Thursday, October 29, 2020

உன்னிடம் மயங்குகிறேன் - 4

 

விவேக் வீட்டில் சாப்பிட்ட திருப்தியான சாப்பாட்டிலும், அரவிந்தனின் அன்பான நம்பிக்கை தந்த வார்த்தைகளிலும், காலையிலிருந்து வீட்டை ஒழுங்குபடுத்திய களைப்பிலும் காவ்யா படுத்ததும் உறங்கிப்போனாள்.

இன்னும் தூக்கம் வராமல், அவள் தலையை வருடிக்கொடுத்தவாறே  மங்கலான நைட் லாம்பின் வெளிச்சத்திலும் அழகாய் தெரிந்த அவள் முகத்தை ரசித்துக்கொண்டிருந்த அரவிந்த், அவள் பேசிய பேச்சையும் அவளது அழுகையையும் நினைத்து சிரித்துக்கொண்டான்.

இந்த பெண்களுக்கு மட்டும் பொசசிவ்நெஸ் எங்கிருந்ததுதான் வருகிறதோ.. அதுவும் இவளுக்கு கொஞ்சம் அதிகம் தான் என்று எண்ணியவன் காதல் மிகுதியில் சற்றே அழுத்தமாய் அவள் கன்னத்தில் முத்தமிட சட்டென்று விழித்துக்கொண்டவள்   அவனது முத்தத்தை உணர்ந்து "என்ன அத்தான்.. தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க " என்றாள் வெட்கசிரிப்போடு.

"ஹ்ம்ம்..  என் அழகு தேவதையை ரசிச்சிட்டு இருக்கேன்.." என்றவன் "காவ்யா.. தூங்கறப்போகூட நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா?" என்றான் கிசுகிசுப்பாய்..

"அப்படியா.. நான் அவ்ளோ அழகா.. உங்களை சைட் அடிச்சாங்கல்ல அவங்க எல்லாரையும் விட நான் அழகா?" என்று தலையை சாய்த்து அழகாய் அவள் கேட்க,  சிரித்தவாறே அதை ரசித்தவன்  "ஆரம்பிச்சுட்டாயா.. அவங்க என்னை சைட் அடிச்சாலும் நான் இந்த அழகான ராட்சஷியத்தானே சைட் அடிச்சேன்.. சோ எனக்கு அவங்க அழகெல்லாம் கண்ணுக்கு தெரியலையே " என்றான் அவள் மூக்கை பிடித்து கொஞ்சிக்கொண்டே.

"அத்தான்.. ப்ளீஸ் சொல்லுங்க.. உங்க கலீக் மோனா என்னைவிட அழகா இருப்பாங்களா?" என்றாள் கெஞ்சலாக.

மோனாவை பற்றி கேட்டதும் முகத்தில் சிரிப்பு தொலைந்து போக ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து உட்கார்ந்தான். அவனது முகமாற்றத்தை கண்டவள் சற்றே கவலையுடன் தானும் எழுந்து உட்கார்ந்தவாறே "சாரி அத்தான் .. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன்.. தப்பா எடுத்துக்காதீங்க.. நான் இனிமே கேட்கமாட்டேன்" என்றாள்.

அவள் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக்கொண்டவன்  "இல்ல காவ்யா.. உன் மேல எந்த தப்பும் இல்ல.. நான் நெனச்சதுதான் தப்பு.. நீ என்னை அளவுக்கு அதிகமா நேசிக்கறதுனால எதுக்கு தேவை இல்லாம இங்க நடந்ததை சொல்லி உன்னை கஷ்டப்படுத்தணும்னு நெனச்சேன்.. but that is not right thing .. நீ என் காதலி மட்டும் இல்ல .. என் மனைவி.. என்னோட பாஸ்ட் எல்லாத்தையும் நான் உன்கிட்ட கண்டிப்பா ஷேர் பண்ணியே ஆகணும்.. இல்லனா இன்னிக்கு கயல் அக்கா .. நாளைக்கு வேற யாராவதுன்னு உனக்கு யார் மூலமாவோ விஷயம் தெரியறப்போ அது உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தும் .. " என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

என்ன சொல்லபோகிறானோ என்ற பயம் அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிய அதை கவனித்தவன் "காவ்யா நீ பயப்படற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல.. சரியா? ஒண்ணு மட்டும் நீ நல்லா தெரிஞ்சிக்கோ.. எந்த நேரத்திலும் நான் உன்  அத்தானாதான் இருந்திருக்கேன்.. உன் இடத்துல நான் எந்த பொண்ணையும் வச்சதில்ல.. இது எங்கம்மா மேல சத்தியம் " என்றதும் "அத்தான்.. நான் உங்கள நம்புறேன்.. ஏன் சத்தியமெல்லாம் பண்றீங்க? இப்பகூட நீங்க இதெல்லாம் எனக்கு தேவையில்லன்னு நினைசீங்கன்னா சொல்ல வேண்டாம்.. எனக்கு எப்பவும் நீங்க நல்லதுதான்  பண்ணுவீங்க  அத்தான் .. எனக்கு தெரியும். கயல் அக்கா சொன்னதும் எதோ எமோஷனல் ஆகி உங்ககிட்ட கேட்டுட்டேன்.. அது பெரிய தப்பு அத்தான்.. உங்கமேல நான் எவ்ளோ நம்பிக்கையும் மரியாதையும் வச்சிருக்கேன்.. எல்லாத்தையும் ஒரே நிமிசத்துல கெடுத்துட்டேன்.. "என்றவாறே மெலிதாய் தலையில் அடித்துக்கொண்டாள்.

"ஹே காவ்யா.. நீ கேட்டதுதான் சரி.. உனக்கும் எனக்கும் நடுவுல எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது.. உனக்கு என்கிட்ட என்ன கேட்கணும்னு தோணுதோ அத கேட்கலாம். கயல் அக்காக்கு நம்மள பத்தி தெரியாது.. ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் நம்மள பத்தி தெரியும்.. நீ எனக்கு கிடைக்க மாட்டியான்னு பலநாள் தூங்காம தவிச்சவன் நான்.. நம்ம கல்யாணம் ஆனதும் எதோ கிடைக்காத பொக்கிஷம் கிடைச்ச மாதிரி நான் அவ்ளோ சந்தோசமா இருக்கேன்.. அது உனக்கும் தெரியும்.. நீ அழுததுகூட  நான் ஏன் மோனா பத்தி உன்கிட்ட     சொல்லலைன்னு தானே தவிர என்மேல சந்தேகப்பட்டு இல்ல .. அதுவும் எனக்கு தெரியும்" என்றவனின் தோளில் சாய்ந்தவள் " தேங்க்ஸ் அத்தான் என்னை சரியா புரிஞ்சிகிட்டத்துக்கு " என்றாள்.

வசதியாய் அவளை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு "ஓகே .. இப்போ உனக்கு தெரிய வேண்டிய சீக்ரெட்ஸ் எல்லாம் சொல்லிடுறேன். நான் சொன்ன மாதிரி சுமதி பத்தி மொதல்ல சொல்றேன்.. அவ வீடு எங்க பக்கத்து வீடுதானே.. எப்பல்லாம் நான் வீட்ல இருக்கேனா அப்போல்லாம் அம்மாட்ட பேச வரமாதிரி வருவா.. அம்மா பாக்காதப்போ என்னை பாத்து லுக் விடுவா.. நான் டெல்லில படிக்கறபோ ஒரு தடவை லீவ்க்கு வீட்டுக்கு வந்திருந்தேன்.. ஒருநாள் அவளைக்கூப்பிட்டு 'சுமதி, அண்ணனுக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்.. காவ்யாக்கு பர்த்டே வருது.. அவளுக்கு கிப்ட் வாங்கணும்.. நீ வந்து ஒரு மேக்கப் செட் செலக்ட் பண்ணி தரியா' ன்னு கேட்டேன். கடுப்பாகி அதுக்கப்பறம் வீட்டுப்பக்கமே வரமாட்டா.. அதுக்கப்பறம் அவளுக்கு கல்யாணமும் ஆகிடிச்சி.." என்றதும் இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.

"ஹ்ம்ம் அப்பறம் " என்று ஆர்வமாய் கேட்டவளை "ஆர்வத்தை பாரு .." என்று செல்லமாய் தலையில் குட்டியவாறு "அப்பறம் டெல்லில ஒரு பஞ்சாபி பொண்ணு.. பேரு தீப்தி..நாங்க boys girls எல்லாம் கலந்து  ஒரு குரூப்பா friends ஆ இருந்தோம்.. திடீர்னு ஒருநாள் "உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. டேட் பண்ணலாமான்னு" கேட்டா..அவகிட்ட 'சாரி I am committed’ ன்னு  சொன்னேன்.. ரெண்டு நாள் dulla  இருந்தா.. அப்பறம் பத்து பதினைஞ்சி நாள்ல  வேற department பையனை கூட்டிட்டு வந்து this is my boy friend ன்னு சிரிச்சிட்டே சொன்னா.. எனக்கும் நிம்மதியா  இருந்திச்சி..” என்று நிறுத்தியவன் அதே நிம்மதியை அவளது முகத்திலும் கண்டான்.

"அதுக்கப்பறம் MS படிக்கிறப்போ சோபியான்னு ஒரு இத்தாலி பொண்ணு.. ரொம்ப இன்னொசென்ட்.. எனக்கு அவளை பாக்கறபோ உன்னோட இத்தாலி வெர்சன்னு தோணும்.. எப்ப பாத்தாலும் சிரிச்சிட்டே இருப்பா.. எனக்கு அவளை பாத்தா எதோ குழந்தையை பாக்கற மாதிரி தான் தோணும்.. பாவம் டிசம்பர் ஹாலிடேய்ஸ்க்கு அவங்க ஊருக்கு போனவ ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டா.. ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.. கொஞ்ச நாளைக்கப்பறம் அவ கிளோஸ் friend தான் சொன்னா கோர்ஸ் முடியறப்போ என்ன ப்ரொபோஸ்  பண்ண  போறதா சொல்லியிருக்காளாம் “ சற்றே சோகமாய் அவன் சொல்ல காவ்யாவின் கண்கள் கலங்கியிருந்தன.

"பாவம் இல்ல அத்தான் அந்த பொண்ணு.." என்று அவனை இறுக்கிக்கொண்டாள்.

"ஹ்ம்ம்.. அவ மேல எனக்கு லவ் இல்லேன்னாலும் அவ இறந்தது எனக்கு ரொம்ப ஷாக்கிங்ஆ இருந்திச்சி.." என்றவன் "சரி காவ்யா .. ரொம்ப லேட் ஆகுது.. தூங்கலாமா?" என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் "அத்தான் மோனா பத்தி சொல்லவே இல்ல?" என்றாள் தயக்கத்துடன். அவளை பொறுத்தவரை மற்றவர்களை விட மோனா பற்றித்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற பயம் இருந்தது.

ஆழ்ந்த பெருமூச்சுடன் "ஹ்ம்ம்.. இந்த மோனா மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல .. அவங்க எல்லாமே  சின்ன பொண்ணுங்க..  எனக்கு interest  இல்லன்னு தெரிஞ்சதும் விட்டுட்டாங்க..  ஆனா இந்த மோனா ரொம்ப வித்தியாசமானவ. மோனா வாசுதேவன். டெல்லில செட்டில் ஆன தமிழ் குடும்பம். சிவகாமி அத்தை வாங்குன சத்தியதால நான் ரொம்ப மனசு ஒடஞ்சி தான் US ல வந்து இறங்குனேன். அப்போ இந்த டீம் ஏற்கனவே இங்க இருந்திச்சி.. டீம்ல நான்தான் ரொம்ப ஜுனியர்.. ரகு கூட எனக்கு அப்போ ரொம்ப பழக்கம் இல்ல.. friends  யாரும்   இல்லாம உன்கிட்டயும் பேச முடியாம ஒர்க் லோடும்   ரொம்ப இருந்ததால ரொம்பவே  கஷ்டப்பட்டேன்.    இந்த மோனா ஒரு ஆறு மாசம் கழிச்சி  எங்க டெல்லி ஆபீஸ்ல இருந்து இங்க வந்திருந்தா.. ரகு சொன்னதால அவளுக்கு ஜாய்னிங் பார்மாலிட்டீஸ்ல எல்லாம் கூட இருந்து ஹெல்ப் பண்ணேன். பொதுவா எங்க போனாலும் பொண்ணுங்ககிட்ட நான் ரொம்ப பேசறதில்லை. எப்பவும் நீ என் மனசுல இருந்ததாலயும் அம்மாக்கும் நான் உன்னை கல்யாணம் பண்றதுதான் சந்தோஷம்னு  தெரிஞ்சதாலயும் யார்கிட்டயும் ரொம்ப பேசறதில்ல. ஆனா இவகிட்ட அடிக்கடி பேசறமாதிரி நிறெய சிச்சுவேஷன்ஸ் அமைஞ்சது.

அவளுக்கு என்னை பிடிக்க ஆரம்பிச்சதுன்னு நான் எப்போ பீல் பண்ணேனோ அப்பவே உன்னை பத்தி அவகிட்ட சொல்லிட்டு கொஞ்சம் விலக ஆரம்பிச்சுட்டேன்.. ஆனா அவளால அத தாங்க முடியல.. கொஞ்ச நாள் அமைதியா இருந்தவ திடீர்னு ரகு கிட்ட  வந்து ப்ராஜெக்ட் ல இருந்து என்ன ரிலீஸ் பண்ணுங்க.. நான் இந்தியா போறேன்னு சொல்லியிருக்கா.. ரகு திடீர்னு அந்த மாதிரி அனுப்ப    முடியாது  இன்னும் six மந்த்ஸ் இருந்து முடிச்சிட்டு போங்கன்னு சொல்லிட்டாரு.. அப்பறம் ஒருநாள் என்கிட்ட கேன்டீன்ல வச்சி அழுதுகிட்டு  உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நீ இல்லனா நான் செத்துடுவேன்னு சொன்னா.. எனக்கு கோவம்  வந்தாலும் அவளை பாக்க ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.. அதனால திரும்பவும் அவகிட்ட உன்னை பத்தி    விளக்கமா சொன்னேன்.. நான் இல்லன்னா நீயும்  அப்படித்தான்  ஆவேன்னு  சொன்னேன்.. அப்பறம் கோவமா எழுந்து போய்ட்டா.. ரெண்டு நாள் ஆஃபீஸுக்கு வரல.. அடுத்த நாள் நைட் ரகு கிட்ட  இருந்து phone வந்தது.. மோனா suicide    அட்டெம்ப்ட் பண்ணி ஹாஸ்பிடல்ல இருக்கான்னு. எனக்கு ரொம்ப கில்டியா இருந்திச்சி.. நானும் ரகுவும் உடனே ஹாஸ்பிடல் போனோம்.. ரகு வைஃப்பும் வந்தாங்க.. அவங்ககிட்ட எல்லாமே சொல்லியிருப்பா போல.. அப்பறம் அவ டிஸ்சார்ஜ் ஆகி வந்ததும் ரகுவும் அவங்களும் என்னையும் மோனாவையும் கூப்பிட்டு பேசுனாங்க.. நான் பிடிவாதமா காவ்யாவை தவிர யாரையும் யோசிக்க முடியாது .. சாரின்னு சொல்லிட்டேன்.. அப்பறம் ரகு மோனாகிட்ட எடுத்து சொல்லி அவ பேரன்ட்ஸ்கிட்டயும் பேசி அவளை ப்ரொஜெக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ணிட்டாரு. அவளும் ஊருக்கு போய்ட்டா”  என்று நிறுத்தியவன், முகத்தில் கலவரத்துடன் இருந்தவளை "ஹே காவ்யா.. இப்ப ஒண்ணும் ப்ராப்ளேம் இல்ல.. நான் நம்ம என்கேஜ்மெண்ட்க்கு ஊருக்கு வந்தேன்ல..அந்த டைம்ல அவளுக்கு மேரேஜ் ஆகிடிச்சி.. இப்போ 2  வீக்ஸ் முன்னாடி  ஒரு short term ப்ரொஜெக்ட்க்கு இங்க வந்திருக்கா போல.. பட் அவ நியூயார்க் ஆபீஸ்... எனக்கு நியூஜெர்சி ஆபீஸ்.. அதனால எனக்கும் அவளுக்கும் meet பண்ண கூட  அவசியம்   இல்ல.. அதுவில்லாம இப்போ  நிலைமை  வேற.. நமக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.. அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. இதெல்லாம் எதுவும் சொல்லாம கயல் அக்கா மோனா இங்க இருக்கான்னு மட்டும் சொல்லியிருப்பாங்க.. அப்போ உனக்கு கஷ்டமாதான் இருந்திருக்கும்.." என்றவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு “காவ்யா, நானும் நீயும் சேர்றதுக்கு எத்தனை  தடைகள் பாத்தியா.. எல்லாத்தையும்  மீறி நம்ம கல்யாணம் நடந்திருக்கு..இதோட அர்த்தம் நம்ம நல்லபடியா வாழறதுலதான் இருக்கு காவ்யா.. எந்த சூழ்நிலையிலும் நீ எது பண்ணாலும் அது கரெக்ட்ஆ தான்  இருக்குன்னு நான் 100% நம்புறேன் .. எப்பவும் நம்புவேன்.. அதேமாதிரி நீயும் நான் எது பண்ணாலும் அது கரெக்ட் ஆ இருக்கும்னு நம்பு.. உன் நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி நானும் நடந்துப்பேன்.. உனக்கு தெரியாத என் வாழ்க்கையோட பக்கங்களையும் சொல்லிட்டேன்.. இத தவிர வேற எதுவும் இல்ல.. happy ஆ இப்போ"  என்ற ஆசை  கணவனை  அன்போடு  நெற்றில் முத்தமிட்டாள் காவ்யா.

பெண்கள் மயங்கும் பேரழகன் தன் அத்தான் என்பது அவளை   பெருமையடைய செய்தாலும் சற்றே கலக்கத்தையும் தந்தது.. ஆனாலும்  எத்தனை பெண்களை கடந்து வந்தாலும் தன்மீது உள்ள அன்பு துளியும் குறையாமல் தன்னை மட்டும் நேசிப்பவன் மீது காதல் இன்னமும் கூடத்தான் செய்தது அவளுக்கு.

"நீ லக்கி காவ்யா.. உனக்கு இந்த மாதிரி problems வந்தது இல்ல ரைட்? நீ படிச்சது எல்லாம் girls ஸ்கூல்ஸ் ..காலேஜ் கூட பெரியார்  மணியம்மை.. கேர்ள்ஸ் காலேஜ். அப்பறம் திருவிழா ஷாப்பிங் எல்லாம் குடும்பமா போவீங்க.. மாமாங்க ரெண்டு பேரையும் பாத்தாலே பசங்க தெறிச்சி ஓடிருவாங்க.. அதான் பாவம் நீ என்கிட்ட வந்து  மாட்டிக்கிட்ட" என்று சிரித்தவனோடு அவளும் சேர்ந்து சிரித்துக்கொண்டு "இல்ல அத்தான்.. கொஞ்ச நாள் ஹேமாவோட அண்ணன் என்னை சுத்தி சுத்தி வந்திட்டு இருந்தான்.. அவளை காலேஜ்ல ட்ராப் பண்றபோ,  பிக்கப் பண்ண வரப்போ என்னைப்பாத்து ஒரு மாதிரி சிரிப்பான்.. ஒருநாள் அவன்கிட்ட நானும் எங்க அத்தை பையனும் அலைபாயுதே ஸ்டைல்ல வீட்டுக்கு தெரியாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஹேமாக்கு  கூட தெரியாதுன்னு சொன்னேன்.. அரண்டு போய்ட்டான்” என்று பலமாய் சிரித்தவளை "அடிப்பாவி..பாவம் அவன்.. சரியான ஆளு நீ  " என்று தானும் சேர்ந்து சிரித்தான்.

மனதில் உள்ளதை அவளிடம் கொட்டிவிட்ட திருப்தியில் அரவிந்தும் தன் மீது அவனுக்குள்ள பரிசுத்தமான அன்பும் காதலும் தந்த திருப்தியில் காவ்யாவும் மனம்விட்டு பேசி சிரித்து பின்னர் களைத்து பின்னிரவில் உறங்கிப்போயினர்.

 

11 comments:

உன்னிடம் மயங்குகிறேன் - 15

    அரைமணி நேரத்தில் வீடு திரும்பியவன் அவளது முகத்தை நேருக்குநேர் காணும் சக்தியில்லாமல் "காவ்யா.. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்...