எதற்காக மோனா அத்தான் எண்ணுக்கு அழைக்கிறாள்
என்ற சஞ்சலத்துடன் அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று காவ்யா யோசித்துக்கொண்டிருக்கும்
போதே அழைப்பு நின்றுவிட்டிருந்தது.
எத்தனை அழகாய் எத்தனை உண்மையாய் தன்
வாழ்க்கையில் சந்தித்த பெண்களை பற்றியும், தன்மீதுள்ள உண்மையான காதலைப்பற்றியும் தாயிடம்
அனைத்தையும் சொல்லும் குழந்தைபோல சொன்னவரை பற்றி இன்னமும் கவலைகொள்ளும் தன் மனதை கண்டித்துவிட்டு,
அத்தான் வந்ததும் மோனா அழைத்ததை பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தவளாக தன் போனை எடுத்து
வாட்ஸாப்ப்க்கு சென்று மெசேஜ்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளது தோழிகளிடமிருந்தும் மித்ராவிடமிருந்தும்
வந்தவற்றை பார்த்துக்கொண்டே வந்தவள், பவித்ராவிடமிருந்து வந்திருந்த மெசேஜை பார்த்ததும்
சந்தோஷத்தில் பூரித்துப்போனாள்.
"Hai காவ்யா..I hope you
and Arvind are doing good.. ஒரு சந்தோஷமான நியூஸ்..I am pregnant.. in 6th
week now.. இன்னைக்குத்தான் டாக்டர் confirm பண்ணாங்க .. உனக்குத்தான் மொதல்ல சொல்லணும்ன்னு நெனச்சேன்..
அம்மாகிட்ட கூட இனிமேதான் சொல்லப்போறேன்.. பிரீயா இருக்கிறப்போ கால் பண்ணு” என்ற அவளின்
மெசேஜை மனதில் நெகிழ்ச்சியோடும் முகத்தில்
புன்னகையோடும் பார்த்துக்கொண்டிருந்தவளை,
"wow!! என் ஏன்ஜெல் இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா
இருக்கே " என்றவாறே கிச்சனுக்குள் நுழைந்த
அரவிந்த், அதே வேகத்திலேயே அவளை இழுத்து அணைக்க, அவனது அணைப்பும், அவளுக்கு மிகவும்
பிடித்த அவனது perfume வாசனையும் அவளை மயக்க,
சுதாரித்துக்கொண்டு தன்னிலைக்கு வந்தவள்,
"அத்தான்.. குளிச்சிட்டு இனிமே
நேரா சாமி கும்பிட்டுதான் மத்த வேலையெல்லாம் .. வாங்க" என்று அவனை பூஜை அறைக்கு
இழுத்து சென்றாள்.
பூனைக்குட்டியாய் அவளோடு சென்றவன்
அவளை ரசித்துக்கொண்டே நின்றிருக்க, விளக்கின்
திரியை தூண்டி விட்டபடியே "ஹ்ம்.. சாமி கும்பிடுங்க அத்தான்" என்றதும் சிரித்தபடியே கையெடுத்து கடவுளை வணங்கிவிட்டு விளக்கை தொட்டு
கும்பிட்டான்.
அவனை ஆசையாய் பார்த்தவாறே "அத்தான்..
நீங்க வரப்போ நான் ஏன் சிரிச்சிட்டு இருந்தேன் தெரியுமா? பவித்ரா இல்ல .. அவங்க மெசேஜ்
பண்ணியிருந்தாங்க..அவங்க இப்போ pregnent ஆ இருக்காங்களாம்.. இன்னைக்குத்தான்
confirm ஆச்சாம்" கண்களில் மகிழ்ச்சியோடு
நாணமும் கலந்து சொன்னவளை அன்பொழுக பார்த்தவன், அடுத்தவரின் சந்தோஷத்திலும் எத்தனை சந்தோசப்படுகிறாள்
என்று அவளை நினைத்து பெருமை பட்டவாறே “wow
really great newsடா.. ரொம்ப ஹாப்பியா இருக்கு.. பிரேம் வீட்ல எல்லாருக்கும் பயங்கர
ஹாப்பியா இருக்கும்ல.. நம்ம வீட்ல கூட எல்லாரும் ரொம்ப சந்தோசபடுவாங்க..
" என்றான்.
"ஆமா அத்தான்.. பவித்ரா இன்னொன்னும்
சொன்னாங்க.. இந்த ஹாப்பி நியூஸ்ச மொதல்ல நம்மகிட்டேதான் சொல்லணும்னு நினைச்சாங்களாம்..
பெரியம்மாகிட்ட கூட இனிமேதான் சொல்ல போறாங்களாம்.. பவித்ரா நெறய change ஆகிட்டாங்க..
இல்ல அத்தான் " என்றாள்.
"ஹ்ம்ம் அவளுக்கு உன்ன ரொம்ப
பிடிச்சி போய்டிச்சி காவ்யா.. அவ நல்லா இருக்கணும்னு நீ ஆசைப்பட்ட இல்ல? அத நல்லா புரிஞ்சிகிட்டா.. நானும் அப்பாவும் கூட அத்தையும் பவித்ராவும் இப்டித்தான்னு
இரிடேட் ஆகிட்டோம்.. ஆனா அம்மாவும் நீயும் கிரேட்.. அவங்க என்ன பண்ணாலும் பொறுத்துகிட்டு
அவங்களுக்கு நல்லதே பண்ணீங்கல்ல..so she was moved.. அதைவிட ஆச்சர்யம் அத்தை மாறினதுதான்..”
என்றான் மனநிறைவோடு.
"ஹ்ம்ம்.. சரி அத்தான் வாங்க
சாப்பிடலாம்.. சாப்பிட்டுட்டு பவித்ராவுக்கு
அப்பறம் அத்தை மாமாவுக்கும் கால் பண்ணலாம். நைட் அம்மா அப்பாட்ட பேசலாம்.. அப்பா ஏர்லி
மர்னிங் தான் வீட்ல இருப்பாரு.." என்று சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு ஹ்ம்ம் கொட்டியவாறே
ஏதோ யோசனையில் இருந்தான் அரவிந்த். "என்ன
அத்தான்.. என்ன யோசிக்கிறீங்க?" என்று தட்டில் சர்க்கரைப்பொங்கலை பரிமாறியவளை
காதலுடன் பார்த்தவன் "காவ்யா, பவித்ரா
conceive ஆனதுக்கே நாம இவ்ளோ சந்தோசப்படறோமே.. நமக்குன்னு வந்தா எப்படி இருக்கும்..?"
என்று கண்களில் சந்தோசம் மின்ன கேட்டவனை கண்கள் சட்டென்று கலங்க பார்த்தவள் "அந்த
நாளுக்காக நா காத்திருக்கேன் அத்தான்" என்றாள்.
"சாரி டா என்னால தான் நமக்கு
இன்னும் அந்த சந்தோசம் கிடைக்கல இல்ல.. இப்போகூட நீ சொன்னா நம்ம முடிவை மாத்திக்கலாம்டா
" என்றான் காதலொழுக.
அரவிந்த் திருமணமான அன்று இரவே அவளிடம்
குழந்தை பற்றி பேச்சை எடுத்திருந்தான். "காவ்யா, நாம ரெண்டு பேரும் எத்தனை ஆசையோட
எத்தனை காதலோடு நம்ம வாழ்க்கைய ஆரம்பிச்சிருக்கோம்.. கொஞ்ச வருசத்துக்கு லைப் எ என்ஜாய்
பண்ணுவோம்.. நெறய ட்ராவல் பண்ணுவோம்.. திகட்ட திகட்ட லவ் பண்ணுவோம்.. அதுக்கப்பறம்
குழந்தை பெத்துக்குவோம்.. நம்ம குழந்தைக்கு நம்ம நல்ல பேரெண்ட்ஸா இருக்கணும்.. அதுக்கு நாம பிரிப்பர் ஆகணும்.. அதுவுமில்லாம நீ
சின்ன பொண்ணு காவ்யா.. இப்பவே உனக்கு அவ்ளோ பெரிய ரெஸ்பான்சிபிலிட்டி வேணாம்.. என்னதான்
நான் கூட இருந்தாலும் அந்த வலியும் வேதனையும் நீதானே படணும்.. அதை நெனச்சாலே எனக்கு
கஷ்டமா இருக்கு " என்று நிறுத்தியவன் சட்டென்று "இதெல்லாம் நான் நினைக்கறது..
பட் உனக்கு பிடிக்கலைன்னா இந்த பிளானிங் எல்லாம் வேணாம்" என்றான்.
கணவனின் அன்பில் உருகியவள் அவன் நெஞ்சில்
சாய்ந்தவாறே, "அத்தான் நீங்க எது சொன்னாலும் அது நம்ம நல்லதுக்குதான் இருக்கும்..
என்னைவிட உங்களுக்குதான் குழந்தைங்கனா ரொம்ப பிடிக்கும்.. நீங்க எப்போ சொல்றீங்களோ
அப்பவே பெத்துக்குவோம். எனக்கு குழந்தையை விட நீங்க தான் அத்தான் முக்கியம்" என்றவளை
உச்சி முகர்ந்து முத்தமிட்டான்.
அந்த நாளை நினைவு கூர்ந்தவள்
"அத்தான் அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன்.. நம்ம அன்புக்கு அடையாளமா
வரபோற அந்த குட்டி ஜீவனுக்காக நான் காத்திட்டு இருக்கேன்.. ஆனா அது நீங்க சொன்ன மாதிரியே
கொஞ்ச வருஷம் கழிச்சி வரட்டும்.. இப்போதைக்கு உங்கள கவனிச்சிக்கறதும் உங்கள என் உயிருக்குயிரா
நேசிக்கறது மட்டும் தான் செய்யப்போறேன்.. அதுக்கு யாரும் போட்டிக்கு வரக்கூடாது.. நம்ம
குழந்தைகூட " என்று கண்களை சிமிட்டி அழகாய் சிரித்தாள் காவ்யா.
தானும் சிரித்தபடியே, சக்கரை பொங்கலை
அவளுக்கும் ஊட்டிவிட்டுக்கொண்டே தானும் சாப்பிட்டான் அரவிந்தன் மனம் முழுதும் சந்தோசமாய்.
"எப்படி இருக்கு அத்தான்? இன்னிக்குத்தான்
first time பண்ணிருக்கேன்" என்றாள் கண்கள் படபடக்க.
"ரொம்ப நல்லா இருக்கு காவ்யா..
actually அம்மா பண்றதைவிட நல்லா இருக்கு.. " என்று சிரித்தவன் "அம்மா பாவம்
இல்ல காவ்யா.. உன்ன கஷ்டப்படுத்தினமாதிரி அம்மாவையும் ரொம்ப படுத்திட்டேன்.. பாவம்
எப்போ போன்ல பேசுனாலும் கல்யாணம் பத்திதான் பேசுவாங்க.. நான் அவங்களுக்கு சரியான பதிலே
சொல்ல மாட்டேன்.. கண்டிப்பா நான் வேற யாரையோ லவ் பண்ணறேன்னு
நெனச்சிருப்பாங்க.. அப்படி ஏதாவது இருந்திருந்தா அவங்க ஆசையை விட, உன்ன பத்தி நல்லா
புரிஞ்சிதால , நீ கஷ்டப்படுவீயேன்னுதான் பயந்திருப்பாங்க.. உன்மேல அவங்களுக்கு இருக்கற
பாசம் இருக்கே.. அப்பா.. உன்கிட்ட இருந்து போன் வந்தாலே அவ்ளோ சந்தோசப்படுவாங்க"
என்றான்.
"ஹ்ம்ம் ஆமா அத்தான்.. ஒவ்வொரு
டைமும் வீட்டுக்கு வரப்போ என்னென்ன வாங்கிட்டு வருவாங்க தெரியுமா.. ஏதாவது புதுசா டிவில
பாத்தாங்கன்னா ஒடனே எனக்கும் மித்ராவுக்கும் வாங்கிட்டு வந்துருவாங்க.. புதுசா குர்தி
வந்தாலும் சரி புதுசா சாரி மாடல் வந்தாலும் சரி .. அதுதவிர பர்த்டேக்கு நகை, புது போன்
இப்படி ஏதாவது..அம்மா கூட சொல்லுவாங்க .. ஏன் இப்படி செலவு பண்றேன்னு.. இந்த மித்ரா
இல்ல ஏதாவது வேணும்னா சித்திகிட்ட கேப்பா அவங்க நோ சொல்லிட்டா நேரா அத்தைக்கு கால்
பண்ணி கேட்டுருவா.. மறுநாளே வாங்கிட்டு வந்துருவாங்க.. அண்ணன்ங்க குடும்பம்னா உயிர்
அவங்களுக்கு" என்று காவ்யாவும் அத்தையை மெச்சிக்கொண்டாள்.
குடும்பத்தினரை பற்றி பேசிக்கொண்டே
சாப்பிட்டு முடித்தவர்கள், மறுநாள் அரவிந்தன் வேலையில் சேரவேண்டும் என்பதால் அதற்கான
ஏற்பாடுகளை செய்துவிட்டு, மதியத்திற்கு மேல் ஷாப்பிங்கும் மாலையில் அருகிலுள்ள லேக்குக்கும்
செல்லலாம் என்று முடிவு செய்தனர்.
லேப்டாப்பை ஆன் செய்து பவித்ராவுக்கு
வீடியோ கால் செய்தவர்கள் அவளிடமும் அவள் குடும்பத்தாரிடமும் பேசினர். பிரேம் முகமெல்லாம்
சிரிப்பாக இவர்களிடம் "உங்க ரெண்டு பேருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்..உங்களை
பவி மீட் பண்ணலன்னா எங்க லைப் வேற மாதிரி இருந்திருக்கும்" என்றான் உணர்ச்சிபூர்வமாய்.
"அண்ணா.. பழசெல்லாம் விடுங்க.. பவித்ராவை நல்லா பாத்துக்கோங்க.. நாங்க பிரே பண்ணிக்கறோம்..
உங்க ஜூனியர்அ பார்க்க நாங்க வைட்டிங்" என்றாள் காவ்யா.
பவித்ரா "காவ்யா எங்களுக்கும்
குட்டி காவ்யா இல்ல குட்டி அரவிந்த் பாக்கணும்ன்னு ஆசையா இருக்கு.. நீங்களும் சீக்கிரம்
குட் நியூஸ் சொல்லுங்க" என்று அவளை கலாய்க்க சிரித்துக்கொண்டாள் காவ்யா.
நால்வரும் கேலியும் கிண்டலுமாய் பேசிக்கொள்ள
நேரம் போனதே தெரியவில்லை. ஒருவழியாக பேசிமுடித்தவர்கள் வசந்தாவையும் அழைத்து பேசினர்.
மகனையும் மருமகளையும் சேர்த்து பார்த்தவள் கண்கள் ஆனந்தத்தில் கலங்க, சுகுமாரன் மகனிடம்
"இந்த தாய்குலத்துக்கு சோகம் வந்தாலும் அழுகைதான்.. சந்தோசம் வந்தாலும் அழுகைதான்பா
" என்று கலாய்க்க கணவனை முறைத்தவள் "அது உங்களுக்கு புரியாதுங்க.. என் மகனையும்
மருமகளையும் இப்படி பார்க்கறது எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா.. ஒரு ஆறு மாசத்துக்கு
முன்னாடிகூட இதெல்லாம் நடக்குமான்னு நமக்கு தெரியாது.. எல்லாம் நான் நினைச்ச படி நல்ல
படியா முடிஞ்ச சந்தோஷத்துல நான் இருக்கேன்.. " என்றாள்.
அத்தையை பார்த்து பாசத்துடன்
"அத்தை, உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நீங்க நினைச்சதெல்லாம் கண்டிப்பா நடக்கும்..
நான் உங்கள மாதிரியே அத்தானை நல்லபடியா கவனிச்சிக்குறேன்.. நீங்க நிம்மதியா மாமாவை
பாத்துகிட்டு உங்க உடம்ப பாத்துகிட்டு சந்தோசமா இருங்க " என்றாள் கனிவாய்.
"சரிடா.. நீ என்னைவிட அவனை நல்லா பாத்துக்குவ..
எனக்கு தெரியும்டா.. என் பயமெல்லாம் நீ தனியா அங்க கஷ்டபடுவியேன்னுதான்.. இங்க எல்லாத்துக்கும்
வேலையாள் இருந்தாங்க.. உன்ன ராஜாத்தி மாதிரி வச்சிருப்போம்.. அங்க எல்லா வேலையும் நீங்க
தான செய்யணும்" என்றாள்.
முகத்தில் பொய்யான கோபத்துடன் அரவிந்த்
" அம்மா இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. நாலு வருஷமா நானே சமைச்சி நானே தனியா கஷ்டப்பட்டுட்டு
இருந்தேன்.. அப்போல்லாம் இந்தமாதிரி கவலைப்படாம இப்போ மருமகளுக்கு மட்டும் கவலைப்படுற"
என்றான்.
"அது ஏன்னா நீ என் பையன்.. என்
பையன் கஷ்டப்படலாம் .. ஆனா வள்ளியோட புள்ள கஷ்டப்படக்கூடாதுப்பா.. அவளுக்கு நான் வாக்கு
கொடுத்திருக்கேன்.. அவ குழந்தையை நாங்கெல்லாம் சேர்ந்து நல்லபடியா வளப்போம்னு"
என்று பழைய நினைவுகளில் மூழ்கியபடியே வசந்தா சொல்ல, காவ்யாவின் கண்கள் எந்நேரமும் கலங்கலாம்
என்று நினைத்தவன் அவள் தலையை பக்கவாட்டில் தன்னோடு சாய்த்துக்கொண்டு அம்மாவிடம்
"அம்மா.. கவலைப்படாத.. நீ கொடுத்த வாக்கு எப்பவும் பொய்யாகாது.. நான் இவளை நல்லபடியா
பாத்துப்பேன்.. சரியா ? நீ உடம்ப பாத்துக்கோ.. கொஞ்சநாள் தாத்தா வீட்ல போய் இரும்மா..
" என்று சொல்லி இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்.
சட்டென்று நினைவு வந்தவளாக
"சாரி அத்தான்.. சொல்லவே மறந்துட்டேன்..நீங்க குளிச்சிட்டு இருந்தப்ப மோனாகிட்ட
இருந்து கால் வந்தது.. நீங்க வந்ததும் சொல்லணும்னு நெனச்சேன்.. பட் பவித்ரா மெசேஜை
பார்த்ததும் அப்படியே மறந்துட்டேன்" என்று அவனது போனை கொண்டு வந்து கொடுத்தாள்.
மோனாவைப்பற்றி எல்லாம் தெரிந்தும்
அவளது போன் கால் என்று தெரிந்தும் தன்னிடம் வந்து சொல்கிறாள் என்றால் தன் மீது எத்தனை
நம்பிக்கை அவளுக்கு என்று அவளை நினைத்து பிரமித்தவனாய் "மோனாவோட பழைய நம்பர் தான்
என்கிட்ட இருந்திச்சி ..அதை டெலிட் பண்ணிட்டேனா இல்ல பண்ணலயாண்ணே எனக்கு ஞாபகம் இல்ல..
இப்போ எதுக்கு கால் பண்ணறான்னு தெரியலையே.. விடு பாத்துப்போம்.." என்றவனை
"இல்ல அத்தான்.. நான் உங்களுக்கு அட்வைஸ் பண்றேன்னு நினைக்காதீங்க.. ப்ளீஸ் கால்
பண்ணி என்னன்னு கேளுங்க.. அவங்கள எதுக்காகவும் அவாய்ட் பண்ணாதீங்க.. ஒரு கலீக்குக்கு
என்ன மரியாதை தரணுமோ அதை எப்பவும் கொடுங்க.. நார்மலா இருந்தாதான் அவங்களும் நார்மலா
பீல் பண்ணுவாங்க" என்று தயக்கத்துடன் சொன்னவளை மூக்கை பிடித்து கொஞ்சியவாறே
"ஓகே மேடம்.. கால் பண்றேன்" என்றுவிட்டு அதே நம்பரை கால் செய்தான்.
Acho... Enna aaga pogudhu...
ReplyDeleteAiyoo, first twistu in the story, but narration dear is semma dear
ReplyDeleteInteresting ga pooguthu super!!
ReplyDelete