும், சேலஞ்சிங் ஜாப்ல இருக்கணும்…அப்படின்னு நெறய ஆசை
இருந்தது.." என்று அடுக்கிக்கொண்டே போனாள்.
"கவலையேபடாதடா..
ரகு அண்ணாகிட்ட சொல்லி ஒர்க் பர்மிட் விசாக்கு அப்ளை பண்ண முடியுமான்னு செக் பண்றேன்..
உனக்கு பிடிச்சதெல்லாம் செய்யறதுக்கு நம்ம கல்யாணம் தடையா எப்பவும் இருக்க கூடாது..
நெறய பெண்கள் கல்யாணத்துக்கப்பறம் அட்ஜஸ்ட்மென்ட்ங்கிற பேர்ல பிடிச்சதை செய்யாம விட்டுறாங்க.. என்னை கேட்டா
அதுக்கு அவசியமே இல்ல.. ஆண்களுக்கு பிடிச்சதை செய்ற உரிமை இருக்குறமாதிரி பெண்களுக்கும்
இருக்கணும்.. அட்லீஸ்ட் என் பொண்டாட்டிக்கு இருக்கணும்." என்று அவளது தலையை வருடிக்கொடுத்தான்.
“என்னோட
ஐடென்டிட்டிகாக நானே யோசிக்காத விஷயத்தை எனக்காக நீங்க யோசிக்கிறீங்க அத்தான். நீங்க
கிடைச்சதுதான் என் வாழ்க்கையோட பெரிய அதிருஷ்டம்.. இதுக்கு மேல என்னை கிடைச்சாலும்
எனக்கு இவ்ளோ சந்தோஷமா இருக்குமான்னு தெரியல" என்று மீண்டும் அவனை கட்டி கொண்டாள்.
திகட்டாத
இனிய இல்லறம், அரவிந்தனின் பிஸியான வேலை, காவ்யாவிற்கு
அருகிலுள்ள பெண்களுடனான நட்பு, சொந்தங்களோடு போன் கால்கள், ஏரியோர வாக் , வெள்ளிக்கிழமைகளில்
கோவில், வார இறுதியில் நண்பர்களுடன் கெட்டுகெதர்,
ஊர் சுற்றி பார்த்தல் என்று காதலோடு அவர்கள் திருமண வாழ்வின் நாட்கள் இனிதே கழிந்தன.
முழுதாய்
மூன்று மாதங்கள் ஓடிவிட்டிருக்க, ஓர் சனிக்கிழமை இரவு டிவியில் படம் பார்த்து முடித்தவர்கள்
மணி 10 ஆகியிருக்க, இரவு உணவுக்கு சுடச்சுட சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள சுவையான காய்கறி
குருமாவும் செய்தவளுக்கு கூடவே இருந்து உதவியவன், போன் அடிக்கவும் கைகளை துடைத்துக்கொண்டு
ஹாலில் சார்ஜில் இருந்த போனை எடுத்து பார்த்தான். சேவ் செய்யப்படாத எண்ணாக இருக்கவும்
யார் இந்த நேரத்தில் என்று எடுத்து "ஹலோ, அரவிந்த் ஹியர்.. மே ஐ நோ ஹு இஸ் திஸ்
?" என்றான்.
எதிர்
முனையில் தயங்கியவாறே "அரவிந்த்.. நான் மோனா.. " என்றதும் முகம் குப்பென்று
வியர்க்க, சட்டென்று கிச்சனை எட்டி பார்த்தான்.
.
Very nice... great going
ReplyDelete