Saturday, October 17, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 1

 

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஐந்து சிறிய மாகாணங்களில் ஒன்றானதும், கலிபோர்னியா மற்றும் நியூயார்க் மாகாணங்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் அதிகமாக  வசிப்பதுமாகிய நியூ ஜெர்சி மாகாணம்..

கிழக்கு கடற்கரையின் ஓரம் அமைந்து, கார்டன் ஸ்டேட் என்று அழைக்கப்படும் பச்சை பசேலென மரங்கள் சூழ்ந்த அழகிய மாகாணம் அது..

சற்றே குளிரும் அந்த மயக்கும் மார்ச் மாதத்தில் ஒரு அழகிய விடியல்காலை பொழுது.. அழகிய திரைசீலையை தாண்டி பெரிய ஜன்னல் வழியாக வந்த அந்த அதிகாலை வெளிச்சம் முகத்தில் பட்டதும் தூக்கம் களைந்து கண்கள் திறந்தான் அரவிந்த்.

முற்றிலும் புதிதான கண்டத்தில் புதிதான நாட்டில் தன்னை இறுக்கி அணைத்தபடி, தன் நெஞ்சில் முகம் புதைத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் தன் காதல் மனைவி காவ்யாவை அன்போடு பார்த்து புன்னகைத்துக்கொண்டான்.

எத்தனை நிம்மதியாக தூங்குகிறாள்.. எத்தனை அமைதி என்னவளின் முகத்தில்.. இதே அமைதி என்றும் உன் முகத்தில் இருக்கவேண்டும் காவ்யா.. என் உயிரே.. என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன், அவளது தூக்கம் கலையாமல் மெதுவாய் நெற்றியில் முத்தமிட்டான்.

ஆழ்ந்த உறக்கத்திலும் அவனது ஸ்பரிசத்தை  உணர்ந்தவளின்          உதடுகள் மெலிதாய் புன்னகைக்க, தானும் புன்னகைத்துவிட்டு அவளை இன்னும் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கடந்த காலத்தில் மூழ்கினான்.

நிச்சயதார்த்தம் முடிந்து அந்த வார இறுதியில் அவன் அமெரிக்கா திரும்பி வர, பிரிய மனமில்லாமல் கண்கள் குளமாக காவ்யாவும் அம்மாவும் அழுதது இன்னும் அவன் கண்ணுக்குள் இருக்கிறது.  

அம்மாவிற்கு மொத்த குடும்பமும் ஆறுதல் சொல்ல, காவ்யா, வசந்தா அளவிற்கு கண்ணீரையும் வெளிப்படுத்த முடியாமல் தவியாய் தவித்தது அவனுக்கு மட்டுமே புரிந்து அவன் மனதை பிசைந்தது. அம்மாவை கட்டிக்கொண்டு ஆறுதல் சொன்னவன் கண்களாலேயே அவளுக்கு விடை கொடுத்தான்.

எப்போதும் அவன் கிளம்பும்போது அம்மா அழுவது அவனுக்கு கவலையளித்தாலும் அப்பா இருக்கிறார் பார்த்துக்கொள்வார் என்பதாலும், நண்பர்கள் மற்றும் அமெரிக்க வாழ்க்கை என்று மனமெல்லாம் பரபரப்போடு இருக்குமாதலால் அவன் என்றும் இத்தனை கலங்கியதில்லை.

ஆனால் இந்த முறை அவனை அமெரிக்கா வாசம் ஈர்க்கவில்லை.. காவ்யா அருகில் இல்லாத அமெரிக்கா கூட அவனுக்கு பாலைவனமாகத்தான் இருக்குமென துவண்டான்.. அவளை பிரிந்து செல்வது இதயத்தை யாரோ பிரித்து எடுப்பதை போன்றதொரு வலியை கொடுத்தது அரவிந்துக்கு.

அதுவும் அந்த பத்து பதினைந்து நாட்களில் இருவரும் மனதளவில் மிகவும் நெருக்கமாய் அன்பை பகிர்ந்து கொண்டதாலும் அவள் தனக்கே உரிமையானவள் என்று முடிவானதாலும்  பிரிவு மிகவும் கொடுமையாகத்தான் இருந்தது.. அந்த பதினெட்டு நேர பயணமும் அவளது நினைவுகளிலேயே கழிந்தது.

அதன் பிறகான நாட்களில் அவனுக்கு வேலைச்சுமை மூச்சுவாங்ககூட நேரமில்லாமல் போனாலும் ஒருநாளும் அவளை அழைத்து பேச மறக்க மாட்டான். சிலசமயம் மகிழ்ச்சியாய் சிலசமயம் கலங்கிய கண்களுமாக பேசுபவளுக்கு ஏற்றாற்போல் சிரித்தும் கொஞ்சியும் கெஞ்சியும் பேசுபவனை நினைத்து தனக்குள்ளே ரசித்து சிரித்துக்கொள்வாள் காவ்யா.

கிடைக்கும் நேரங்களில்லெல்லாம் வீடியோ கால்களும் எழுந்ததும் தூங்கப்போகும்போதும் அவளை அழைத்து பேசுவதும் என்று இரண்டு மாதங்கள் ஓடியே விட்டன.

ஒருவழியாக அவனுடைய ப்ராஜெக்ட் பிளான் மற்றும் ப்ராஜெக்ட் ரிகோயர்மெண்ட்ஸ் அனைத்தையும் விவேக்கிற்கு விளக்கி முடித்தவன் ரகுவிடம் அன்றைய ஒன் ஆன் ஒன் மீட்டிங்கில் அனைத்தையும் ரிப்போர்ட் செய்துவிட்டு ஊருக்கு கிளம்புவதை பற்றி பேசவேண்டும் என்று நினைத்தான்.

அந்த பெரிய ஆபீஸ் ரூமின் கதவை தட்டி "மே ஐ கம் இன்?" என்று சொல்லி ரகு  "கம் இன் " என்றதும் உள்ளே சென்றவன் அங்கே ரகுவின் மேனேஜர் டாமும் இருப்பதை பார்த்து "ஹாய் டாம்" என்று கைகளை குலுக்கி சிநேகமாய் சிரித்தான்.

"Hey young man, congratulations !  Raghu said you got engaged " என்று அவனை வாழ்த்தியவருக்கு "Thanks Tom" என்றான் சிரித்துக்கொண்டே.  "OK you guys carry on " என்று அவர் எழுந்து சென்றதும்  சற்றே தயக்கமாக ரகு ஆரம்பித்தான்.

 

"அரவிந்த்.. டாமும் அவரோட பாஸ் ஸ்டெபானும் GCT ப்ராஜெக்ட்டை நீ லீட் பண்ணும்னு நினைக்கிறாங்க.. உனக்கே தெரியும் நீ இப்போ விவேக்குக்கு KT குடுத்தது மினி ஸ்கேல் ப்ராஜெக்ட் தான்.. அதுக்கே அவன் திணறிக்கிட்டு இருக்கான்.. என்னதான் hardwoker ஆனாலும் அவனோட communication skills பத்தி உனக்கே தெரியும் .. அதுவுமில்லாம GCT இன்னும் பெரிய ப்ராஜெக்ட்.. கண்டிப்பா அவனால handle பண்ண முடியாது..” என்று இழுத்ததும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தவனாய் "ரகு.. அது வந்து மேரேஜ்க்கு அப்பறம் நாங்க இண்டியால தான் இருப்போம்ன்னு காவ்யாகிட்ட சொல்லியிருக்கேன்.. அதுவில்லாம அவ வீட்டோட ரொம்ப attached. அதான் யோசிக்கிறேன்..கவுதம் இருக்கானே.. அவனும் onsight க்கு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கான்.. அவன்கிட்ட பேசி பாக்கலாமா " என்றான்.

சிரித்துக்கொண்டே ரகு "அரவிந்த், சில விஷயங்கள் நாம கிளையண்ட்டுக்கு சஜஸ்ட் பண்ண முடியாது.. They are very much impressed with your work. அதோட the way you deal with offshore and your communication skills எல்லாமே அவங்களுக்கு பிடிச்சிருக்கு..  இந்த Opportunity  இந்த வயசுல எல்லாருக்கும் கிடைக்காது.. நல்லா யோசிச்சு சொல்லு.. என்ன கேட்டா, I would say you should take this offer.. வீட்ல பேசு.. காவ்யாகிட்ட டிஸ்கஸ் பண்ணு.. just two more years தான்.. one month லீவு எடுத்துக்கோ.. கல்யாணம் பண்ணிட்டு அவளையும் கூட்டிட்டு வந்துரு.. அவளோட விசாக்கும் arrange பண்றேன்.. யோசிச்சு இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு அப்டேட் பண்ணு" என்று முடித்தான்.

ரகு அவனுக்கு மேனேஜர் மட்டுமல்லாமல் ஒரு மூத்த சகோதரன் போல் எப்போதும் அவனது நலவிரும்பியாக இருந்திருக்கிறான். எனவே உடனடியாக மறுக்காமல் இரண்டு நாட்களில் சொல்வதாக சொல்லிவிட்டு எழுந்தான்.

முதலில் காவ்யாவைதான் கூப்பிட்டு ரகு சொன்னதை அப்படியே சொன்னான். முதல் கேள்வியாக அவனிடம் "அத்தான், உங்களுக்கு என்ன தோணுது..? "என்றாள். "எனக்கு ஒண்ணும் புரியல காவ்யா.. இது என்னோட கேரியர்ல எனக்கு கிடைச்ச  பெரிய காம்பிளிமெண்ட் தான்.. ஆனா நான் இத அக்ஸ்ப்ட் பண்ணா ஒண்ணு நீ என்ன பிரிஞ்சி இருக்கணும் .. இல்ல நம்ம familya பிரிஞ்சி இருக்கணும்.. இது ரெண்டுமே உனக்கு கஷ்டம்ன்னு எனக்கு தெரியும்.. சோ எனக்கு இத அக்ஸ்ப்ட் பண்ண வேணாம்னு தான் தோணுது.. நாம ஏற்கனவே பிளான் பண்ண மாதிரி நான் இண்டியா வந்ததும் நம்ம மேரேஜை முடிச்சிட்டு சென்னைலயே இருக்கலாம்னு தோணுது " என்றான் யோசனையாய்.

சட்டென்று தெளிவானவளாய்  " இல்ல அத்தான், உங்களோட வளர்ச்சிக்கு நான் எப்பவும் துணையாதான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.. என்னால உங்க கேரியர் கெடக்கூடாது அத்தான்.. ரகு அண்ணா சொன்ன மாதிரி இந்த Opportunity உங்களோட ஹார்ட் ஒர்க்குக்கும் டெடிகேஷன்க்கும் கெடச்சிருக்குற கிப்ட்.. என்னால அது உங்களுக்கு கிடைக்காம போகக்கூடாது.. ஆனா என்னால உங்கள பிரிஞ்சி ரொம்ப நாள் இருக்கவும் முடியாது.. அதனால நம்ம கல்யாணம் முடிஞ்சி நானும் உங்களோட வந்துடறேன்.. நீங்க என் பக்கத்துல இருந்தா வீட்ல எல்லாரும் என் கூட இருக்குற மாதிரி.. ஆனா எல்லாரும் இருந்தும் நீங்க இல்லன்னா எனக்கு எதோ வெறுமையா இருக்கு அத்தான்" என்று அவள் மனதிலிருந்து வந்த வார்த்தைகள் அவன் உயிரை உணர்வை ஆட்டிப்படைத்தன.

மறுநாளே ரகுவிடம் சம்மதம் என சொல்லி அடுத்த இரண்டு வாரங்களிலேயே இந்தியாவுக்கு கிளம்பினான். ஏற்கனவே வீட்டில் பெரியவர்களிடம் சொல்லி திருமண ஏற்பாடுகளையும் ஆரம்பிக்க சொல்லியிருந்தான். நடுநடுவே சென்னை ஆபிசில் வேலை சிலநாட்கள் work from home என நாட்கள் கழிந்தன. மூன்றே மாதங்களில் திருமணம் முடிந்து, பத்து நாட்கள் மொரீஷியஸுல் தேனிலவும் முடித்து அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவிற்கும் கிளம்பி வந்தாகி விட்டது.

இத்தனை பரபரப்பிலும் இருவருக்கும் திருமண வாழ்க்கை தேனாய் தித்தித்தது..உயிரும் உடலும் ஒன்றாகி சிந்தையும் செயலும் கலந்து உன்னுள் நான் என்னுள் நீயென இணைபிரியா பேரின்ப பெருவெள்ளத்தில் மூழ்கினர். திருமண வாழ்வில் அவளது அன்பு அவனை மெய்சிலிர்க்க வைக்க அவனது அன்போ அவளை உலகையே மறக்க செய்தது.

ன்னும் குழந்தையாய் தூங்கிக்கொண்டிருந்தவளை மறுபடியும் முத்தமிட்டு, கலைந்திருந்த கூந்தலை சரிப்படுத்தி தள்ளி படுக்க வைத்தவன், அவளுக்கு கம்போர்ட்டரை நன்கு போர்த்திவிட்டு  எழுந்தான்.

பாத்ரூமிலிருந்து ரிஃப்ரெஷ் ஆகி, கிச்சனுக்குள் சென்றவன்  மைக்ரோவேவ் அவனில் பாலை காய்ச்சி இருவருக்கும் காப்பி கலந்து கொண்டிருந்தான். அவன் போடும் காபி என்றால் அவளுக்கு கொள்ளை பிரியம்.. இங்கு வந்த  மூன்று நாட்களில்  அவன் போடும் காபியை ரசித்து குடித்தவள், அவன் செய்யும் ஒவ்வொரு சமையலையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாள்.. அதுவும் அவளை எதுவும் செய்ய விடமால் உட்கார வைத்துவிட்டு அவன் செய்து கொடுத்த காரசாரமான பேச்சுலர் சமையலை புகழ்ந்து தள்ளினாள்.

நேற்றுவரை ஜெட்லாக் அவர்களை பாடாய்படுத்த நேரம் காலம் தெரியாமல் தூங்கவும் பசிக்கும் நேரத்தில் மட்டும் சமைத்து சாப்பிடவும் எனவும் நாட்கள் கடந்தன.  அன்று சனிக்கிழமை.. அந்த வார திங்கட்கிழமை அரவிந்த் புது ப்ராஜெக்ட்டில் join செய்வதாக இருந்தது. அன்று ஓரளவு அவனுக்கு ஜெட்லாக் சரியாக, இன்று அவளை வெளியில் அழைத்து செல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டே காபியை கலந்து முடித்தான்.

சட்டென்று மிகவும் அருகில் அவளது facewash-ன் வாசம் வந்தும் தெரியாதது போல சிரித்துக்கொண்டு திரும்பாமலே இருந்தவனை, "ஹாய் அத்தான்.. குட் மார்னிங்!" என்று பின்னாலிருந்து கட்டிக்கொண்டாள் காவ்யா.

"ஹாய் பொண்டாட்டி.. குட் மார்னிங்.. " என்றபடியே திரும்பி தன்னை அனைத்தவளை தானும் அணைத்துக்கொண்டு இதழில் மெல்லிய முத்தத்தை பதித்தவன் "என்னடா.. எழுந்திட்டயா.. நைட் நாம தூங்க லேட் ஆச்சுல்ல. சோ நீ டயர்டா இருப்பன்னு காபி போட்டு வந்து எழுப்பலாம்னு நெனச்சேன் " என்று கண்ணடித்தபடியே சொன்னவனை பார்த்து வெட்கத்தோடு சிரித்தவளின் கன்னங்கள் குங்குமமாய் சிவந்தன.  அவள் முகத்தை குனிந்து பார்த்து ரசித்தவன் " இதோ உன்னோட favorite ஸ்டாராங் காபி ரெடி..” என்று ஒரு காபி கப்பை அவள் கைகளில் கொடுத்தான்.

முகத்தில் சந்தோஷமும் மனதில் பொங்கிய அவன் மீதான காதலுமாய் ஒரு வாய் காபியை பருகியவளின் மனம் பல்லாயிரக்கனான மைல்களுக்கு அப்பால் இருந்த அம்மாவையும் அவள் கொடுக்கும் இதே சுவையுள்ள காபியையும் நினைக்க,  கண்கள் சற்றே கலங்கின.

34 comments:

  1. Wow.... Sema start... Waiting....

    ReplyDelete
  2. Wow akka beautiful start. Ovvoru line um kannu munnadi varudhu. Love and care❤️❤️ 🥰 wonderful narration akka❤️👏👌

    ReplyDelete
  3. Semma start dear .... finally Aravind and Kavya va thirupi parkiraen thank you...

    ReplyDelete
  4. Wow very nice dr starting episode ey sema nerala pakara mathiri iruku ❤️❤️ lovely feel

    ReplyDelete
  5. Nice start. ����

    ReplyDelete
  6. Super Kanchana!! Awesome start 👏🏼👏🏼

    ReplyDelete

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...